‘டியூட்’ படத்​தில் இளை​ய​ராஜா​வின் பாடல்​களை அனு​ம​தி​யின்றி பயன்​படுத்​தி​யிருப்​பது தொடர்​பாக, தனி​யாக வழக்கு தொடரலாம் என இளை​ய​ராஜாவுக்கு உயர் நீதி​மன்​றம் அனு​ம​தி​யளித்​துள்​ளது. பதிப்​புரிமை பெற்ற தனது பாடல்​களைப் பயன்​படுத்தி தனிப்​பட்ட முறை​யில் அதிக வரு​வாய் ஈட்டி வரு​வ​தாகக் கூறி சோனி மியூசிக், எக்கோ ரெக்​கார்​டிங், அமெரிக்​கா​வில் உள்ள ஓரியண்​டல் ரெக்​கார்ட்ஸ் ஆகிய நிறு​வனங்​களுக்கு எதி​ராக இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம்,...
தெலுங்கு சினி​மா​வின் முன்​னணி நடிகர்​களுள் ஒரு​வ​ரான ஜூனியர் என்​டிஆர், ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ படங்​களின் இயக்​குநர் பிர​சாந்த் நீல் இயக்​கும் ‘டி​ராகன்’ படத்​தில் நடிக்​கிறார். அவர் ஜோடி​யாக ருக்​மணி வசந்த் நடிக்​கிறார். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கும் இந்​தப் படத்​தின் முதற்​கட்ட படப்​பிடிப்பு முடிவடைந்​து​விட்​டது. இந்​நிலை​யில் ஜூனியர் என்​டிஆர் நடித்து வெளி​யான ‘தேவ​ரா’, ‘வார் 2’ படங்​கள் எதிர்​பார்த்த வெற்​றியை பெறவில்​லை. இதனால் அடுத்து ஒரு வெற்றி படம் அவசி​யம் என்ற...
விஜய், சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் நவம்பர் 21-ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது. விஜய்யின் பழைய ஹிட் படங்கள் தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. ‘கில்லி’, ‘சச்சின்’ உள்ளிட்ட படங்களின் வரிசையில் ‘ப்ரண்ட்ஸ்’ படமும் இணைந்திருக்கிறது. இப்படத்தினை டிஜிட்டல் முறையில் 4கே தொழில்நுட்பத்தில் மாற்றி, நவம்பர் 21-ம் தேதி வெளியிடவுள்ளார்கள். இதற்காக போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். கடந்த 2001-ம் ஆண்டு மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான படம் ‘ப்ரண்ட்ஸ்’....
பாலிவுட் சினிமாவின் நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியர் தங்கள் மகள் துவாவின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். துவாவின் படம் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இருவரும் தங்கள் மகளின் பெயரை அதிகாரபூர்வமாக துவா படுகோன்...
இந்திய சினிமா பார்த்திராத விஷயத்தை அட்லி உருவாக்கி வருகிறார் என்று ரன்வீர் சிங் புகழாரம் சூட்டியிருக்கிறார். ’சிங் தேசி சைனிஸ்’என்ற சீன உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரப் படம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தில், சிங் நிறுவன ஏஜென்டாக இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலாவும் வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர். இதை ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லி...
 புதிய சிம்பொனி ஒன்றை எழுத இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். லண்டனில் கடந்த மார்ச் 8-ம் தேதி ‘வேலியன்ட்’ என்ற தலைப்​பில் பாரம்​பரிய சிம்​பொனி இசையை அங்குள்ள ஈவென்​டிம் அப்​போலோ அரங்​கில் அரங்​கேற்​றம் செய்​தார் இளையராஜா. உலகின் மிகச் சிறந்த ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் இதை அரங்​கேற்​றி​னார். அவரது இசைக் குறிப்​பு​களை நூற்​றுக்​கணக்​கான கலைஞர்​கள் பல்​வேறு இசைக் கருவி​களில் ஒரே நேரத்​தில் இசைத்​தது பார்​வை​யாளர்​களை பரவசத்​தில் ஆழ்த்​தி​யது. இதன்​மூலம்,...
பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான கோவர்தன் அஸ்ரானி காலமானார். அவருக்கு வயது 84. அவர் அஸ்ரானி என சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார். திங்கட்கிழமை (அக்.20) அன்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். இதை அவரது மேலாளர் உறுதி செய்தார். சினிமா உலகில் சுமார் 5 தசாப்தங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஆறு படங்களை இயக்கி உள்ளார். சுமார் 300-க்கும் மேற்பட்ட...
 “நான் சாதியால் நெருக்கடிக்கு உள்ளான ஒரு ஆள்” என்று மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். ‘பைசன்’ திரையிடப்பட்டு வரும் திரையரங்குகளுக்கு சென்று விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. இதற்காக திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கிற்கு சென்றார்கள். இதில் இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். பார்வையாளர்களுடன் உரையாடிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய சில...
’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, அப்படங்கள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. இதனால் விக்ரமின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால், அடுத்ததாக அறிமுக இயக்குநர் ஒருவரது இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் படத்தினை முடித்துவிட்டு, விஷ்ணு எடவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விக்ரம். இப்படத்தினை வேல்ஸ்...
ஒளி சினி​மா​வின் ஆன்மா எனில், நிழல் அதன் நிசப்​த​மான குரல். அது வெறும் இருளல்ல. ஒரு காட்​சி​யின் உணர்ச்​சி, மனநிலை, தத்​து​வம், கூடவே கதை​யின் மறை​முக​மான அடுக்​கு​களை​யும் வெளிப்​படுத்​தும் சக்தி கொண்​டது. ஒளி கண்​களுக்​குத் தெரியலாம், ஆனால் நிழல் நேராக மனதுடன் பேசுகிறது. சினிமா வரலாற்​றில் பல ஒளிப்​ப​தி​வாளர்​கள் நிழலைப் பயன்​படுத்தி காட்​சிகளை மட்​டும் அழகுபடுத்​தாமல், கதை​யின் உள் உலகை​யும் செதுக்​கி​யுள்​ளனர்​. கே.எஸ். பிரசாத் – மர்மத்தைச் செதுக்கிய நிழல்கள்: ஆரம்​ப​கால...