ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள ’அமரன்’ படத்துக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மும்பையில் அமரன் படத்தைப் பார்த்தேன், தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன. இந்தப் படம் என்னை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியது. இந்த அற்புதத்தை கொண்டு வந்த இந்த துறையில் ஒரு பகுதியாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.
அசோக் சக்ரா விருது...
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம், தீபாவளி திருநாளான அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர்,...
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் அறிவிப்பு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக ‘ஃபைட் கிளப்’ படம் கடந்த ஆண்டு வெளியானது. இதன் அடுத்த தயாரிப்பாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘பென்ஸ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் கதை எழுத, ‘ரெமோ’,...
தமிழ் சினிமா பேசத் தொடங்கிய காலகட்டத்திலேயே சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவான கருத்துகள் படங்களில் இடம்பெறத் தொடங்கிவிட்டன.
சென்னை ராஜதானியில், 1937-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்ததும் திரைப்படத் தணிக்கை முறையில் தளர்வு செய்யப்பட்டது. இதையடுத்து நாட்டுப்பற்றைப் போற்றும் திரைப்படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று ‘மாத்ருபூமி’. சுதந்திர உணர்வைக் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே பேசிய படம் இது.
‘சந்திரகுப்தா’ என்ற வங்க மொழி நாடகத்தைத் தழுவி உருவான படம். அந்த காலத்திலேயே...
திரையுலகினர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முக அழகை மாற்றுவது வழக்கமானதுதான். ஸ்ரீதேவி முதல் ஸ்ருதி ஹாசன் வரை பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. புருவத்தை அழகுபடுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா, கன்னம் மற்றும் மூக்குப் பகுதியில் சர்ஜரி செய்துள்ளதாகவும் உதட்டில் ‘லிப் ஃபில்லர்’களைப் பயன்படுத்தி யிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதை நயன்தாரா மறுத்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், “புருவத்துக்கு நான் அதிக முக்கியத்துவம்...
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், பிளாட்டூன், க்ரை-பேபி, டெட் மேன் என பல படங்களில் நடித்துள்ளார். பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் பட வரிசையில் நடித்த ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். சில படங்களைத் தயாரித்துள்ள இவர், ‘தி பிரேவ்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘மோடி, த்ரீ டேஸ் ஆன் த விங்க்...
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். ‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். சுகுமார் இயக்கிய இந்தப் படம் தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் வசூல் ஈட்டியது. இதனால் இப்போது உருவாகி வரும் இதன் இரண்டாம் பாகமான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதிலும் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்.
டிச.5-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்துக்காக அல்லு அர்ஜுன் ரூ.300...
2 படங்களில் இருந்து விலகிய ஸ்ருதி ஹாசன்நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர், ரஜினியின் மகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் ஒப்பந்தமாகி இருந்த 2 படங்களில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் ஆத்வி சேஷ் நடிக்கும் ‘டெக்காயிட்: எ லவ் ஸ்டோரி’ படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். இந்தப் படம் பான் இந்தியா முறையில் உருவாகிறது. இதன்...
துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘லக்கி பாஸ்கர்’. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் தீபாவளியை முன்னிட்டு வரும் 31-ம் தேதி வெளியாகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் பற்றி துல்கர் சல்மான் கூறும்போது, “இதில் வரும் பாஸ்கர் கேரக்டர் எல்லோருக்கும்...
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார். இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர், சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அமரன்’ படத்தில் நடித்துள்ளார். வரும் 31-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட அவர், ‘பிரேமம்’ படத்தை முதலில் எளிதாக ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாய்பல்லவி கூறும்போது, “பிரேமம் படத்துக்காக...










