இந்தியாவின் பாரம்பரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் 80 ஆண்டுகளில், 6 மொழிகளில் 179 படங்களைத் தயாரித்துள்ள இந்நிறுவனத்தில் 6 முதல்வர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இந்நிலையில் புகழ்பெற்ற இந்நிறுவனத்தின் ஒரு படப்பிடிப்பு தளம், ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவில், ஏவிஎம் பாலசுப்பிரமணியன், ஏவிஎம் சரவணனின் மகன் குகன், அருணா குகன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன், நடிகர் மோகன் ராம் ஆகியோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம்...
நடிகர் நாசர் மற்றும் சினிமா ஃபேக்டரி அகாடமியினர் இணைந்து, 2 மேடை நாடகங்களை ஒரே நிகழ்ச்சியாக வழங்குகின்றனர். உலக இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்றான ஹோமரின் ‘ஒடிஸ்ஸி’ மற்றும் ‘12 ஆங்கிரி மென்’ திரைப்படக் கதையைத் தழுவிய ‘மணிகண்டன் கொலை வழக்கு’ ஆகிய நாடகங்கள் வழங்கப்படுகின்றன. நடிப்பு மாணவர்கள் அரங்கேற்றும் இந்த நாடகங்களை தேசிய நாடகப் பள்ளி முன்னாள் மாணவரும், நாடக இயக்குநருமான எஸ். சந்திர மோகன் இயக்கியுள்ளார். சினிமா...
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் மூதாட்டியாக நடித்த படம், ‘தாய் கிழவி’. பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்தில் சிங்கம்புலி, அருள் தாஸ், பால சரவணன், ரேய்ச்சல் ரெபேகா, முத்துக் குமார், முனீஷ் காந்த் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் பிப்.27-ல் வெளியானது. மதுரை பின்னணியில், பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம், திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது. ஓடிடி- யிலும் வரவேற்பைப் பெற்ற...
‘பிக்​பாஸ்’ ராஜு ஜெயமோகன் எழு​தி, இயக்​கி, நடிக்​கும் திரைப்படத்துக்கு ‘ஆல்​மோஸ்ட் நல்​ல​வன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்​ளது. இதில் முக்​கிய​மான கதா​பாத்​திரத்​தில் சத்​ய​ராஜ் நடிக்​கிறார். துஷாரா விஜயன், இமான் அண்​ணாச்​சி, பிக்​பாஸ் தாமரைச் செல்வி, நாடகக் கலைஞர் யாழினி, பிரிதம் சக்​ர​வர்த்தி ஆகியோரும் நடித்​துள்​ளனர். டி.எஸ்.பிரசன்னா ஒளிப்​ப​திவு செய்கிறார். சுதன் சுந்​தரத்​தின் பேஷன் ஸ்டூடியோஸ் ஹெச்​.​வினோத்​தின் ஆஸ்​பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து இப்​படத்​தைத் தயாரிக்​கிறது. இதன் தொடக்​க​விழா பூஜை​யுடன் சென்​னை​யில் நடை​பெற்​றது. படம்...
சினிமா எனக்கு பலரை அறி​முகம் செய்து வைத்​திருக்​கிறது. சினி​மாவுக்கு உள்​ளும் வெளி​யும் ஏராள​மானவர்​கள் எனக்கு பழக்​க​மாகி இருக்​கிறார்​கள். சிலர் என் சினிமா வாழ்க்​கை​யின் ஆரம்​பத்​தில் இருந்து இன்​று​வரை நண்​பர்​களாக தொடர்​கிறார்​கள். சிலர் புதி​தாகப் பழகி குடும்ப நண்​பர்​களாக ஆகி​யிருக்கி றார்​கள். அப்​படி ஆனவர்​களில் ஒரு​வர் ஷபா​னா. நான் படப்​பிடிப்​புக்கு சென்​று​விட்டு வீட்​டுக்கு திரும்​புவதற்கு இரவு ஆகி​விடும். சில நேரம் இரவிலும் படப்​பிடிப்பு இருக்​கும் என்​ப​தால், சின்​னத்​திரை தொடர்​கள் பார்க்​கும் வாய்ப்பு...
அர்​ஜுன் தாஸ் ஹீரோ​வாக நடிக்​கும் படம் ‘சூப்​பர் ஹீரோ’. இதில் தேஜு அஷ்​வினி நாயகி​யாக நடிக்​கிறார். அறி​முக இயக்​குநர் விக்​னேஷ் வேணு கோ​பால் இயக்​கும் இப்​படத்தை சோல்​ஜர்ஸ் பேக்​டரி சார்​பில் சினிஸ் ரெடாக்டட் ஸ்டூடியோஸின் ஷான்ஜன்.ஜி, இணைந்து தயாரித்து உள்ளார். ஹேஷம் அப்​துல் வஹாப் இசையமைத்​துள்​ளார். சத்யா ஒளிப்பதிவு செய்​துள்ள இப்​படத்​தின் முதல் தோற்​றம் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. படம் ​பற்றி இயக்​குநர் விக்​னேஷ் வேணு கோ​பால் கூறும்​போது, “இது எனக்கு...
நடிகரும் இயக்​குநரு​மான பிரதீப் ரங்​க​நாதன் கதை எழுதி தயாரிக்​கும் படத்​தில் மமிதா பைஜு நாயகி​யாக நடிக்​கிறார். நாயகிக்கு முக்​கி​யத்​து​வம் கொண்ட இப்​படத்​தில் அஸ்​வத் மாரி​முத்​து, தெலுங்கு நடிகர் சிவாஜி, சுவாசி​கா, அனாமிகா மகி, லிசி ஆண்​டனி உள்​ளிட்ட பலர் நடிக்​கிறார்​கள். தினேஷ்குமார் புருஷோத்​தமன் ஒளிப்​ப​திவு செய்​யும் இந்த திரைப்​ படத்​துக்​குச் சாய் அபயங்​கர் இசையமைக்​கிறார். பிரதீப் ரங்​க​நாதனிடம் பணி​யாற்​றிய 6 உதவி இயக்​குநர்​கள் இணைந்​து, தி ஆல்ஃபா யூனிட் என்ற...
2022-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’. இதன் 2-ம் பாகம் தற்போது வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க, விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் வகையில், நடிகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவும் பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை...
விக்ரம் நடிக்கும் படத்தினை ‘பிளாஸ்ட்’ இயக்குநர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பிளாஸ்ட்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுபாஷ் கே.ராஜின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதல் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே, அவரது அடுத்த படத்தினையும் தயாரிக்க முன்வந்துள்ளது. பல்வேறு முன்னணி நடிகர்கள் அவருடன் பணிபுரிய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனிடையே, விக்ரமை சந்தித்து சுபாஷ் கே.ராஜ் கதை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
இளை​ய​ராஜா​வின் மூத்த அண்​ணனும், தயாரிப்​பாள​ரு​மான ஆர்.டி.​பாஸ்​கரின் மகன் ஜெயன் ஹீரோ​வாக அறி​முக​மாகும் படம், ‘ராஜாஸ் பிளே லிஸ்ட்’. காதல் மற்​றும் இசைக்கு முக்​கி​யத்துவம் கொடுத்து உரு​வாகும் இப்​படத்தை சுஜித் என் சுப்​ரமணி​யம் திரைக்​கதை எழுதி இயக்குகிறார். இவர் ‘குடும்​பஸ்​தன்’ படத்​தின் ஒளிப்​ப​தி​வாளர். இப்​படத்​தில் சோனா ஒலிக்​கல், வாகை சந்​திரசேகர், குரு சோம சுந்​தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்​சுமி உள்​ளிட்ட பலர் நடிக்கின்​றனர். சாய் முனீஷ் ஒளிப்​ப​திவு செய்​கிறார். எலிபென்​டைன் எக்ஸ்...