நீரோடி: கடலில் மாயமானவர் உடல் கேரளா கடலில் மீட்பு
குளச்சல், மேலமுட்டம் பகுதியைச் சேர்ந்த சகாய அருள் (32) மற்றும் சேவியர் ஆண்டனி சுபன் (31) ஆகியோர் கடந்த 17ஆம் தேதி பைபர் படகில் நீரோடி கடல் பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது...
நாகர்கோவிலில் மருந்து விற்பனை பிரதிநிதி மீது தாக்குதல்
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி கோபி (38) மாடன் கோவில் அருகே நின்றுகொண்டிருந்தபோது, விஜய் (25) உள்ளிட்ட 3 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்....
மண்டைக்காடு: கடல் அலையில் சிக்கி பெண் உயிரிழப்பு
கார்த்திகை மாத பிறப்பையொட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு சென்ற ரத்தினம் (65), அவரது மகன் சொக்கலிங்கம் (40) ஆகியோர் கடலில் கால் நனைக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி ரத்தினம் உயிரிழந்தார்....
குமரி: ராணுவ வீரருக்கு தேசிய வாள்வீச்சில் தங்கப்பதக்கம்
திருவட்டார் அருகே ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜிஷோ நிதி (31), டெல்லியில் 14ஆம் தேதி முதல் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் புனேயில் ராணுவ வீரராகப் பணியாற்றி...
குமரி: அய்யா வைகுண்டர் நினைவு யாத்திரைக்கு வரவேற்பு
சாமிதோப்பு அன்புவனத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் அய்யா வைகுண்டர் நினைவு யாத்திரைக்கு குமரி மாவட்ட சிறுபான்மை கூட்டமைப்பின் சார்பில் நேற்று களியக்காவிளையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விளவங்கோடு வட்டார தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர் தலைமையில்...
குழித்துறை: காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம்
மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மேல்புறம் வட்டார ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் சார்பாக குழித்துறையை அடுத்த கழுவன் திட்டையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வட்டார சங்கேதன் தலைவர்...
களியக்காவிளை: ஐயப்ப பக்தர் மண்டல முகாம் துவக்கம்
களியக்காவிளை அருகே உள்ள சிவ பார்வதி கோயிலில், உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம், வைகுண்டம், தேவலோகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதியாக முகாம் அமைக்கப்படுகிறது....
களியக்காவிளை: ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு தகவல் மையம்
தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில், களியக்காவிளையில் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு தகவல் மையம் நேற்று திறக்கப்பட்டது. குழித்துறை தேவசம் கண்காணிப்பாளர் சிவகுமார் இந்த மையத்தை திறந்து வைத்தார். சபரிமலை செல்லும்...
குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்
கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...
குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்
குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...
















