நித்திரவிளை: ரப்பர் தோட்டத்தில் திடீர் தீ ; நாச வேலையா?
நித்திரவிளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவியதை அடுத்து கொல்லங்கோடு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா என்பது...
பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி நேற்று முன்தினம் மாலை கல்லறை தோட்டம் மந்திரிப்பு, ஜெப மாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்றது. விழாவில் நேற்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை...
இரணியல்: 85 மது பாட்டில்களுடன் பெண் கைது
இரணியல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆளூர் பகுதியில் மது விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து சென்றனர். தோப்புவிளை பகுதியில் பபிலா என்ற பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவரது வீடு சோதனை செய்யப்பட்டது. அப்போது, அரசு அனுமதி இன்றி 85...
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை: கன்னியாகுமரி காவல்துறை அதிரடி
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை, சாலை விபத்துகளில் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கில் 'நோ ஹெல்மெட் நோ என்ட்ரி' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை...
கொல்லங்கோடு: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கொல்லங்கோடு போலீஸ் எஸ்ஐ பிரபகுமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை சூசைபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 14 பொட்டலங்களில் 45 கிராம் கஞ்சா இருந்தது. போலீசார், பானி (20) என்ற வாலிபரை கைது செய்து...
குமரி மாவட்ட ஊர்க்காவல் படை சார்பில் குடியரசு தின விழா.
இன்று நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1950 ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததன் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படை காவலர்கள் சார்பில் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட வட்டார தளபதி பிளாட்பின்...
இரணியல்: மீனவர் செல்போனை பறித்து சென்றவர் கைது
குளச்சல், மேல குறும்பனை பகுதியைச் சேர்ந்த மரிய டான்ஸ் (70) என்ற மீனவரிடம் இருந்து, நேற்று திங்கள் நகர் பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்திருந்தபோது விலை உயர்ந்த ஐபோனை ஒருவர் பறித்துச் சென்றார். அக்கம்பக்கத்தினர் திருடனை மடக்கிப் பிடித்து இரணியல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில்,...
குலசேகரம்: கால்வாயில் மூழ்கிய தொழிலாளி உயிரிழப்பு
குலசேகரம், குற்றியாணி பகுதியைச் சேர்ந்த பால் வெட்டும் தொழிலாளி ஆபிரகாம் (44), நேற்று தனது வீட்டு அருகே உள்ள கோதையாறு இடது கரை கால்வாயில் குளிக்கச் சென்றார். அதிகளவு தண்ணீர் சென்ற கால்வாயில் குளிக்கக் குதித்த அவர் நீண்ட நேரமாக கரை ஏறாததால், அக்கம் பக்கத்தினர் அவரைத்...
களியக்காவிளை: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- எம் பி பங்கேற்ப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து களியக்காவிளையை அடுத்த தையாலுமூட்டில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அஜய் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கன்னியாகுமரி...
குமரி: ஊராட்சி அலுவலகத்தில் பெண்ணை பூட்டி சென்ற ஊழியர்கள்
சைமன் காலனி கடற்கரை பகுதியில் ராஜம் என்பவரது 15, 8 வயது மகன்கள் கடந்த 2023-ல் மாயமானார்கள். சிறுவர்கள் கடலில் தவறி விழுந்து இறந்ததாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த ராஜம், மாவட்ட எஸ்பி, கலெக்டரிடம் புகார் கூறியிருந்தார். சைமன் காலனி...













