இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று மீண்டும் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஏற்கெனவே அவர் இவ்வாறாக 70 முறை கூறிவிட்டதாக விமர்சனங்கள் உள்ள நிலையில் அதை உறுதிப்படுத்துவது போலவே மீண்டும் அதனைக் கூறியுள்ளார் ட்ரம்ப்.
பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த ஒரு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப் கூறியதாவது: கடந்த 10 மாதங்களில் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கொசோவா - செர்பியா, பாகிஸ்தான்...
ஆப்பிரிக்கர்கள் அருவருப்பானவர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பென்சில்வேனியாவில் நடைபெற்ற பேரணியில் ட்ரம்ப் கூறியதாவது: ”சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் அருவருப்பானவர்கள். பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர்கள் அனைவருமே குப்பைகள் தான். அவர்கள் அமெரிக்காவுக்கு தேவையில்லை.
அதற்கு பதிலாக நார்வே, ஸ்வீடனிலிருந்து வருபவர்களை நாம் ஏன் ஏற்க கூடாது? உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் டென்மார்க்கிலிருந்து சில நல்லவர்களை எங்களுக்கு அனுப்புங்கள்.
சோமாலியா பேரழிவை ஏற்படுத்தும் இடம்....
‘‘இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசிக்கு கூடுதலாக வரி விதிக்கப்படும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுக்கும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது. அதை மீறி தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவுக்கு...
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதை கருத்தில் கொண்டு கூடுதலாக மேலும் ரூ.10,780 கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்ததை அடுத்து தற்போது அதில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது.
இதுகுறித்து ஐஎம்எப் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தானின் பொருளாதார திட்டங்கள் குறித்த இரண்டு மதிப்பாய்வுகளை ஐஎம்எப் நிர்வாக குழு நிறைவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் பிரதான கடன்...
சீனாவின் சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றின் முன்னாள் நிர்வாகியை ஊழல் குற்றச்சாட்டில் சீன அரசு நேற்று தூக்கிலிட்டது.
சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமாக 'சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் (சிஎச்ஐஎச்)’ உள்ளது. இதன் பொது மேலாளராக இருந்தவர் பாய் தியான்ஹுய். இவர் 2014 முதல் 2018 வரை திட்டங்களை செயல்படுத்துவதில் 15.6 கோடி டாலர் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் அவர் குற்றவாளி என...
இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்துடன் கூடிய 100 ரூபாய் நோட்டை வெளியிட்ட நேபாளம்: மீண்டும் எல்லை குறித்து சர்ச்சை
admin - 0
வியாழக்கிழமை அன்று புதிய 100 ரூபாய் நோட்டை நேபாளம் வெளியிட்டது. அதில் அந்த நாட்டின் வரைபடத்தில் லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய மூன்று இந்திய பகுதிகள் இடம்பெற்றுள்ளது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2020, ஜூன் 18-ம் தேதி நேபாளம் அதன் அரசியல் அமைப்பை திருத்துவதன் மூலம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய நாட்டின் அரசியல் வரைபடத்தைப் புதுப்பிக்கும்...
வெள்ளம், நிலச்சரிவால் இலங்கையில் 47 பேர் உயிரிழப்பு: புரட்டிப் போட்ட கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது
admin - 0
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிரிழந்தனர். காணாமல்போன 21 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இலங்கை தீவின் மேற்பரப்பில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நவ.17-ம் தேதி முதல்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு அடியாலா சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான் சிறையில் கொலை செய்யப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து அடியாலா சிறை வளாகத்தில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டனர்.
இம்ரான் கானை பார்க்க வேண்டும் என்று அவர்கள் சிறை வளாகத்துக்குள் புகுந்து...
வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன் நகரின் மையப்பகுதியில், வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில், அமெரிக்க தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
மேற்கு விர்ஜீனியா தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இந்த வீரர்கள், உடனடியாக சிகிச்சைக்காக இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதிகாரிகள்...
ஹாங்காங் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஹாங்காங்கின் நியூ டெரிட்டரீஸில் உள்ள டாய் போ பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர தீ விபத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்தனர். சுமார் 300...