திரையுலகினர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முக அழகை மாற்றுவது வழக்கமானதுதான். ஸ்ரீதேவி முதல் ஸ்ருதி ஹாசன் வரை பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. புருவத்தை அழகுபடுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா, கன்னம் மற்றும் மூக்குப் பகுதியில் சர்ஜரி செய்துள்ளதாகவும் உதட்டில் ‘லிப் ஃபில்லர்’களைப் பயன்படுத்தி யிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதை நயன்தாரா மறுத்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், “புருவத்துக்கு நான் அதிக முக்கியத்துவம்...
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், பிளாட்டூன், க்ரை-பேபி, டெட் மேன் என பல படங்களில் நடித்துள்ளார். பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் பட வரிசையில் நடித்த ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். சில படங்களைத் தயாரித்துள்ள இவர், ‘தி பிரேவ்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘மோடி, த்ரீ டேஸ் ஆன் த விங்க்...
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். ‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். சுகுமார் இயக்கிய இந்தப் படம் தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் வசூல் ஈட்டியது. இதனால் இப்போது உருவாகி வரும் இதன் இரண்டாம் பாகமான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதிலும் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்.
டிச.5-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்துக்காக அல்லு அர்ஜுன் ரூ.300...
2 படங்களில் இருந்து விலகிய ஸ்ருதி ஹாசன்நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர், ரஜினியின் மகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் ஒப்பந்தமாகி இருந்த 2 படங்களில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் ஆத்வி சேஷ் நடிக்கும் ‘டெக்காயிட்: எ லவ் ஸ்டோரி’ படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். இந்தப் படம் பான் இந்தியா முறையில் உருவாகிறது. இதன்...
துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘லக்கி பாஸ்கர்’. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் தீபாவளியை முன்னிட்டு வரும் 31-ம் தேதி வெளியாகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் பற்றி துல்கர் சல்மான் கூறும்போது, “இதில் வரும் பாஸ்கர் கேரக்டர் எல்லோருக்கும்...
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார். இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர், சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அமரன்’ படத்தில் நடித்துள்ளார். வரும் 31-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட அவர், ‘பிரேமம்’ படத்தை முதலில் எளிதாக ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாய்பல்லவி கூறும்போது, “பிரேமம் படத்துக்காக...
மறைந்த பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்துக்கு (கேகே) டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள். மேலும் கேகேவின் பிரத்யேக ஓவியத்தின் கீழ், “இந்த டூடுல் ஆன்மாவை வருடும், காதல் பாடல்களைக் கொடுத்த பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தை கொண்டாடும் வகையில் வெளியிடப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1996-ல் அவர் இதே நாளில் (அக்.25) தான் தன் முதல் திரைப்படப் பாடலைப் பாடி பின்னணி பாடகராக அறிமுகமானார். Chhod Aaye Hum என்ற...
தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’. காஷ்மீரில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் ‘பயோபிக்’ இது. படத்துக்காக முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபக்காவாக மாறியிருக்கிறார், சாய் பல்லவி. காதலும் காஷ்மீரில் ஆக்ஷனும் என மிரட்டுகிறது படத்தின் டிரெய்லர். படம் பற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியிடம் பேசினோம்.
ஷிவ் அரூர் எழுதிய ‘இண்டியா’ஸ் மோஸ்ட் ஃபியர்லஸ்’ புத்தகம்தான் ‘அமரன்’ உருவாகக்...
மலையாளம், தமிழ் என கலக்கிக் கொண்டிருக்கும் நிமிஷா சஜயன் இன்ஸ்டாகிராமிலும் தனது புகைப்படங்களின் வாயிலாக ரசிகர்களை அசரடித்துக் கொண்டிருக்கிறார்.மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நிமிஷா சஜயன்.தமிழில் ‘சித்தா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘மிஷன்’ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக புகழப்படும் நிமிஷா, ’தி கிரேட் இண்டியன் கிச்சன், ‘மாலிக்’, ‘தொண்டிமுதலும் திரிக்ஷாக்ஷியும்’, ‘நாயாட்டு’ உள்ளிட்ட படங்களின் மூலம் பேசப்பட்டார்.2019ஆம் ஆண்டு கேரள...
4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் நஸ்ரியாவின் ‘சூக்ஷமதர்ஷினி’ திரைப்படம் வரும் நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா, நானி நடிப்பில் வெளியான ‘அன்டே சுந்தராணிகி’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இந்தப் படம் 2022-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு 2 ஆண்டுகளாக நஸ்ரியா நடிக்கும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல்...









