Google search engine
“பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வங்கதேச இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் ஆதரவு அளிக்கிறார்” என்று வங்கதேச மாணவர் லீக் தலைவர் சதாம் உசேன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு, நாட்டின் இடைக்கால அரசுக்கு ஆலோசகராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அவாமி லீக் கட்சியின் வங்கதேச மாணவர் லீக் தலைவர் சதாம் உசேன் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன்...
“மஸ்க் வருத்தம் தெரிவித்திருப்பது நன்று. அவர் மீது நான் எந்தக் குறையும் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் சற்று ஏமாற்றமடைந்தேன்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சரியாக ஒருவார காலத்துக்கு முன் பரஸ்பரம் விமர்சனங்களைத் தெறிக்கவிட்ட ட்ரம்ப் - மஸ்க் தற்போது ஆவேசம் தனிந்த கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கெனவே ட்ரம்ப் - மஸ்க் மோதலில் வார்த்தைகள் தடித்தபோது, பள்ளிக் குழந்தைகள் மோதலைப் போல்...
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிரான கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, நேஷனல் கார்டு படை வீரர்களுடன் தற்போது யுஎஸ் மரைன்ஸ் என்ற பாதுகாப்புப் படைப் பிரிவினைச் சேர்ந்த 700 வீரர்கள் லாஸ் எஞ்சல்ஸ் வரவழைக்கபட்டுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, தேசிய...
இஸ்ரேல் ராணுவத்தால் கடத்தப்பட்டதாக கிரேட்டா தன்பர்க் குற்றஞ்சாட்டிய நிலையில், ‘தன்பர்க் கோப மேலாண்மை வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவுரை வழங்கியுள்ளார். காசாவை நோக்கி நிவாரண கப்பலில் சென்ற தனது குழுவினருடன் கடத்தப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் நேற்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனை இஸ்ரேல் உடனடியாக மறுத்தது. நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை காசாவை நோக்கிச் சென்றபோது, ​​மேட்லீன் நிவாரணக் கப்பலை இஸ்ரேலியப் படைகள்...
 “எங்கள் நாட்டுக்குள் உரிய ஆவணங்களுடன் சட்டபூர்வமாக வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், விசா அத்துமீறல்கள் அனுமதிக்கப்படாது” என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளார். அந்த வகையில் சட்டவிரோத குடியேறிகள், பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக குடியேறியது உள்ளிட்ட காரணங்களுக்காக 1000+ இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் நேவார்க் விமான...
ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கிராஸ் நகரில் ஒரு பள்ளியில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அது ஓர் உயர்நிலைப் பள்ளி எனத் தெரிகிறது. திடீரென்று பள்ளியின் ஒரு பகுதியிலிருந்து துப்பாக்கிச்...
காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான மேட்லீனில் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கூறியுள்ளார். அதன்பின், அவர் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை அதிகாலை காசாவை நோக்கிச் சென்றபோது, ​​மேட்லீன் நிவாரணக் கப்பலை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்தன. அது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய கிரேட்டா தன்பர்க், "இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால், நாங்கள் சர்வதேச நீரில்...
இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்​ரோ) ககன்​யான் என்ற திட்​டத்தை 2027-ம் ஆண்டு செயல்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளது. மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்பி அவர்​களை மீண்​டும் பத்​திர​மாக பூமிக்கு அழைத்து வரு​வது​தான் இதன் நோக்​கம். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில்...
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, மோசமான வானிலை காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோசமான வானிலை காரணமாக, ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, ஜூன் 10-ம் தேதியில் இருந்து ஜூன் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி ஓடம் ஜூன் 11-ம்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன. அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக மெக்ஸிகோவை சேர்ந்த 40 லட்சம் பேர் அங்கு சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 7.25...