துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்: காளமாடன்’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து எந்தவொரு புதிய படத்திலும் துருவ் விக்ரம் ஒப்பந்தமாகாமல் இருந்தார். தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
காதல் படமாக உருவாகும் இதனை இயக்கவுள்ளார் தீபக் ரெட்டி. தமிழ் மற்றும்...
பிப்ரவரி 27-ம் தேதி ‘தாய் கிழவி’ படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படம் பிப்ரவரி 20-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது ஒரு வாரம் தள்ளி பிப்ரவரி 27-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில் படத்தினை வெளியிட்டே ஆகவேண்டிய சூழலில் இருப்பதாகவும், அதற்கு தகுந்தாற் போல் ஒப்பந்தங்கள் இருப்பதாகவும் படக்குழு...
இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் , 'லவ் சப்ஸ்கிரைப் ஷேர்'. ஜேபி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரித்துள்ள இப்படத்தை ஆர்.மகாலட்சுமி முருகன் இயக்கியுள்ளார்.
ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் நடித்துள்ளனர். அஷ்வமித்ரா இசை அமைத்துள்ளார். பிப். 20- ல் வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் சரண் பேசும்போது, "இந்தப் படத்தில் ஒரு...
நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரிக்கின்றனர்.
இப்படம் மூலம் இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ், பிரியா மணி, நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் இப்படம்...
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ் நடித்த புதிய வானம் உள்பட சில படங்களை தயாரித்துள்ளார்.
சத்யராஜ், நதியா நடித்த மந்திரப்புன்னகை (1986), ஆனந்த், திவ்யபாரதி நடித்த நிலாபெண்ணே ஆகிய திரைப்படங்களை இயக்கி இருந்தார். உடல் நலக் குறைவு காரணமாக இவர் பிப்.14...
தெலுங்கு மாஸ் மசாலா படங்கள் மீது தமிழ்ப் பார்வையாளர்களுக்கு எப்போதும் பெரிய மரியாதை இருந்ததில்லை. மாறாக, எஸ்.எஸ்.ராஜமௌலியின் படங்கள், ‘புஷ்பா’ போன்ற நேர்த்தியான மசாலா படங்களை இங்கே ஓட வைப்பார்கள். தமிழ் மசாலா படங்கள் மீதான இதே பார்வை மற்ற மூன்று மாநில ரசிகர்களுக்கு இருப்பதையும் மறுப்பதற்கில்லை. பிறகு தென்னிந்திய வெகுஜன சினிமாவின் தரத்தை எந்த மாதிரியான படங்கள் உயர்த்தும் என்று தேடினால், அவைதான் மிடில் சினிமாக்கள். மசாலா...
“தேவை என்று வரும்போது கேட்பதற்கு கூச்சப்படக் கூடாது” என்று மாணவர்களுக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் அறிவுரை வழங்கினார்.
சென்னையில் தனியார் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசும்போது, ”எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன். அதற்காக வருத்தப்பட தேவையில்லை. நிகழ்ச்சியில் ஆடுவது 10-20 பேர் மட்டுமே, ஆனால் பார்வையாளர்கள்தான் அதிகம்.
கலை விழா...
“தமிழ் திரையுலகம் உள்ளடக்கத்திலும் சரி, தொழில்நுட்பரீதியாகவும் சரி, எல்லா வகையிலும் இந்தியாவுக்கே ஒரு டிரெண்ட்செட்டர் ஆக விளங்கிக் கொண்டிருக்கிறது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (பிப்.13) நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இதில் அவர் பேசியதாவது: “இந்தியாவிலேயே மிகவும் துடிப்பான துறை...
தமிழக அரசின் சார்பில் 2016 முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான திரைப் பட விருதுகள், 2014 முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் மற்றும் 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் 2021-22-ம் கல்வி ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன.
விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. விருதுகளை துணை முதல்வர் உதயநிதி...
தெலுங்கு நடிகர் நானி நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. காந்த் ஒடேலா இயக்கும் இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் மோகன் பாபு, ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சி.சாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படம் தெலுங்கு, தமிழ் உள்பட 8 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இப்படத்துக்காக நானியின் அறிமுக பாடல், ஹைதராபாத் அருகே தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களின்...










