நேபாள வெள்ளத்தில் 100 பேர் உயிரிழப்பு: கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேர் மீட்பு?
admin - 0
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 100 பேர் உயிரிந்துள்ளனர். மேலும், 350-க்கும் மேற்பட்டோரைத் தேடி வருகின்றனர். கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்பியதாகவும், மற்ற 37 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் வரலாறு காணாத வகையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மலைச்சரிவுகளில் இருந்து கரைபுரண்டு...
நேபாள வெள்ள உயிரிழப்பு 160+ ஆக அதிகரிப்பு; இந்தியர்கள் பலர் உட்பட 700+ பேரை தேடும் பணி தீவிரம்
admin - 0
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160-ஐ தாண்டியுள்ளது. மேலும், 700-க்கும் மேற்பட்டோரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்பியதாகவும், மற்ற 37 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் வரலாறு காணாத வகையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மலைச்சரிவுகளில்...
பிரேசிலில் தன்னை தத்தெடுக்க வேண்டும் என்பதற்காக ‘ஆட்டிசம்’ சிறுமியாக நடித்த பெண்ணுக்கு சிறை
admin - 0
பிரேசிலின் ஜாய்ன்வில்லி பகுதியில் வசிக்கும் ஆன்மிகப் பற்றுள்ள தம்பதிக்கு உள்ளூர் பாஸ்டர் ஒருவர் மூலம் அமண்டா மரியா சவுசா டி ஒலிவேரா என்ற 37 வயது பெண் அறிமுகமாகியுள்ளார்.
ஒலிவேரா என்ற தனது இயற்பெயரை கேப்ரியல் என்று மாற்றிக் கூறியதுடன், 12 வயதான தனக்குக் கடுமையான ஆட்டிசம் பாதிப்பு உள்ளது, என்றும் நாடகமாடியுள்ளார். அதை நம்பிய தம்பதி இரக்கப்பட்டு அவரை தத்தெடுத்து தங்களது வீட்டில் தங்க வைத்துள்ளனர். அவரது உடல்...
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த 300 இந்தியர்கள் உட்பட சுமார் 1000 பேரை காணவில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி 175 பேர் உயிரிழந்துள்ளனர். 300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரை காணவில்லை...
இஸ்ரேல் மீது தொடர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் ஈரான், என் மகன்களில் ஒருவரை படுகொலை செய்ய முயற்சி செய்தது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, “ஈரான் அரசு எனது மகன்களில் ஒருவரை இலக்கு வைத்து படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
இஸ்ரேலில் வரவிருக்கும்...
செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சவுதி அரேபிய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றாக செங்கடலின் பாப் எல் மண்டேப் ஜலசந்தி...
கினியாவில் கனமழை பெய்ததால் குப்பை மலை சரிந்து குடியிருப்புகள் மீது விழுந்ததில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கொனாக்ரியில் டார் எஸ் சலாம் என்கிற மிகப்பெரிய குப்பைகிடங்கு உள்ளது. இங்கு பல லட்சம் டன் குப்பைகள் மலை மலையாக குவிக்கப்பட்டிருந்தன.
இது குப்பைக் கிடங்கை சுற்றி வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. எனவே குப்பைக் கிடங்கை மூடி, குப்பைகளை வேறு இடத்துக்கு...
அமெரிக்காவின் எச்1பி விசா கட்டணத்தை ரூ.98 லட்சமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்காக அமெரிக்க அரசு சார்பில் எச்1பி விசா வழங்கப்படுகிறது.
இந்த விசாவின் காலம் 3 ஆண்டுகள் ஆகும். இதனை 6 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். ஓராண்டுக்கு 85,000 எச்1பி விசாக்களை மட்டுமே அமெரிக்கா வழங்குகிறது. இதில் 71 சதவீதத்தை இந்தியர்கள் பெறுகின்றனர். 12 சதவீத விசாக்களை சீனர்களும் இதர நாடுகளை சேர்ந்தோர் 17...
சின்சினாட்டி டென்னிஸ் தொடரில் 56 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள்
admin - 0
அமெரிக்காவின் ஒஹியோ நகரில் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் அமெரிக்காவின் கோ கோ காஃப், செக் குடியரசின் சாரப் பெஜ்லெக்குடன் மோதினார்.
இதில் கோ கோ காஃப் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரை இறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதினார்....
பல பத்தாண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள், தாங்களாக முன்வந்து தாயகம் திரும்புவதை விரைவுபடுத்தும் வகையில் குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க இலங்கை அரசு எடுத்துள்ள முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கான ஐ.நா.வின் வாழ்விட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நா. பொதுச் செயலாளரின் பிரதிநிதியுமான மார்க் ஆண்ட்ரே ஃபிரான்ச் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பல ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்த நிலையில், பாதுகாப்பான மற்றும் கண்ணியமான முறையில் தாயகம்...









