பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். ‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். சுகுமார் இயக்கிய இந்தப் படம் தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் வசூல் ஈட்டியது. இதனால் இப்போது உருவாகி வரும் இதன் இரண்டாம் பாகமான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதிலும் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்.
டிச.5-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்துக்காக அல்லு அர்ஜுன் ரூ.300 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது உண்மை என்றால் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் இருப்பார் என்கிறார்கள். ஹெச்.வினோத் இயக்கும் படத்துக்கு நடிகர் விஜய், ரூ.275 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாகவும் அவரை அல்லு அர்ஜுன் முந்திவிட்டதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.