‘புஷ்பா 2’-வை அடுத்து அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படத்தை அட்லி இயக்கி வருகிறார். சயின்ஸ் பிக் ஷன் படமான இதில், தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்குர் ஆகியோரும் நாயகிகளாக நடிக்கின்றனர். இதில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில், அதாவது தாத்தா, தந்தை, 2 மகன்கள் என நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இதில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்க இருப்பதாகச் செய்திகள்...
பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா தோன்றும் ‘முதல் முதலாய்’ என்ற மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர், இயக்குநர் மற்றும் நடன இயக்குநராக வலம் வருபவர் பிரபுதேவா. அவரது மகன் ரிஷி தேவா இன்டி மியூசிக்கல் வீடியோ மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி இருக்கிறார். இந்த வீடியோ பதிவில் அசத்தலாக நடனமாடி, நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.
‘முதல் முதலாய்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படலை ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் எழுதி இசையமைத்துள்ளார்....
‘துரந்தர் 2’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களின் வசூலால் திரையரங்க உரிமையாளர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழக திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்த்த பெரும் வசூல் எந்தவொரு படத்துக்குமே அமையவில்லை. முதலாவதாக ‘தாய் கிழவி’ படத்தின் வசூல் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அப்படத்தின் வசூல் இந்தாண்டு அதிக வசூல் செய்த படம் என்ற பெரும் சாதனையை படைத்துள்ளது.
தற்போது ‘துரந்தர் 2’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களின் வசூலால்...
‘கருப்பு’ படத்தைச் சுற்றி இருந்த சர்ச்சைகள் மற்றும் ஓடிடி விவகாரம் குறித்து ஆர்.ஜே,பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மே 14-ம் தேதி வெளியாகிறது. இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கிறது. இதன் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சினை, ஓடிடி உரிமை இன்னும் விற்பனையாகவில்லை...
ராஜேஷ் எம். இயக்கிய ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்திருந்தார். அனுயா, ஊர்வசி, சந்தானம் நடித்த இப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் ராஜேஷ் - ஜீவா கூட்டணி 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா...
நான் தேசிய விருது வாங்கியதும் என் குடும்பம், பத்திரிகையாளர்களைத் தவிர சினிமா துறையில் இருந்து எனக்கு வந்த முதல் போன் கமல் அண்ணாவிடம் இருந்துதான். அவர் போனில் வந்ததும், “என்ன நடந்துட்டு இருக்கு?” என்றார். “கிராண்ட் ஃபாதர்’ங்கற படத்தோட ஷூட்டிங்ல இருக்கேன்; நேஷனல் அவார்டு கிடைச்சிருக்கு” என்றேன்.
அவர், “ஏன்?” என்றார். “ஏன் எனக்கு கொடுத்தாங்கன்னு கேட்கிறீங்களா?” என்று கேட்டேன். “ஏன் இவ்வளவு லேட்டா கொடுத்தாங்கன்னு கேட்கிறேன்” என்றார். “இப்பதான்...
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் மே 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், படக்குழு திங்கட்கிழமை அன்று வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக மே 14-ம் தேதி ‘கருப்பு’ வெளியாகும் என நேற்று படக்குழு அறிவித்தது.
இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை உருவாக்கியுள்ளது. மே...
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தின் வெளியீட்டு தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதனால் லலித் தயாரிப்பில் உருவாகியிருந்த ‘ஹாய்’ படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக ‘எல்.ஐ.கே’ படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவித்துள்ளது படக்குழு.
ஏப்ரல் 3-ம் தேதி ‘எல்.ஐ.கே’ வெளியாகவுள்ளது....
லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ள படம் ‘லீடர்’. இதன் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்து, படத்தின் தணிக்கைப் பணிகளும் முடிவுற்றது. இதனால் ஏப்ரல் 9-ம் தேதி ‘லீடர்’ வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா, ஷாம், லால், சந்தோஷ்...
சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்க ஹெச்.வினோத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து தயாரித்து வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வெளியீடாக மே 14-ம் தேதி ‘கருப்பு’ மற்றும் ஜூலை மாதத்தில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
ஜீத்து மாதவன் படத்தை முடித்துவிட்டு, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதனை ட்ரீம்...










