Google search engine
55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் மம்மூட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. விருதுக்குழு தலைவரான நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த நிகழ்வில் பேசும்போது தேசிய விருதுகளை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது: “தேசிய திரைப்பட விருதுகள் சமரசம் செய்யப்பட்டவை என்று சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. கேரளாவில் ஒரு ஜூரி தலைவராக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் அவர்கள்...
ருத்ரா அடுத்து நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகமான படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனை விஷ்ணு விஷால் தயாரித்து வெளியிட்டார். தற்போது ருத்ராவின் அடுத்த படத்தையும் விஷ்ணு விஷாலே தயாரித்து வருகிறார். இதன் படப்பூஜை சென்னையில் நடைபெற்றது. ருத்ராவின் அடுத்த படத்தினை அறிமுக இயக்குநர் விக்கி இயக்கவுள்ளார். இதில் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கவுள்ளார். இதர...
ரவி தேஜா நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாஸ் ஜாத்ரா’ படக்குழுவினர் இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். பானு போகவரப்பு இயக்கத்தில் ரவி தேஜா, ஸ்ரீலீலா, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ் ஜாத்ரா’. இப்படத்துக்கு ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து ரவி தேஜா நடிப்பில் வெளியாகும் முழுநீள கமர்ஷியல் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இப்படத்தினை தயாரித்து வெளியிட்டார் நாக வம்சி. எப்போதுமே பத்திரிகையாளர்...
55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் அதிக விருதுகளை குவித்துள்ளது. ‘பிரம்மயுகம்’ படத்துக்காக மம்மூட்டிக்கு சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சூரில் உள்ள ராமநிலயத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கேரள கலாச்சாரம் மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் சஜி செரியன் வெற்றியாளர்களை அறிவித்தார். நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையிலான ஏழு பேர் கொண்ட நடுவர் குழு இந்த விழாவில் கலந்து கொண்டது. சிறந்த நடிகர்...
நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி நடிப்பில் உருவாகும் ‘45 தி மூவி’படத்தில் இடம்பெற்ற ‘ஆஃப்ரோ தபாங்’ பாடல் வைரலாகி வருகிறது. அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ஏற்கெனவே இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், க்ளிம்ப்ஸ்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆஃப்ரோ தபாங்’ என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை தமிழில் கானா...
இந்தியில் பிரபல டி.வி. சீரியல் நடிகையாக திகழ்ந்த நடிகை நூபுர் அலங்கார், ஆன்மீகப் பாதைக்கு திரும்பி இமயமலை குகை, காடுகள் மற்றும் தொலைதூர ஆசிரமங்களில் தங்கி அமைதியான எளிய வாழ்க்கை வாழ்கிறார். இந்தியில் சக்திமான் உட்பட 155-க்கும் மேற்பட்ட டி.வி. சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நூபுர் அலங்கார். இவர் தனது பணத்தை பிஎம்சி வங்கியில் சேமித்து வைத்திருந்தார். முறைகேடுகள் காரணமாக இந்த வங்கி வாரியத்தை ரிசர்வ் வங்கி கடந்த...
அஜித் – ‘எஃப்.ஐ.ஆர்’ மனு ஆனந்த் இருவரும் இணைந்து பணிபுரிய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. ’குட் பேட் அக்லி’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அஜித். இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் என தெரிகிறது. இப்படத்தினை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் மனு ஆனந்த். இவர் இயக்குநர் கவுதம்...
கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தனது பிறந்தநாளன்று ரசிகர்களை சந்திக்க முடியாமல் போனதற்கு நடிகர் ஷாருக்கான் மன்னிப்புக் கோரியுள்ளார். இந்திய அளவில் மிக பிரபலமான நடிகரான ஷாருக்கான் இன்று (நவ.02) தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலகம் முழுவதும் இருந்தும் ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மும்பை, மன்னத் பகுதியில் இருக்கும் தனது வீட்டின் மாடியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஷாருக் சந்திப்பது வழக்கம்....
விக்ரன் நடிக்கும் 63வது படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளார். ’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு நடிக்ர் விக்ரம் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ’மெய்யழகன்’ பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் பல்வேறு காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. அதே போல ‘மண்டேலா’ இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் பின்னர் அப்படம் குறித்த...
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து வரும் படத்தின் நாயகியாக வாமிகா நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் உடன் யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படத்தின் நாயகியாக வாமிகா நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது....