ஜனவரி 9-ம் தேதி விஜய் நடித்து வெளியாகவிருக்கும் படம் ‘ஜனநாயகன்’. விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள கடைசிப் படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது இப்படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்படும் அதிகமான பங்குத் தொகையே காரணம் என கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டியில், “ஜனநாயகன் படத்துக்கு 60 சதவீதம்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. வரும் ஜன.10 அன்று வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? -...
ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படத்துக்கு ‘ஜியோ’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.
எம்.ராஜேஷ் இயக்கி வந்த புதிய படமொன்றில் நாயகனாக ஜீவா நடித்து வந்தார். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதனிடையே, ஜீவா பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்புடன் கூடிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. ’ஜியோ’ என இப்படத்துக்கு தலைப்பிட்டுள்ளனர்.
‘ஜாலியாக இருந்த ஒருத்தன்’ என தலைப்பிட்டு, அதனை சுறுக்கி ‘ஜியோ’ என்று அழைத்து வருகிறது...
ரன்வீர் சிங் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’துரந்தர்’. இப்படம் 1000 கோடி வசூலைத் தாண்டி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இன்னும் பல்வேறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘டான் 3’ படத்திலிருந்து விலகிவிட்டார். அதற்குப் பதிலாக ஜெய் மேத்தா இயக்கவுள்ள ‘ப்ரளய்’ படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படம் ஜோம்பி கதைக்களத்தை பின்னணியாக கொண்ட படமாகும்....
’ஜனநாயகன்’ ரீமேக் என்று பரவி வரும் தகவல்களுக்கு ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிப்புடி விளக்கமளித்துள்ளார்.
‘பகவந்த் கேசரி’ தமிழ் ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்று தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக ‘பகவந்த் கேசரி’ படத்தின் இயக்குநர் அனில் ரவிப்புடியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “’ஜனநாயகன்’ விஜய் சார் படம் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். எனவே படம் வெளியாகும் வரை அப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விஜய் சாருடைய...
திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே மனிதன் திரையில் நிஜத்தைக் காண விரும்பினான். சமதளமாக இருக்கும் வெள்ளைத் திரையில் ஆழத்தை (டெப்த்) ஏற்படுத்தி, 2டி திரையில் முப்பரிமாணத் தோற்றத்தை உருவாக்கி பார்வையாளரை அந்த உலகுக்குள் இழுப்பதே ஒளிப்பதிவாளர்களின் கனவாக இருந்தது.
அந்த விருப்பத்தின் தொழில்நுட்ப வடிவமே 3டி சினிமாடோகிராஃபி. இது புதிய கண்டுபிடிப்பல்ல. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் மெருகேறிய புதிய புரிதலோடு மீண்டும் மீண்டும் பிறக்கும் சினிமா மொழி.
இண்டரோகுலர் டிஸ்டன்ஸ்...
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை 2025-ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் ஏமாற்றத்தையும், எந்தவித எதிர்பார்ப்பும் இன்று வெளியான பல சிறிய பட்ஜெட் படங்கள் ஆச்சர்யத்தையும் தந்தன. பல தசாப்தங்களுக்குப் பிறகு இணைந்த ஆளுமைகளின் கூட்டணி கூட ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், எந்தவித ஆரவாரமும் இன்றி வந்த எளிய கதைகள் வசூலில் சாதனை படைத்துள்ளன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றிய 'பெரிய பட்ஜெட்' படங்கள்:
தக் லைஃப்: 'நாயகன்' படத்துக்குப் பிறகு...
2025-ல் 285 தமிழ்ப் படங்கள் ரிலீஸாகி சாதனை: மொத்த வசூல் ரூ.2,950 கோடி, நிகர நஷ்டம் ரூ.300 கோடி!
admin - 0
எப்போதும் இல்லாத அளவுக்கு 2025-ம் வருடம் திரைப்படங்களின் ரிலீஸில், தமிழ் சினிமா சாதனைப் படைத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் தமிழில் உருவாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன என்றாலும் இந்த வருடம் யாரும் எதிர்பார்க்காத வரையில் 285 திரைப்படங்கள் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கு முன் இவ்வளவு திரைப்படங்கள் வெளியானதில்லை. கடந்த 2024-ம் ஆண்டு 241 திரைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தன. 2025-ல் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 262...
நூறு கோடியைத் தாண்டி வசூல் செய்யும் மாஸ் மசாலா படங்கள் சினிமாவை ஒரு தொழிலாகத் தக்க வைக்கின்றன. தற்காலத்தில் சினிமா பெருநிறுவன மயமாகியிருப்பதற்கும் இவ்வகை வணிகப் படங்களின் வியாபாரமும் அவற்றுக்கு ரசிகர்கள் தரும் வரவேற்புமே காரணம். ஆனால், சினிமா என்கிற தொழிலுக்கு ‘கலை’ என்கிற அங்கீகாரத்தைக் கொடுப்பவை ‘மிடில் சினிமா’ என்கிற இடைநிலை பொழுதுபோக்குப் படங்கள்தான். ‘ஆஃப் பீட் சினிமா’, ‘ஃபீல் குட் சினிமா’ எனப் பல பெயர்களில்...
உலகம் முழுவதும் அதிகம் வசூலித்த திரைப்படங்களாக ஒவ்வொரு வருடமும் ஹாலிவுட் படங்களே முதலில் இருக்கும். ஆனால், 2025-ம் ஆண்டு அதிகம் வசூல் அள்ளிய திரைப்படமாக, ‘நே ஜா 2’ (Ne Zha 2) என்ற அனிமேஷன் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.
சீனாவில் உருவான இந்தக் கற்பனை சாகசப் படம் இந்த ஆண்டு ஜன. 29-ல் வெளியானது. அப்போதிருந்தே பாக்ஸ் ஆபீஸில் சாதனைகளைப் படைத்து வருகிறது. இப்படம் உலகளவில் 2.2 பில்லியன்...
