காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் அமெரிக்காவில் ‘சீக்கியர்களுக்கான நீதி' (எஸ்எப்ஜே) என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். இதன் கனடா நிர்வாகியாக இந்திரஜித் சிங் கோசல் (36) செயல்பட்டு வந்தார்.
குர்பத்வந்த் சிங் பன்னுனின் வலதுகரமாக கருதப்படும் அவரை கனடா போலீஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் இந்து கோயிலில், பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, இந்திரஜித் சிங் கோசல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசித் தாக்கியதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் பஷ்துன் மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாட்ரே தாரா கிராமத்தில், பாகிஸ்தான் விமானப்படை ஜேஎஃப்-17 போர் விமானங்கள் எல்எஸ்-6 வகையைச் சேர்ந்த 8 குண்டுகளை வீசித் தாக்கின. இந்த தாக்குதலால் கிராமத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது, இதில் பலர் காயமடைந்தனர்....
ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை திருப்பித் தர வேண்டும் என ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து, பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாகவே பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே...
எச்1பி விசாவுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணம்: ட்ரம்பின் புதிய ஆணை குறித்து அமெரிக்க அரசு விளக்கம்
admin - 0
எச்1பி விசா கட்டணத்தை ஆண்டுதோறும் செலுத்த தேவையில்லை. இது ஒருமுறை கட்டணம் மட்டுமே. ஏற்கெனவே எச்1பி விசா பெற்றவர்கள் புதிய கட்டணத்தை செலுத்த தேவை இல்லை என்று அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு உயர்த்தியது. இந்த புதிய கட்டண முறை நேற்று (செப்.21) முதல் அமலுக்கு வந்தது....
அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கை சரியானதுதான் என்று கூறி ‘உண்மை அறிக்கை’ ஒன்றை வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்குப் பதில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றக் கூடிய வெளிநாட்டினருக்கு வேலை வழங்கப்படுகிறது. கடந்த 2003-ம் ஆண்டு எச்-1பி விசா பெறும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் எண்ணிக்கை 32 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கர்களிடையே வேலைவாய்ப்பின்மை...
பிரச்சினையை பேசிதான் தீர்க்க முடியும்: அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை பற்றி சீனா கருத்து
admin - 0
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், “நேட்டோ நாடுகள் குழுவாக இணைந்து சீன பொருட்கள் இறக்குமதி மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் ரஷ்யா, உக்ரைன் இடையிலான அபாயகரமான போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என நான் நம்புகிறேன். ரஷ்யாவிடமிருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதன்...
இங்கிலாந்தில் வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தீவிர வலது சாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் நேற்று முன்தினம் லண்டனில் "யுனைட் தி கிங்டம்" பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்களது போராட்டத்துக்கு போட்டியாக சட்டப்பூர்வ குடியேறிகளுக்கு ஆதரவு தெரிவித்து "பாசிசத்துக்கு எதிரான பேரணி"க்கு ஸ்டாண்ட் அப் டு ரேசிசம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில்,...
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர்.
நேபாள பிரதமர் சுசீலா கார்க்கி, எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக குல்மான் கிசிங்கையும், உள்துறை மற்றும் சட்ட அமைச்சராக ஓம் பிரகாஷ் ஆர்யலையும், நிதி அமைச்சராக ரமேஷோர் கானலையும் நியமித்து தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். இந்த மூன்று அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர்.
புதிய அமைச்சராக பொறுப்பேற்ற குல்மான் கிசிங் முன்பு நேபாள மின்சார...
இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: 2026 மார்ச்சில் பொதுத் தேர்தல்
admin - 0
நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.
நேபாளத்தில் அரசியல்வாதிகளின் பிள்ளைகள், தொழிலதிபர்கள், பணக்காரர்களின் வாரிசுகள் பணத்தை தண்ணீர்போல செலவழிப்பது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வது, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சந்தோஷமாக இருப்பது பொதுமக்களை எரிச்சலடைய செய்தது. இந்த செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் இளைஞர்கள் கடுமையாக விமர்சனம்...
பிரச்சினையை பேசிதான் தீர்க்க முடியும்: அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை பற்றி சீனா கருத்து
admin - 0
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், “நேட்டோ நாடுகள் குழுவாக இணைந்து சீன பொருட்கள் இறக்குமதி மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் ரஷ்யா, உக்ரைன் இடையிலான அபாயகரமான போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என நான் நம்புகிறேன். ரஷ்யாவிடமிருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதன்...









