இரணியல்: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பால்சிங் (52). பூ கட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி 2 மகன்கள் உள்ளனர். அதிக மதுப்பழக்கம் உள்ளவர். சம்பவ தினம் வேலை முடிந்து வந்த பால்சிங் அதிக மது போதையில் இருந்துள்ளார். பின்னர் சாப்பிட்டு விட்டு அவரது அறைக்கு சென்று விட்டார். மறுநாள்...
மார்த்தாண்டம்: வீட்டு பொருட்களை சூறையாடிய பெண் கைது
மார்த்தாண்டம் சிங்கிளேயர் தெருவை சேர்ந்தவர் பிஜி ஜோசப் (50). பொறியாளர். இவர் வீட்டின் மாடி அறையை தனியார் வங்கிக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வங்கியில் ஆஷா (32) என்பவர் ஊழியராக வேலை செய்தாராம். தற்போது அந்த வங்கி திவால் ஆனதால் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. நேற்று அங்கு வந்த...
மார்த்தாண்டம்: விபத்தில் சட்டக் கல்லூரி மாணவர் படுகாயம்
மார்த்தாண்டம் லீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி பிரபாகிஷன் (21) சட்டக் கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவர். நேற்று இவர் பைக்கில் மார்த்தாண்டம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வெட்டுமணி பகுதியில் வந்தபோது எதிரே வந்த மற்றொரு ஸ்கூட்டரை மோதியது.
இதில் படுகாயம் அடைந்த பிரபாகிஷன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு...
இடைக்கோடு: சுகாதார நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
இடைக்கோடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவில் மேல் தளத்தில் ரூ. 60 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டிட பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகளை கலெக்டர் அழகு மீனா இன்று பார்வையிட்டார்.
தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மேலும் அங்கு...
விளவங்கோடு: மாதம் 35 கிலோ அரிசி.. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களை வறுமை கோட்டுக்கு கீழ் வகைப்படுத்தி குடும்பத்துக்கு மாதம் 35 கிலோ அரிசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி குழித்துறை, விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின்...
கிள்ளியூர்: திமுக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், ஒன்றிய செயலாளர் பி கோபால் தலைமையில் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற கோஷத்தோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (ஜூலை 3) மாலை நடைபெற்றது.
பாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், இந்திரா நகர், பூட்டேற்றி காலனி பகுதிகளில் வீடு...
திருப்பதிசாரத்தில் நான் முதல்வன் திட்ட பயிற்சி முகாம்
நாகர்கோவில் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நான் முதல்வன் திட்டத்தில் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாம் 5 நாட்கள் நடந்தது. இதில் தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, தேங்காய் பாலில் இருந்து பர்பி, சாக்லேட், லட்டு போன்ற தயாரிப்பது, ஜெல்லி தயாரித்தல், இளநீர் பானம், இளநீர் பாயாசம்...
திருவட்டார்: குளத்தில் பிணமாக கிடந்த கொத்தனார்
திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (45). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கொத்தனார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று மாலையில் அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் ஒருவர் சடலம் மிதந்தது. திருவட்டார் போலீசார் சம்பவ இடத்தில்...
பத்மநாபபுரம்: தீப்பிடித்து எரிந்த செல்போன் கோபுரம்
பத்மநாபபுரம் அரண்மனை அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோபுரம் சுமார் 50 அடி உயரம் கொண்டது. நேற்று(ஜூலை 1) இரவு 8 மணி அளவில் திடீரென செல்போன் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது. அப்போது...
பேச்சிப்பாறை: வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
பேச்சிப்பாறையில் நேற்று முன்தினம் இரவு ஒரு யானை மோதிரமலை அருகே பழங்குடியின குடியிருப்புகள் புகுந்து மகேந்திரன் காணி என்ற தொழிலாளியின் குடிசை வீட்டை பிரித்தது. உடனடியாக மகேந்திரன் காணி மற்றும் மனைவி பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே ஓடி அப்போது கூச்சல் போடவே சத்தம் கேட்டு அக்கம்...













