குளச்சல்: சிறுவன் ஓட்டிய பைக், பெண் மீது வழக்கு
குளச்சல், காந்தி சந்திப்பில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயது பூர்த்தியாகாத பிளஸ் 2 மாணவர் ஒருவர் பைக் ஓட்டி வந்தார். அந்த பைக் அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கு சொந்தமானது. இதையடுத்து, சிறுவனுக்கு பைக் ஓட்ட அனுமதி அளித்த...
தக்கலை: 2 ஆண்டுகள் தலை மறைவு வாலிபர் கைது
தக்கலை அருகே வாள்வச்சகோஷ்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (30) என்பவர் மீது 2021ல் தக்கலை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 2023 முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சுபினுக்கு மாஜிஸ்திரேட் கைது வாரண்ட் பிறப்பித்தார். நேற்று தக்கலை...
முஞ்சிறை: தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற பெண் கைது
புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் தலைமையில் நேற்று முஞ்சிறை அருகே அள்ளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரமணி என்பவர் நடத்தும் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை பொருட்கள் 30 பாக்கெட்டுகள் (450 கிராம்) கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்,...
புதுக்கடை: பைக்குகள் மோதல் தொழிலாளி உயிரிழப்பு
முஞ்சிறை பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி விமல்ராஜ் (39), தனது 10 வயது மகன் லிசோஸுடன் ஹோட்டலில் உணவு வாங்கிவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு (23) ஓட்டி வந்த பைக் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து திருவனந்தபுரத்தில் உள்ள...
நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்கள் சேகரிப்பு.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகையின் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாசைத் தவிர்க்கும் நோக்கில், நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்களை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 52 வார்டுகளிலும் 100 வாகனங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று பழைய பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் மூலம், பழைய...
துபாயில் மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு பொங்கல் வழிபாடு
ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் நகரில், மண்டைக்காடு பகவதி அம்மன் சேவா சமாஜ் இன்டர்நேஷனல் (MASSI UAE) அமைப்பின் சார்பில் வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பில் மண்டைக்காடு பகவதி அம்மன் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு, பொங்கல் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின்...
நாகர்கோவில்: 90 கிலோ எடை தூக்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்
நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில், மாணவ மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 42 லட்சம் ரூபாய் செலவில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உடற்பயிற்சி கருவிகள், பழு தூக்கும் கருவிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் மனோ...
குளச்சல்: பெண்ணை மிரட்டிய மீனவர் மீது வழக்கு
குளச்சல், மரமடி பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா (53), முற்போக்கு பெண்கள் கழக கன்னியாகுமரி மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார். நேற்று, குளச்சலில் உள்ள அலுவலகத்தில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மீனவர் டல்லஸ் (58) என்பவர், முன்விரோதம் காரணமாக வெண்ணிலாவை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்....
குழித்துறை: பஸ்ஸில் மூதாட்டியின் 3 பவுன் நகை பறிப்பு
மார்த்தாண்டத்தில் இருந்து குழித்துறைக்கு நேற்று மாலை சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்த குழித்துறை பகுதியைச் சேர்ந்த பார்வதி (64) என்பவர், வாவுபலி பொருட்காட்சி திடல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின் திருடு போனது. இது குறித்து அவர் அளித்த புகாரின்...
கொல்லங்கோடு: அரசு அதிகாரி வீட்டில் திருடியவர் கைது
கேரள தலைமைச் செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஜயகுமார் (71) என்பவரின் கொல்லங்கோடு வீட்டில் இருந்து 8 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. பெங்களூருவில் வசிக்கும் விஜயகுமார் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தபோது இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. கொல்லங்கோடு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து,...













