கருங்கல்: மாணவியின் வீடியோ எடுத்த தொழிலதிபர் கைது
கருங்கல், மிடாலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி குளியலறையில் குளிக்கும் போது, கதவு இடுக்கு வழியாக கில்பர்ட் என்ற தொழிலதிபர் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றார். மாணவி செல்போனைப் பிடுங்கி, குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு...
தக்கலை: விபத்து; ஆட்டோ டிரைவரை சிகிச்சைக்கு அனுப்பிய கலெக
தக்கலையில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிடச் சென்ற மாவட்ட கலெக்டர் அழகுமீனா, காரில் சென்று கொண்டிருந்தபோது, வள்ளியாற்றில் கவிழ்ந்த லோடு ஆட்டோவில் சிக்கிய வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலெக்டரின் இந்த...
குழித்துறை: காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மாவின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து, குழித்துறையில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்....
குமரி: குப்பைகளுக்கு வைத்த தீயில் 4 படகுகள் எரிந்து நாசம்
இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் ஒருவர் தனது வீட்டருகே தேங்கியிருந்த குப்பைகளுக்கு நேற்று தீ வைத்தபோது, பலத்த காற்றில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த நான்கு படகுகளில் தீப்பற்றி எரிந்தது. கொல்லங்கோடு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தாலும், 4 படகுகளும் எரிந்து நாசமாகி, பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது....
நாகர்கோவில்: அனுமதியின்றி ‘பார்’ நடத்திய 3 பேர் கைது
நாகர்கோவில் கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம், கே. பி. சாலை மற்றும் ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு அனுமதியின்றி மதுபான பார் நடத்தி வந்த மாதவன் (49), ஜான்...
குமரி: ஜல்லி குடோன் உரிமையாளர் தாக்குதல் 3 பேர் மீது வழக்கு
காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த குடோன் உரிமையாளர் நாராயண மணி (42) நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில், தனது குடோனால் அருகில் வசிக்கும் ஜோதிசுருபன் வீட்டில் பாறை பொடி படிந்ததாக ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக, ஜோதிசுருபன், ஜான் பிரிட்டோ, பிளவர் ஆகியோரால் தாக்கப்பட்டார். மேலும், அவரது...
தக்கலை: பணம் வசூலிப்பவர் மீது தாக்குதல்
கேரளபுரம், கண்டங்கோணம் பகுதியைச் சேர்ந்த சசி (50) என்பவர், தவணை முறையில் பொருட்கள் வழங்கி பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமாருடன் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. சம்பவத்தன்று, தக்கலை காவல் நிலையம் முன்பு சசி பைக்கில் வரும்போது,...
களியக்காவிளை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்காவைக் கண்டித்து களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பில் மெதுகும்மல் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரக் குழு உறுப்பினர் ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சிதம்பர கிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்....
கொல்லங்கோடு: கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த நளினாக்க்ஷன் (41) என்பவர் குடும்பப் பிரச்சனை காரணமாக நேற்று முன்தினம் மனைவியின் புகாரில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். இரவில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், நளினாக்க்ஷன் கையை பிளேடாவால் அறுத்துக்கொண்டு, மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொல்லங்கோடு...
நாகர்கோவில் அருகே ஆக்கர் கடையில் தீ விபத்து.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியில் நேற்று இரவு ஒரு ஆக்கர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கடையில்...













