இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 27-ம் தேதி நிறைவடைந்தது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்கும் அமலுக்கு வரும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த வர்த்தக ஒப்பந்தம், அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று...
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சவூதி பத்திரிகை நிறுவனம் (SPA) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது, ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதில் சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை இளவரசர் உறுதிப்படுத்தினார். மேலும், ‘ஈரானுக்கு எதிரான எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்காகவும் சவூதி அரேபியா...
ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கே அதிக நன்மை கிடைக்கும் என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள ஜேமிசன் கிரீர், ‘‘இந்த ஒப்பந்தத்தை வியூக ரீதியாக புரிந்து கொள்வது முக்கியம். அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து, அமெரிக்க சந்தையை அணுகும் மற்ற நாடுகளுக்கான வரியை உயர்த்தியுள்ளார். இதனால், அந்த நாடுகள்...
உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும். அமேசான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி, இது குறித்து வெளியிட்ட பதிவில், “நிறுவனத்தின் படிநிலைகளைக் குறைக்கவும், அதிகாரத்துவத்தைக் களைந்து உரிமையை அதிகரிக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். அமேசான் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர்...
ஈரானுடனான உறவில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க் கப்பல் மத்திய கிழக்கு கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் மீது வான்வழித் தாக்குதலுக்கு உத்தரவிடக்கூடும் என்ற யூகங்களை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான உறவில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில், இந்தோ-பசிபிக் பகுதியில் இருந்து அனுப்பப்பட்ட அமெரிக்க கடற்படையின் ஆபிரகாம்...
வங்​கதேசத்​தில் கடந்த 2024 ஜூலை​யில் இடஒதுக்​கீட்​டில் திருத்​தம் கோரி மாணவர்​கள் தொடங்​கிய போராட்​டம் மிகப்​பெரிய கிளர்ச்​சி​யாக மாறியது. அப்​போது பிரதம​ராக இருந்த ஷேக் ஹசீ​னா​வின் அரசு கடும் ஒடுக்​கு​முறை​யில் ஈடு​பட்​டது. இதில் பலர் கொல்​லப்​பட்​டனர். அப்​போது நிகழ்ந்த மனித குலத்​துக்கு எதி​ரான குற்​றங்​கள் குறித்து டாக்​கா​வில் உள்ள சர்​வ​தேச குற்​ற​வியல் தீர்ப்​பா​யம் விசா​ரித்து வரு​கிறது. இதில் இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​துள்ள முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா, முன்​னாள் உள்​துறை அமைச்​சர்...
சர்​வ​தேச அமைதி மற்​றும் பாது​காப்பை வழங்​கும் ஓர் அமைப்​பாக ஐ.நா.வை உலக மக்கள் கருது​வ​தில்​லை என்று இந்​தி​யா​வின் நிரந்தர தூதர் பர்​வதனேனி ஹரீஷ் விமர்​சித்​துள்​ளார். ஐ.நா.​வில் இருந்து வில​கு​வ​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அறி​வித்​தார். அத்​துடன், ஐ.நா.வுக்கு மாற்​றாக, ‘போர்டு ஆப் பீஸ்’ என்ற அமைப்பை தொடங்​கி​னார். இதில் உறுப்​பின​ராக இந்​தியா உட்பட உலக நாடு​களுக்கு அழைப்பு விடுத்​தார். அதிபர் ட்ரம்ப்​பின் தலை​மை​யில் இயங்​கும் இந்த அமைப்​பில்,...
து​பாயைச் சேர்ந்த தொழில​திபர் கலாப் அல் ஹப்​தூர், ஊழியர்​களுக்கு திருமண பரிசாக ரூ.12.5 லட்​சம் வழங்​கப்​படும் என்று அறி​வித்​துள்​ளார். ஐக்​கிய அரபு அமீரகத்​தைச் சேர்ந்த அல் ஹப்​தூர் குழு​மத்​தின் தலை​வர் கலாப் அல் ஹப்​தூர் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: திரு​மணம் செய்​வதும், ஒரு குடும்​பத்தை உரு​வாக்​கு​வதும் வெறும் தனிப்​பட்ட விஷ​யம் மட்​டுமல்ல. அவை சமூக மற்​றும் தேசிய பொறுப்​பு​கள். ஏனெனில் குடும்​பங்​களின் மூலமே தேசங்​கள் கட்​டி​யெழுப்​பப்​படு​கின்றன...
தென்​கொரியப் பொருட்​களுக்​கான இறக்​குமதி வரியை 25% ஆக உயர்த்​து​வ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “அமெரிக்​கா​வின் வர்த்தக ஒப்​பந்​தங்​கள் மிக​வும் முக்​கிய​மானவை. ஒப்​புக்​கொண்​டபடி நாங்​கள் வரியைக் குறைத்​துள்​ளோம். அதே வேகத்தை எங்​கள் வர்த்​தகக் கூட்​டாளி​களிட​மிருந்​தும் எதிர்​பார்க்​கிறோம்" என தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா​வின் இந்த நடவடிக்​கையை அடுத்து தென்​கொரி​யா​விலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் கார்​கள், மரக் கட்​டைகள் (Lumber) மற்​றும்...
அமெரிக்காவின் மினியாபொலிஸ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 37 வயதான அலெக்ஸ் ஜெஃப்ரி பிரெட்டியை குடியேற்ற அதிகாரிகள் 6 பேர் சூழ்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற புதிய வீடியோ வெளியாகி உள்ளது. இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மினியாபொலிஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி அன்று அமெரிக்க குடியேற்ற அதிகாரி ஒருவர், ரெனி குட் என்ற பெண்மணியை சுட்டுக்கொன்றனர். இது தேசிய அளவில் மக்களை கொதிப்படைய செய்தது....