‘அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது’ – ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்
admin - 0
அருணாச்சலப் பிரதேசத்தில் வசிப்பவரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடியுரிமை அதிகாரிகள் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் பெமா வாங் தாங்டாக். இவர் லண்டனில் இருந்து ஜப்பான் சென்றுள்ளார். வழியில் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் இறங்கி 3 மணி நேரத்துக்குப்பின் மாற்று விமானத்தில் ஜப்பான் செல்ல திட்டமிடப்பட்டிருந்தார். கடந்த 21ம் தேதி இவர் ஷாங்காய் விமான நிலையத்தில்...
எத்தியோப்பியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் சுமார் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக ஹெய்லி குப்பி எரிமலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெடித்தது. இதனால் வானில் சுமார் 14 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பலும், மேகங்களில் புகையும் சூழ்ந்தது. இதன் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அபார் பகுதியில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை வெடித்தது. இதன் எரிமலை...
அடுத்த ஆண்டு முதல் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தொலைத்தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில் கூறியுள்ளதாவது: ”வரும் 2026ம் ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது.
இதன் மூலம், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டா கிராம், ஸ்நாப் சாட் போன்ற தளங்களில் சமூக...
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச வெளியறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கமல் ஆகியோருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களை வங்கதேசத்திடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இவர்களுக்கு...
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முக்கிய தீர்ப்பு
admin - 0
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1971-ம் ஆண்டு போரின்போது பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உதயமானது. அப்போது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்த் தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மாணவர்கள் கடந்த 2024 ஜூன், ஜூலையில் பல போராட்டங்களில்...
H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் லாரா இங்க்ராஹாம் நேர்காணல் நடத்தினார். அப்போது, H-1B விசா கட்டுப்பாடுகள் உங்கள் நிர்வாகத்துக்கு ஒரு பெரிய முன்னுரிமையாக இருக்குமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ட்ரம்ப்,...
ஆப்கனிஸ்தானில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அறிக்கையில், ஆப்கனின் பொருளாதார நிலை குறித்து சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து ஆப்கானியர்கள் அதிக அளவில் நாடு திரும்பும் கட்டாயத்துக்கு ஆட்பட்டுள்ளனர். சுமார் 23 லட்சம் பேர் இவ்வாறு...
நடப்பு 2025-ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதன்படி, 2025 முதல் அரையாண்டில் 40,800 பயணிகள் இந்தியாவிலிருந்து மாஸ்கோவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். காமன்வெல்த் அமைப்பை (சிஐஎஸ்) சாராத நாடுகளின் பயணிகள் மாஸ்கோவுக்கு சுற்றுலா செல்வதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக சிஐஎஸ் நாடுகளுக்கு வெளியில்...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்; 20 பேர் காயமடைந்தனர்.
இஸ்லாமாபாத்தின் ஜி-11 பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இன்று தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ‘குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 12 பேரின் உடல்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான்...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தானை நிலைகுலைய செய்யும் வகையில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு இஸ்லாமாபாத்தில்...






