ஈரானின் புதிய உச்ச தலைவராக, மறைந்த அயத்துல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி (56) தேர்வு செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாயின.
இது குறித்து ஈரான் உச்ச தலைவரின் இந்திய பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜீத் ஹக்கீம் எலாஹி கூறியதாவது: ஈரானில் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யும் பணி இன்னும் நடைபெறுகிறது.
மோஜ்தாபா காமேனி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி உண்மை அல்ல. அவர் தகுதியின்...
அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையை அமெரிக்க விமானப்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 1962-ல் ‘மினிட்மேன்I’ ஏவுகணையும் கடந்த 1965-ம் ஆண்டில் ‘மினிட்மேன் II’ ஏவுகணையும் அமெரிக்க விமானப் படையில் சேர்க்கப்பட்டன. கடந்த 1970-ம் ஆண்டில் ‘மினிட்மேன் III’ ஏவுகணை விமானப் படையில் சேர்க்கப்பட்டது.
தற்போது இந்த வகையை சேர்ந்த 400 ஏவுகணைகள் அமெரிக்காவின் மோன்டானா, நார்த்...
மத்திய கிழக்கு நாடுகளில் 7-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கொல்ல வேண்டும் என ஈரான் மதகுரு ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கின. இதில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உட்பட சுமார் 50 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத்தலங்கள்...
ஈரான் போர்க் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியதற்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில் அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. ஈரான் கடற்படையின் 17 போர் கப்பலை அழித்துவிட்டதாக அமெரிக்கா கூறியது.
இந்தியாவில் கூட்டுப் பயிற்சியை முடித்து விட்டு ஈரான் திரும்பிய ஐஆர்ஐஎஸ் டேனா என்ற போர்க்கப்பலை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மார்க்-48 என்ற சக்திவாய்ந்த டார்பிடோ குண்டு...
“ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்டது குறித்து, இறையாண்மை அடிப்படையிலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு தெளிவான நிலைப்பாடு இந்திய அரசிடம் இருந்து வெளிப்படவில்லை. இது நமது வெளிநாட்டுக் கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.
இந்தச் சூழலில் மவுனம் என்பது நடுநிலையல்ல. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, கொள்கை அளவிலான எதிர்ப்பை வெளிப்படுத்தாவிட்டால், சர்வதேச நெறிமுறைகள் சீரழிவதை...
இந்திய பெருங்கடலில் இலங்கையின் கடற்பரப்பில் ஈரான் போர் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியதில் நீரில் மூழ்கியது. இதில் 83 பேர் உயிரிழந்ததாக தகவல். மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் தற்போது இந்திய துணைக்கண்டத்துக்கு அருகே அரங்கேறி உள்ளது.
இந்த தாக்குதலை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஹெக்ஸத் உறுதி செய்துள்ளார். புதன்கிழமை அன்று சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழகி கப்பல் ஏவிய ‘டார்பிடோ’...
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு: ஈரானின் நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்கள் அழிப்பு
admin - 0
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷனில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால், அதன் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்தன. பதில் தாக்குதலில் இறங்கிய ஈரான், அமெரிக்க ராணுவ முகாம்கள் இருக்கும் வளைகுடா நாடுகள் மீது...
ஈரான் போர்க் கப்பலை மூழ்கடித்தது அமெரிக்க நீர்மூழ்கி: 87 வீரர்கள் உயிரிழப்பு – மீட்பு பணியில் இலங்கை
admin - 0
இலங்கை அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ என்ற ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தியது. அதில் இருந்த 87 வீரர்கள் உயிரிழந்தனர். அவசர அழைப்பு விடுக்கப்பட்டதால் மீட்பு பணியில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை ஈடுபட்டுள்ளது.
இந்தக் கப்பல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் நடந்த மிலன் 2026 கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு மறுத்த ஈரான்...
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து கடந்த செவ்வாய்க் கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது. அப்போது குவைத் வான்பரப்பில் 3 அமெரிக்க எப்-15 இ ஸ்டிரைக் ஈகிள்ஸ் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இவை குவைத்தின் நிலத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ‘நட்பு நாடுகளுக்கு இடையிலான சம்பவம்' என கருதப்படும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க தயாரிப்பான எப்/ஏ-18 ஹார்னெட்...
ஓமன் கடல் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
ஓமன் கடற்பகுதியில், தலைநகர் மஸ்கட்டில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் மார்ஷல் தீவுகள் கொடியுடன் சென்று கொண்டிருந்த எம்கேடி வியோம் என்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன் படகு மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சரக்கு கப்பலின் இன்ஜின் அறையில் தீப்பற்றியதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். இதை ஓமனில் உள்ள இந்திய தூதரகம் உறுதி...










