குமரி: விபத்து – வாலிபர் பலி; பெண் உட்பட 4 பேர் படுகாயம்
நேற்று அதிகாலையில் மண்டைக்காடு பகுதியில் பைக்கில் சென்றபோது ஜெப்ரின் ஜோ என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் உடையார்விளையை சேர்ந்த ஜான் பிரகாஷ் (22), ஆதித்தன் (21) மற்றும் இரு பைக்குகளில் இருந்த பெண் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட...
படந்தாலுமூடு: இறால் பண்ணை ஊழியர் குளியல் அறையில் உயிரிழப்பு
படந்தாலூமூடு பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த அனுப் (36) என்பவர், நேற்று குளியலறை கதவு பூட்டிய நிலையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கதவை உடைத்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக்...
தக்கலை: கல்லூரிக்கு சென்ற பேராசிரியர் மாயம்
தக்கலை, புலியூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 42 வயதான சுப்பிரமணியன் என்பவர் களியக்காவிளையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது செல்ஃபோனும் அணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து களியக்காவிளை காவல் நிலையத்தில்...
குமரி: கடலில் கிறிஸ்மஸ் கொண்டாடிய வாலிபர் பலி
குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ரெஜின் ஜாஸ்பின் (34) என்பவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குளச்சல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்து 9 பேருடன் படகில் கடலுக்குச் சென்றபோது, கரை திரும்பும் போது படகிலிருந்து கீழே இறங்கும்...
நாகர்கோவில்: சென்டர் மீடியன்களை அகற்ற கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட சென்டர் மீடியன்கள் தற்போது விபத்துகளுக்கு காரணமாகி வருகின்றன. குறுகிய சாலைகளில் இவை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால், இந்த சென்டர் மீடியன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திங்கள்நகர்: மார்சல் நேசமணி பூங்கா திறப்பு
திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சி தலக்குளம் சாலையில் உள்ள மார்ஷல் நேசமணி பூங்கா, ரூ. 33 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு, நேற்று பிரின்ஸ் எம்எல்ஏ-வால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் பேரூராட்சி தலைவர் சுமன் தலைமையில் கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்....
உண்ணாமலைகடை: பேரூராட்சி துணைத் தலைவருக்கு அடி – உதை
உண்ணாமலைகடை பேரூராட்சியின் துணைத் தலைவர் செல்வின் (34) குழிச்சவிளை பகுதியில் சாலை பக்க சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (40) என்பவர் தகராறு செய்து, கம்பாலும் கல்லாலும் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு...
குழித்துறை: தாய், மகளுக்கு கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு
குழித்துறை, கழுவன்திட்டையைச் சேர்ந்த விமலா (38) என்பவருக்கும், அவரது வீட்டின் அருகில் வசிக்கும் ஹரிஷ் (35) என்பவருக்கும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று விமலாவின் மகள் வீட்டு முன் நின்றபோது, ஹரிஷ், சாம்ராஜ் (52) மற்றும் சாம்ராஜின் மனைவி விமலா...
கருங்கல்: பெந்தேகொஸ்தே சபை மீது கல்வீச்சு
கருங்கல், இடையன்கோட்டையில் உள்ள பெந்தேகொஸ்தே சபை மீது நேற்று முன்தினம் இரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கல் வீசி ரகளையில் ஈடுபட்டார். கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காவல் நிலையத்தில் அழைத்து வரப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர்...
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஆட்டோ ஓட்டுநர் டென்னிஸ் ஏசுவடியான், தனது ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்றபோது, மேலராமன்புதூரைச் சேர்ந்த சோபிகுமார் என்பவர் வழிமறித்து, முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த டென்னிஸ் ஏசுவடியான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நேசமணி நகர்...













