Google search engine
போதைப் பொருள் கடத்தல் குறித்து விசாரித்து வருகிறார் போலீஸ் அதிகாரி ஹன்ஸா ரஹ்மான் (ஜெயக்குமார்). கல்லறையில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைப்பதாகக் கிடைக்கும் தகவலை அடுத்து ரகசியமாகக் கண்காணிக்கச் செல்லும்போது, சாத்தானை வழிபடும் குழு, விசித்திர பூஜை செய்து நரபலி கொடுப்பதை அறிகிறார். அவர்கள் யார், எதற்காக அந்த வழிபாடு, அவர்களைக் கண்டுபிடித்தார்களா? என்பதைப் புரிந்தும் புரியாமலும் சுற்றி வளைத்துச் சொல்கிறது படம். நம்பிக்கைகளின் அடிப்படையில் மனித குழுக்கள் பல்வேறு...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்றவர் கிருத்திகா உதயநிதி. இவர் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான ‘பேப்பர் ராக்கெட்’ வெப்சீரிஸ் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். நித்யா மேனன்,...
ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஊர்வசி ரவுதெலாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுதெலா, தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏராளமான ஆல்பம் பாடல்களிலும் தோன்றியுள்ளார். இந்த நிலையில் நேற்று (பிப்.25) ஊர்வசி ரவுதெலா தனது...
பிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் கதை மகாபாரதத்தில் இருந்து தொடங்கி 2898-ல் முடிகிறது என்று அப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார். நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான்...
நாகர்கோவில் அருகிலுள்ள அறுகு விளையில் நூறாண்டுகளாக நடந்துவருகிறது புறா பந்தயம். அதில் ராஜலிங்கத்தின் (சையத் மஜீத்) குடும்பமும் ஒன்று. இந்தப் புறா பந்தயத்தால் வாழ்க்கை நாசமாவதாக நினைக்கும் அவரின் அம்மா சரஸ்வதி (விஜி சேகர்),லிங்கத்தைப் படிக்க வைத்து அதிலிருந்து திசைத் திருப்ப நினைக்கிறார். ஆனால், அம்மாவை ஏமாற்றிவிட்டு புறா பந்தயத்தில் மனதைச் செலுத்துகிறார் லிங்கம். இந்தப் பந்தய புறா வாழ்க்கை, அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் என்ன மாதிரியான வில்லங்கங்களை...
 உலகப் புகழ் பெற்ற ‘நரூட்டோ’ அனிமேஷன் தொடரை முழுநீள லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை லயன்ஸ்கேட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.ஜப்பானிய மாங்கா காமிக்ஸ் கதைகளில் புகழ்பெற்றது ‘நரூட்டோ’. மசாஷி கிஷிமோட்டோ என்பவர் உருவாக்கிய இந்த காமிக்ஸ் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 25 கோடிக்கும் அதிகமாக பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இது தொலைகாட்சி தொடராகவும் 220 எபிசோடுகளாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவிலும்...
கங்குவா’ படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள சூர்யா, அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார். இதையடுத்து, மகாபாரத கதைக்களத்தைக் கொண்டு உருவாகும் ‘கர்ணா’ படத்தில் கர்ணனாக நடிக்கிறார். ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்குகிறார். இதில் திரவுபதியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கான டெஸ்ட் ஷூட் 2 முறை நடந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சூர்யாவுடன் ஜான்வி நடிப்பதை அவர் தந்தை போனி கபூர் உறுதி செய்துள்ளார்.இதுபற்றி அவர்...
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் ஒன்று ‘கதாநாயகி’. ராம்நாத் இயக்கிய இந்த ரொமான்டிக் காமெடி படத்தில், அந்தக் காலகட்டத்தில் ஹீரோ, காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த டி.ஆர்.ராமச்சந்திரன் நாயகனாக நடித்தார். நாயகியாகப் பத்மினி நடித்தார். கே.ஏ.தங்கவேலு, எம்.என்.ராஜம், டி.கே.ராமச்சந்திரன், கே.எஸ்.அங்கமுத்து, ஏ.கருணாநிதி, எஸ்.ராமாராவ் உட்பட பலர் நடித்தனர். திரைக்கதை, வசனத்தை டி.கே.கோவிந்தன் எழுதினார். ஜி.ராமநாதன் இசை அமைத்த இந்தப் படத்துக்குத் தஞ்சை ராமையா தாஸ், சுரதா,...
“எப்போதும் சிரித்துக்கொண்டு, அன்புடன் பழகும் மனிதர். மனிதர்களுடன் மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களுடனும் அன்பாக இருக்கும் மனிதர். அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு” என இயக்குநர் வெற்றிமாறன் கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ளார்.திரைப்பட இயக்குநர் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “வெற்றி துரைசாமி சினிமா தொடர்பான இடங்களில் தன்னை அறிமுகப்படுத்தும்போது, என்னுடைய மாணவர் என்று தான் அறிமுகம் செய்வார். என்னிடம்...
மார்வல், டிசி, டிஸ்னி , நரூட்டோ என்ற அனிமி உட்பட பல்வேறு காமிக் கதாபாத்திரங்கள் உலகளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளன.இந்நிலையில் இந்த காமிக்ஸ் ரசிகர்களுக்காக, சென்னையில் முதன்முறையாக 'காமிக் கான்' நிகழ்வுநடத்தப்படுகிறது. கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அடிப்படையிலான தொடர் நிகழ்ச்சியான இது, சர்வதேச அளவில் பிரபலமானது. 'காமிக் கான் இந்தியா' அமைப்பு நடத்தும் இந்நிகழ்வு இந்தியாவில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் எற்கெனவே நடைபெற்றுள்ளன. இப்போது முதன்முறையாக சென்னையில்...