குமரி: ஆற்றில் குதித்த பிளஸ் 2 மாணவி
குமரி - கேரளா எல்லையில் ஒற்றசேகரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பிளஸ் டூ மாணவி, நேற்று (டிசம்பர் 15) காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் வெள்ளறடை ஆற்றுப்பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில் குதித்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், தேர்வு பயத்தால்...
காஞ்சம்புறம்: மாற்றுத்திறன் சிறுவனுக்கு விருது
கிள்ளியூர், காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த 8 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ரிஷோன் ஷைரின், சென்னையில் நடைபெற்ற லிரியன்ஸ் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான அழகுப் போட்டியில் கலந்துகொண்டு ட்ரெண்ட் செட் விருதை வென்றார். அவரது திறமையை வெளிக்கொணர பெற்றோர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இது ஒரு அங்கீகாரமாக அமைந்துள்ளது. விருது...
அதங்கோடு: அணுகு சாலை ஆக்கிரமிப்பு: கலெக்டர் ஆய்வு
கிள்ளியூர், அதங்கோடு அருகே ஐயா நாராயண சுவாமி கோயில் மற்றும் குடியிருப்புகளுக்குச் செல்லும் அணுகு சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நேற்று 15-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அந்த இடத்தை பார்வையிட்டு நில அளவை செய்தார். இந்த ஆய்வில்...
நாகர்கோவிலில் கழிவுநீர் ஓடையின் மேல்பகுதி உடைந்து சேதம்.
நாகர்கோவிலின் செட்டிகுளம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் கழிவுநீர் ஓடையின் மேல் பகுதி உடைந்து கிடக்கிறது. தினசரி ஏராளமான மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் இந்தப் பகுதியில், உடைந்து கிடக்கும் ஓடை விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் உடனடியாக அதனை சீரமைக்க வேண்டும் என்று...
மக்களை மகிழ்விக்கும் கடமையை முதல்வர் செய்கிறார் -அமைச்சர்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், குமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 99 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருவதாகவும், விடுபட்டவர்களுக்கு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மக்களை மகிழ்விப்பது முதலமைச்சரின் கடமை என்றும்,...
மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை, பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை இன்று கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி முதல்...
திருவட்டார்: சாலைகளை சீரமைக்க கேட்டு மார்க்சிஸ்ட் மறியல்
திருவட்டார் பகுதியில் ஜல்ஜீவன் அம்ரூத் திட்ட பணிகளுக்காக சாலைகள் உடைக்கப்பட்டு குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று (12-ம் தேதி) திருவட்டார் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமையில் நடைபெற்ற...
நித்திரவிளை: கால்வாயில் மனித கழிவு கொட்ட வந்த வாகனம்
குமரியில் உள்ள ஏவிஎம் கால்வாயில் இரவில் சமூக விரோதிகள் குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகளை கொட்டி செல்வது வாடிக்கையாக உள்ளது. டிச.11 இரவு இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில், கால்வாயில் மனிதக் கழிவுகளை கொட்ட வந்த வாகனம் பொது மக்களால் சிறைபிடிக்கப்பட்டு நித்திரவிளை போலீசில் ஒப்படைக்கப்பட்டது. மீனவ கிராமங்களின்...
களியக்காவிளை: 225 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் நேற்று மாலையில் நடைபெற்ற வாகன சோதனையில், போலி முகவரி கொண்ட காரில் இருந்து 225 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பானக்குடி விளைவீடு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (45) மற்றும் விரிவிளை பகுதியைச் சேர்ந்த விஜய்...
புதுக்கடை: தீயில் கருகிய முன்னாள் ராணுவ வீரர் பலி
கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜோஸ் (44), வீட்டில் பைக்கை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்த முயன்றபோது தீக்காயம் அடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு...













