Google search engine
லிபிய முன்னாள் அதிபர் கடாபிக்கு ஆதரவாக செயல்பட தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்து கொண்ட வழக்கில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு பாரிஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. 2007 முதல் 2012 வரை பிரான்சின் அதிபராக இருந்தவர் நிகோலஸ் சர்கோஸி. 1969 முதல் 2011 வரை லிபியாவை ஆட்சி செய்தவர் மம்மர் கடாபி. கடாபி கொல்லப்பட்டதை அடுத்தே அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடாபிக்கு...
பி​ரான்​ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடை​பெற்ற அதிபர் தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக, லிபி​யா​வின் அப்​போதைய அதிபர் கடாஃபி​யிடம் சட்​ட​விரோத​மாக பணம் பெற்ற வழக்​கில், முன்​னாள் அதிபர் நிக்​கோலஸ் சர்​கோசிக்கு 5 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது. பிரான்​ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்​தலில் நிக்​கோலஸ் சர்​கோசி வெற்றி பெற்று அதிப​ரா​னார். அப்​போது தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக லிபி​யா​வின் அப்​போதைய அதிபர் மாமர் கடாஃபி​யிடம் இருந்து சட்​ட​விரோத​மாக நிதி பெற்​ற​தாக​வும், இதற்கு...
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு இந்திய மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. “வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். மருந்து நிறுவனங்கள்...
எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியதற்கு அந்த நாட்டு நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்திய மென்பொறியாளர்களை ஈர்க்க, அதிக நிபந்தனைகள் இல்லாத, எளிதில் பெறக்கூடிய ‘கே’ விசாவை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதன்மூலம், அமெரிக்க நிறுவனங்களில் இந்திய மென்பொறியாளர்கள்...
விசா கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானபோது, இந்தியாவுக்கு புறப்பட்ட மென்பொறியாளர்கள் பலரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கி சென்ற வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கடந்த 19-ம் தேதி இந்தியாவுக்கு எமிரேட்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் இந்திய மென்பொறியாளர்கள் அதிக அளவில் இருந்தனர். அப்போது எச்1பி விசாவுக்கான கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதையறிந்த இந்திய மென்பொறியாளர்கள்...
​பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் உள்ள ஒரு கிராமத்​தின் மீது அந்​நாட்டு விமானப் படை நடத்​திய தாக்​குதலில் அப்​பாவி மக்​கள் 30 பேர் உயி​ரிழந்​தனர். பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் தீவிர​வாத எதிர்ப்பு நடவடிக்​கை​யின் பெயரில் அந்​நாட்டு ராணுவம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதில் அப்​பாவி மக்​கள் பலர் கொல்​லப்​படு​வ​தாக தொடர்ந்து புகார் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் இந்த மாகாணத்​தின் திரா பள்​ளத்​தாக்​கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்​தில் நேற்று அதி​காலை​யில்...
காலிஸ்​தான் பிரி​வினை​வாத அமைப்​பு​கள் அமெரிக்​கா​வில் ‘சீக்​கியர்​களுக்​கான நீதி' (எஸ்​எப்​ஜே) என்ற பெயரில் செயல்​பட்டு வரு​கின்​றனர். இதன் கனடா நிர்​வாகி​யாக இந்​திரஜித் சிங் கோசல் (36) செயல்​பட்டு வந்​தார். குர்​பத்​வந்த் சிங் பன்​னுனின் வலதுகர​மாக கருதப்​படும் அவரை கனடா போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். கனடா​வின் இந்து கோயி​லில், பக்​தர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக, இந்​திரஜித் சிங் கோசல் கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் கைது செய்​யப்​பட்டு ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.
கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசித் தாக்கியதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் பஷ்துன் மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாட்ரே தாரா கிராமத்தில், பாகிஸ்தான் விமானப்படை ஜேஎஃப்-17 போர் விமானங்கள் எல்எஸ்-6 வகையைச் சேர்ந்த 8 குண்டுகளை வீசித் தாக்கின. இந்த தாக்குதலால் கிராமத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது, இதில் பலர் காயமடைந்தனர்....
ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை திருப்பித் தர வேண்டும் என ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து, பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாகவே பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். இதனிடையே...
எச்1பி விசா கட்டணத்தை ஆண்டுதோறும் செலுத்த தேவையில்லை. இது ஒருமுறை கட்டணம் மட்டுமே. ஏற்கெனவே எச்1பி விசா பெற்றவர்கள் புதிய கட்டணத்தை செலுத்த தேவை இல்லை என்று அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு உயர்த்தியது. இந்த புதிய கட்டண முறை நேற்று (செப்.21) முதல் அமலுக்கு வந்தது....