Google search engine

நாகர்கோவில்: வீட்டின் பூட்டை உடைத்து ரூ .11 லட்சம் நகை கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சி விளையை சேர்ந்தவர் நூர்ஜகான் இவரது மகள் வெளிநாட்டில் இருந்து வருகிறார். இவர் மகளை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றார். கடந்த 2ம் தேதி, இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போனநிலையில், வெளிநாடு சென்றவர் திரும்பி வந்தவர், வீட்டில் 11 லட்சம்...

குமரி மாவட்டத்தில் 800 நாய்களுக்கு கருத்தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய் கடி காரணமாக ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், மாவட்டத்தில் நாய்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த ஆண்டு மட்டும் 800 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக...

குளச்சல்: பெண்கள் மோதல்.. 6 பேர் மீது வழக்கு

குளச்சல் அருகே குழந்தை இயேசு காலனியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் மனைவி சகாயரெஜி (49). இவர் மகளிர் சுய உதவிக் குழுவிடம் இருந்து ரூ. 45 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக சகாயரெஜி கடனுக்கான தொகையை அடைக்கவில்லை என தெரிகிறது. இதற்கு இடையே அதே...

பார்வதிபுரம்: டெம்போ மோதி செல்போன் ஷோரூம் மேலாளர் உயிரிழப்பு

நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் செல்போன் ஷோரூமில் மேலாளராக சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்த வீரராஜா (40) பணியாற்றி வந்தார். நேற்று (12-ம் தேதி) வீரராஜா பைக்கில் தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார். பார்வதிபுரம் பகுதி களியங்காட்டில் உள்ள சிவன் கோயில் பகுதியில் வந்தபோது வீரராஜா நிலைதடுமாறி...

குழித்துறை: நாஞ்சில் பால் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் விழா

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் கிறிஸ்மஸ் விழா நேற்று (12-ம் தேதி) நடைபெற்றது. குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமை ஏற்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் வழங்கினார். தொடர்ந்து வாரிய உறுப்பினர்களை பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கி கவுரவித்தார். குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வர்...

இனயம்புத்தன்துறை: கிராம அலுவலகம் முன்பு சத்தியாக்கிரகம்

நீர்ப்பாசனத் துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்து மதில் சுவர் எழுப்பி வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு இனயம்புத்தன்துறை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பேரூராட்சி கவுன்சிலர் சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்.  புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறை கிராமத்துக்கு உட்பட்ட காவு உடவிளை சாலையில்...

களியக்காவிளை: சிலம்பம் போட்டியில் அரசுப் பள்ளி மாணவர் சாதனை

குமரி மாவட்ட சிலம்பாட்ட சங்கத்தின் சார்பில் 38 ஆவது மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. இப் போட்டியில் சப் ஜூனியர் 35 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற களியக்காவிளை, மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவர் பினோ ராஜ் முதலிடம்...

நாகர்கோவிலில் பி. எஸ். என். எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் பி.எஸ்.என்.எல். மாநில நிர்வாகத்தைக் கண்டித்து நேற்று (டிசம்பர் 11) மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால்...

நாகர்கோவிலில் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் தளவாய்புரத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 48), பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இருந்த மின்சார அடுப்பை சைமன்நகரை சேர்ந்த பாபு (37) என்பவர் கேட்டுள்ளார். ஆனால் பணம் இல்லாமல் அடுப்பை தரமுடியாது என்று ராஜன் கூறியுள்ளார். இதனால்...

குமரி: சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும்.. எம். பி கோரிக்கை

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார். அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: - கன்னியாகுமரி மாவட்டம் மழை, கடல், ஆறுகள், அருவிகள், வழிபாட்டுத்தலங்கள் என இயற்கை அழகு நிறைந்து காணப்பட்டாலும் இங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள்...