நாகர்கோவில்: இரவில் பெட்ரோல் திருடும் வாலிபர் -வீடியோ

நாகர்கோவிலில் ஆசாரிமார் வடக்கு தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் இருந்து தொடர்ச்சியாக பெட்ரோல் திருட்டு நடைபெற்று வந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோலை திருடிச் செல்லும் வாலிபர் ஒருவர் கண்காணிப்பு கேமராவில்...

குமரி: தேர்தல் பணிக்கு துணை ராணுவ வீரர்கள் வருகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 11 பெண்கள் உட்பட 90 துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆயுதப்படை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். வீரர்கள் நேற்று முதல் சோதனைச் சாவடிகளில்...

திற்பரப்பு: கோயில் கிணற்றில் உயிரிழந்து மிதக்கும் பாம்பு

குமரியில் மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் 3வது சிவாலயமான திற்பரப்பு மகாதேவர் கோயில் திற்பரப்பு அருவியோரம் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தினமும் இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் தயார் செய்யும் கோயில் கிணற்றில் பாம்பு ஒன்று உயிரிழந்த நிலையில் செத்து...

வள்ளவிளை: ஶ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் தீ மிதி திருவிழா

குமரி மாவட்டத்தில் உள்ள வள்ளவிளை ஶ்ரீ ராஜராஜேஸ்வரி இசக்கி அம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் பூஜைகள் வைத்து அம்மனை வரவேற்றனர். தீ மிதிக்க விரதமிருந்த பக்தர்கள் தலையில் கும்பம், கையில் தீ சட்டி ஏந்தி தீ குண்டத்தில் இறங்கி...

தூத்தூர்: ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த சத்தியாகிரகம்

தூத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கிள்ளியூர் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி அனைத்து கட்சியினர் மற்றும் தூத்தூர் பங்கு பேரவை நிர்வாகிகள் நேற்று ஒருநாள் அடையாள சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு பங்கு பேரவை பொருளாளர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். நாம்...

நாகர்கோவில்: மாணவி கர்ப்பம் – சிறுவன் போக்சோவில் கைது

நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 16 வயது பாலிடெக்னிக் மாணவி, நேசமணி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் காதல் வயப்பட்டார். சிறுவன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததால், மாணவி 2 மாத கர்ப்பமடைந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நாகர்கோவில் அனைத்து...

மண்டைக்காடு: கோவிலில் இன்று நள்ளிரவு சக்கர தீவட்டி ஊர்வலம்

குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 9ம் நாள் விழா இன்று 9-ம் தேதி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நள்ளிரவில் நடைபெறும் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலத்தை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கெளரி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து செண்டை...

அருமனை: மகனின் சிகிச்சைக்காக செயின் பறித்தவர் கைது

அருமனை பகுதியில் 9 பவுன் செயின் பறிக்கப்பட்டதாக பிரபா (27) என்பவர் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மன் (42) என்பவர் கைது செய்யப்பட்டார். தர்மன் தனது 4 வயது மகனின் இதய பிரச்சனைக்கான மருத்துவ செலவிற்காக செயின் பறித்ததாக முதலில் கூறிய...

குமரி: பார் மேலாளர் வீடு சூறை; வாலிபர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜன், நித்திரவிளையில் உள்ள தனியார் மதுக்கடையில் மேலாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் ரெதீஷ் ஆகியோர் ராஜனின் வீட்டிற்குச் சென்று, வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக ராஜனின் மனைவி ஜோதி அளித்த புகாரின் பேரில்,...

நித்திரவிளை: பெண்ணுக்கு கொலை மிரட்டல் – ஒருவர் கைது

நித்திரவிளை அருகே நடைக்கவு பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி அபிஷா (24) என்பவரை, பக்கத்து வீட்டில் வசிக்கும் மணி (50) என்பவர் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அபிஷா நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து...