அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப், கலிபோர்னியா ஆளுநர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு இடங்களில் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர்...
அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்க தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு, தொழிலதிபர் எலான் மஸ்க் முழு ஆதரவு அளித்தார். தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இதன்பிறகு அரசு செயல் திறன் என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக எலான் மஸ்க்...
காசாவில் தாய்லாந்து பிணைக் கைதி ஒருவரை இஸ்ரேல் நேற்று மீட்டது. காசாவில் தொடரும் விமான தாக்குதலில் நேற்று 95 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
இஸ்ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் 251 பேரை பிணைக் கைதிகளாக காசாவுக்கு கொண்டு சென்றனர். இதனால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட போரில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரும், பாலஸ்தீனர்கள் 54,000 பேரும் உயிரிழந்தனர்.
இன்னும் 55 பிணைக் கைதிகள் பற்றிய தகவலை...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. ஒருவர் புவி அரசியலில் சர்வ வல்லமை பொருந்திய அதிபர், இன்னொருவர் உலகின் பெரும் பணக்காரர். அதிகாரமும் செல்வமும் மோதும்போது அது இருவருக்குமே தோல்வியைத் தராத ‘வின் - வின்’ (win - win) நிலையாகத்தான் செல்லும் என்றாலும் யாருக்கு, யார் அதிக அழுதத்ததைத் தரப் போகிறார்கள் என்று வேடிக்கை பார்க்க...
‘டி கிராசே’ என்ற அதி நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடு பிரான்ஸ். இது சமீபத்தில் அறிமுகம் செய்த அணு சக்தி நீர் மூழ்கி கப்பல் ‘டி கிராசே’.
பிரான்ஸ் கடற்படையில் ஏற்கெனவே உள்ள ரூபிஸ் வகை நீர்மூழ்கி கப்பல்களை 2030-ம் ஆண்டுக்குள் மாற்றும் வகையில் 10 பில்லியன்...
அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், ‘புத்தி இல்லாதவர் உடன் பேசத் தயாராக இல்லை’ என மஸ்க்கை குறிப்பிட்டு ட்ரம்ப் பேசியுள்ளார். இதை ஊடக நிறுவனம் ஒன்றுடனான தொலைபேசி நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இருவரும் தொலைபேசி வழியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெளியான தகவல் குறித்து இந்த நேர்காணலில் அதிபர் ட்ரம்ப்...
தேசிய மேம்பாட்டுக்கான ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில் (என்சிசி) ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய பொருளாதார கவுன்சில் கூட்டம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்குவா, பலுசிஸ்தான் ஆகிய நான்கு மாகாணங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 2025-26-ம் நிதியாண்டில் 4.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது....
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது முதல் முறை பதவிக்காலத்தில் இருந்தே பயணத் தடை கொள்கையை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில், ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 12 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார். அதற்கான பிரகடனத்தில் புதன்கிழமை அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.
எந்த நாடுகள்? - 12 நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு முழு நுழைவுத் தடைகளை எதிர்கொள்கின்றன. அவை: ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு,...
காசாவில் உடனடி, நிரந்தர போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தது அமெரிக்கா
admin - 0
காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்த கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு மற்ற உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இஸ்ரேல் - காசா இடையே சில மாதங்களுக்கு முன் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு கைதிகள் மற்றும் பிணைக் கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வந்தனர். எஞ்சியுள்ள 58 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால், இஸ்ரேல்...
அமெரிக்கா – சீனா வரி தொடர்பான பேச்சு தடைபட்ட நிலையில் ஜி ஜின்பிங், ட்ரம்ப் தொலைபேசியில் ஆலோசனை
admin - 0
அமெரிக்கா - சீனா இடையே வரி தொடர்பான பேச்சு தடைபட்டிருந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலை பேசியில் பேசினார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றபின், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் வரிவிதிப்பில் நியாயமாக இல்லை என குற்றம்சாட்டினார். அமெரிக்க பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டிய அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிக்கப்போவதாக கூறினார். சீனப் பொருட்களுக்கான...










