மணவாளக்குறிச்சி: தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜன் (37) என்பவரை, அதே பகுதியை சேர்ந்த அஜித், ஷாலினி, அமுதா ஆகிய மூவர் பாதையில் ஸ்கூட்டர் நிறுத்தியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாக்கியுள்ளனர். இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜனுக்கும்...
குமரி: மாடு மீது பைக் மோதல் மாவட்ட ஜனதாதள தலைவர் படுகாயம்
அருமனை பகுதியை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் குமரி மாவட்ட தலைவர் ஜான் கிறிஸ்டோபர் (54) மற்றும் அவரது நண்பர் ஷஜி குமார் ஆகியோர் நேற்று உண்ணாமலை கடை பகுதியில் பைக்கில் சென்றபோது, சாலை நடுவில் நின்ற பசுமாட்டின் மீது மோதி படுகாயமடைந்தனர். இருவரும் தனியார் மருத்துவமனையில்...
வாவறை: ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்டு விழா – பரிசு வழங்கல்
வாவறை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் 22வது ஆண்டு விழா மார்க்சிஸ்ட் நிர்வாகி செல்லசாமியால் துவக்கி வைக்கப்பட்டது. விழாவில் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாநில ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற ஜோஸ்னா, மாநில...
குமரி: கேரளாவுக்கு எம் சாண்ட் கடத்தியவர் லாரியுடன் கைது
செங்கவிளை 4 வழிச்சாலை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கொல்லங்கோடு காவல் நிலைய போலீசார், முறையான ஆவணங்கள் இன்றி எம் சாண்ட் ஏற்றிச் சென்ற கேரள மாநில லாரியை சோதனை செய்தனர். லாரியில் ஆவணங்கள் இல்லாததால், லாரியை பறிமுதல் செய்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்....
பொன்னப்ப நாடார் திருவருவ சிலை நிறுவும் பணி ஆய்வு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேப்பமூடு ஜங்சனில் உள்ள சர். சி. பி. இராமசாமி ஐயர் நினைவு பூங்காவில், தமிழக அரசு சார்பில் ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னப்ப நாடார் சிலை அமைக்கப்படுகிறது. நேற்று, 6 அடி உயரச் சிலை மண்டபத்தின் நடுவில் நிறுவும் பணி...
குளச்சல்: கருப்புசாறு இயந்திரத்தில் சிக்கிய சிறுவனின் கை
ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த வில்லியம் போஸ் என்பவரது கரும்புச்சாறு கடையில், நேற்று மாலை அவரது பேரன் ஆரின் ஜெப்ரின் (13) இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது வலது கை விரல்கள் சிக்கின. குளச்சல் தீயணைப்பு வீரர்கள் முயன்றும் சிறுவனை மீட்க முடியவில்லை. மயக்கமடைந்த சிறுவனை, மெக்கானிக்கை வரவழைத்து...
நானும் அண்ணாமலையும் ஆடப்போகும் ஆட்டம்.. நயினார் நாகேந்திரன்
கோவை மலுமிச்சம்பட்டியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்ன நினைத்து NDA கூட்டணியை உருவாக்கினார்களோ, அந்தக் கூட்டணி வெற்றி பெற நானும் அண்ணாமலையும் சேர்ந்து...
களியக்காவிளை: பாரதிய ஜனதா சக்தி கேந்திர கூட்டம்
களியக்காவிளை பேரூர் பாரதீய ஜனதா கட்சியின் சக்தி கேந்திர கூட்டம் நேற்று இரவு படந்தாலுமூட்டில் நடைபெற்றது. சக்தி கேந்திர பொறுப்பாளர் சதீஷ் தலைமையில் மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஶ்ரீ தன்யா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், ஒன்றிய துணைத்தலைவர் திலீப் குமார், ஒன்றிய துணைத்தலைவர் பிரசன்னகுமாரி ஆகியோர் கட்சியின்...
நித்திரவிளை: ஆட்டோவை சேதப்படுத்தியவர் கைது
நித்திரவிளை, ஆலங்கோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சசி (57) நேற்று முன்தினம் தனது ஆட்டோவை பக்கத்து வீட்டை சேர்ந்த கொத்தனார் அருள் சஜு (40) வீட்டின் முன்பக்கம் வழியாக ஓட்டிச் சென்றபோது, அருள் சஜு தகராறு செய்து ஆட்டோவை மறித்து முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்....
நாகர்கோவிலுக்கு 1260 டன் ரேஷன் அரிசி வருகை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அரிசி வந்துள்ளது. நேற்று வெளிமாநிலத்தில் இருந்து 1260 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் வந்து சேர்ந்தது. பின்னர் அந்த அரிசி லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு அரசு கிடங்கிற்கு...













