Google search engine
வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றி பெற அந்த படத்தின் நாயகன் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு நடிகர் ரவி மோகன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் வில்லனாக நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரவி மோகன் கூறியுள்ளதாவது: “தளபதி வெற்றி கொண்டான். ஜனநாயகன் பட ட்ரெய்லரில் அண்ணன் விஜய்யின் பாத்திரம் யதார்த்தமானதாக உள்ளது. இந்தப் படம்...
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ ட்ரெய்லரை பின்னுக்குத் தள்ளி சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ட்ரெய்லர் சாதனை படைத்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. வரும் ஜன.10 அன்று வெளியாகும் இப்படத்தின்...
பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார்.  இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா ஆகியோரின்  நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல்...
சபரி, ரோகித் , ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, பி.எல்.தேனப்பன் என பலர் நடித்துள்ள படம், "99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு". மித்ரா பிக்சர்ஸ் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி எழுதி, இயக்கி, இசை அமைத்து, தயாரித்துள்ளார். சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்பட பலர்...
சு​திப்டோ சென் இயக்​கத்​தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளி​யான படம், ‘கேரளா ஸ்டோரி’. கேரளா​வில் இளம்​பெண்​களை மதமாற்​றம் செய்து அவர்களைத் தீவிர​வா​தி​களின் பாலியல் அடிமை​களாகப் பயன்​படுத்​து​வ​தாக அந்​தப் படத்​தில் காட்​சிகள் இடம்​பெற்​றன. அந்​தப் படத்​துக்கு கடும் எதிர்ப்பு கிளம்​பியது. சில மாநிலங்​களில் தடை செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில் அந்​தப் படத்​தின் அடுத்த பாக​மாக ‘பி​யாண்ட் த கேரளா ஸ்டோரி’ என்ற படம் உரு​வாகி வரு​கிறது. இதை ‘கேரளா ஸ்டோரி’ படத்​தைத் தயாரித்த...
‘ஜனநாயகன்’ படத்துக்கு போட்டியாக ‘பராசக்தி’ வெளியாக இருப்பது தொடர்பாக இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். சென்னையில் ‘பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் அனைவரையும் தனித்தனியாக குறிப்பிட்டு வாழ்த்திப் பேசினார். பின்பு ‘ஜனநாயகன்’ படத்துடன் வெளியாவது குறித்து பேசும் போது சிவகார்த்திகேயன், “இப்போது ரிலீஸ் விஷயங்களுக்கு...
ஜனவரி 9-ம் தேதி விஜய் நடித்து வெளியாகவிருக்கும் படம் ‘ஜனநாயகன்’. விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள கடைசிப் படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது இப்படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்படும் அதிகமான பங்குத் தொகையே காரணம் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டியில், “ஜனநாயகன் படத்துக்கு 60 சதவீதம்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. வரும் ஜன.10 அன்று வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் எப்படி? -...
ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படத்துக்கு ‘ஜியோ’ எனத் தலைப்பிட்டுள்ளனர். எம்.ராஜேஷ் இயக்கி வந்த புதிய படமொன்றில் நாயகனாக ஜீவா நடித்து வந்தார். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதனிடையே, ஜீவா பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்புடன் கூடிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. ’ஜியோ’ என இப்படத்துக்கு தலைப்பிட்டுள்ளனர். ‘ஜாலியாக இருந்த ஒருத்தன்’ என தலைப்பிட்டு, அதனை சுறுக்கி ‘ஜியோ’ என்று அழைத்து வருகிறது...
ரன்வீர் சிங் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’துரந்தர்’. இப்படம் 1000 கோடி வசூலைத் தாண்டி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இன்னும் பல்வேறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘டான் 3’ படத்திலிருந்து விலகிவிட்டார். அதற்குப் பதிலாக ஜெய் மேத்தா இயக்கவுள்ள ‘ப்ரளய்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஜோம்பி கதைக்களத்தை பின்னணியாக கொண்ட படமாகும்....