பிரதமர் நரேந்​திர மோடி​யும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும் நேற்று தொலைபேசி​யில் 40 நிமிடங்​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்​தும், ஹார்​முஸ் ஜலசந்​தியைத் திறப்​பது குறித்​தும் இரு தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் இணைந்து தாக்​குதல் நடத்​தின. இதற்கு பதிலடி தரும் வகை​யில் வளை​கு​டா​வில் உள்ள அமெரிக்​கா​வின் நட்பு நாடு​கள்...
அமெரிக்கா​வின் தடையை மீறி சீன எரி​வாயு கப்​பல் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்​றது. இது அமெரிக்கா​வுக்கு விடுக்​கப்​பட்ட சவாலாக கருதப்படுகிறது. ஈரானை ஒட்டி அமைந்​துள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் இரு முனை​களி​லும் சரக்​கு, எண்​ணெய் கப்​பல் போக்​குவரத்தை அமெரிக்க கடற்​படை முடக்கி உள்​ளது. இந்த சூழலில் அமெரிக்​கா​வின் தடையை மீறி சீனா​வின் ரிச்ஸ்டாரி என்ற எரி​வாயு கப்​பல் நேற்று ஹார்​முஸ் ஜலசந்தியை கடந்​தது. இதில் 2.5 லட்​சம் பேரல் மெத்​த​னால்...
பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலம் தவுன்சா நகரில் அரசு வட்​டார மருத்​து​வ​மனை உள்​ளது. இதில் ‘பிபிசி நியூஸ்' நடத்​திய ஒரு ரகசிய ஆய்​வில் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்​டும் மீண்​டும் பயன்படுத்​துதல், ஒரே மருத்​துவ சாதனத்தை பல நோயாளி​களுக்கு பயன்​படுத்​துதல் என பல்​வேறு பாதுகாப்​பற்ற நடை​முறை​களை அம்​பலப்​படுத்​தி​யுள்​ளது. இதுவே எச்​ஐவி பரவலுக்​கும் வழி​வகுத்​துள்​ள​தாக தெரிய​வந்​துள்​ளது. தவுன்​சா​வில் 8 வயது சிறு​வன் எச்​ஐவி தொற்று உறு​தி செய்​யப்​பட்ட சிறிது நேரத்​திலேயே உயி​ரிழந்​தான். இறுதி நாட்​களில்,...
ஹார்முஸ் ஜலசந்தி முடக்​கத்தை அமெரிக்கா கைவிட வேண்​டும் என்று சவுதி அரேபியா வலி​யுறுத்தி வரு​கிறது. கடந்த 11-ம் தேதி அமெரிக்​கா, ஈரான் இடையே நடை​பெற்ற அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்தது. இந்த சூழலில் ஈரானை ஒட்டி அமைந்​துள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் இரு​புறத்​தி​லும் சரக்​கு, எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்தை அமெரிக்க ராணுவம் நேற்று முன்​தினம் முடக்​கியது. ஈரான் துறை​முகங்​களில் இருந்து வரும் எந்​தவொரு கப்​பலும் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து செல்ல முடி​யாது...
இரண்டு வார கால போர்நிறுத்தம் என்ற அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு உலகம் முழுவதும் மிகப் பெரிய நிம்மதியைக் கடத்தியது. அடுத்ததாக அமைதிப் பேச்சுவார்த்தை என்ற அறிவிப்பு, கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. “இனி, ஈரான் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும், வராவிட்டாலும் எனக்குக் கவலையில்லை; நான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப் போகிறேன்,” என்று டொனால்டு ட்ரம்ப் “ஐ டோண்ட் கேர்” மனநிலைக்குள் சென்றுவிட்டார். இந்நிலையில், ஈரான்...
கத்​தோலிக்க திருச்​சபை தலை​வர் போப் பற்றி விமர்​சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்த சில மணி நேரங்​களில், தன்னை இயேசு​வாக சித்​தரிக்​கும் ஏஐ புகைப்​படத்தை சமூக வலை​தளத்​தில் பதிவேற்​றம் செய்​துள்​ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேற்று முன்​தினம் கத்​தோலிக்க திருச்​சபை​யின் தலை​வர் போப் 14-ம் லியோ பற்றி செய்​தி​யாளர்​களிட​மும் சமூக வலை​தளங்​களி​லும் பல்​வேறு விமர்​சனங்​களை முன்​வைத்​தார். தான் போப்​பின் ரசிகர் அல்ல என்​றும் அவர் சிறந்த முறை​யில்...
ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடி​விட்​டோம் என்று அமெரிக்க ராணுவம் அறி​வித்து உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்​துள்​ளது. கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்​கா - ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி இருதரப்​பிலும் 2 வாரங்​களுக்கு போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக கடந்த 11-ம் தேதி பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. சுமார் 21...
ஈ​ரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை தாக்​கு​வோம் என்று ஈரான் ராணுவம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுதொடர்​பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்​டினென்ட் கர்​னல் இப்​ராகிம் ஸோல்​ப​காரி டெஹ்​ரானில் நேற்று கூறிய​தாவது: எங்​கள் எதிரி​களின் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க அனு​மதி வழங்​க​மாட்​டோம். இந்த ஜலசந்தி தொடர்ந்து எங்​களின் கட்​டுப்​பாட்​டில் மட்​டுமே இருக்​கும். சர்​வ​தேச சட்ட விதி​களுக்கு எதி​ராக அமெரிக்க ராணுவம் செயல்​பட்டு வரு​கிறது. ஹார்​முஸ் ஜலசந்​தியை...
ஈ​ரானின் எண்​ணெய் ஏற்​றும​தியை முடக்​கும் முயற்சி​யில் அமெரிக்கா தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடப்​போவ​தாக ட்ரம்ப் கூறியுள்​ளதன் எதிரொலி​யாக ஈரான் கச்சா எண்​ணெயைச் சுமந்து வந்த 2 சரக்​குக் கப்​பல்​கள் இந்​தி​யத் துறை​முகங்​களுக்கு அருகே நிறுத்​தப்​பட்​டுள்​ளன. கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமெரிக்​கா​வின் பொருளா​தா​ரத் தடைகளால் ஈரானிட​மிருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்தி வைத்​திருந்​தது. இருப்​பினும், மேற்கு ஆசி​யப் போர்ச் சூழலால் சர்​வ​தேச சந்​தை​யில்...
கடல் கண்​ணி வெடிகள் எங்​கெல்​லாம் இருக்​கின்றன என்​ப​தைக் கண்​டு​பிடிக்க முடி​யாத​தால் ஹார்​முஸ் ஜலசந்​தியை முழு​மை​யாக திறப்​ப​தில் சிக்​கல் நீடிக்​கிறது. அமெரிக்கா உடனான போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி முழு​வதும் நூற்​றுக்​கணக்​கான கண்​ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசி​யுள்​ளது. குறிப்​பாக கடலுக்கு அடி​யிலும், சில நூறு அடி ஆழத்​தி​லும் கடலுக்கு மேலே​யும் கண்ணி வெடிகள் வீசப்​பட்​டன. இதனால் சரக்​குக் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எரி​வா​யுக்​குத் தட்​டுப்​பாடு...