இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்த விவரங்களை வெளியிட்ட ஒரே நாளில், வெள்ளை மாளிகை அந்த அறிக்கையில் சில முக்கிய மாற்றங்களை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு, இந்தியாவுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார். அந்த ஒப்பந்தத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வெள்ளை மாளிகை முதலில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப்...
கழிப்பறை காகிதத்தைப் போல பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது என்றும், பாகிஸ்தான் தனது தவறுகளை ஏற்கவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தேசிய அவையில் உரையாற்றிய அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ‘‘கடந்த காலத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டது. ஆனால், தனது மூலோபாய நலன்களுக்காக அமெரிக்கா, பாகிஸ்தானை சுரண்டியது. அதன் நோக்கங்கள் நிறைவேறிய பிறகு, கழிப்பறை காகிதத்தைப் போல கருதியது.
1999க்குப் பிறகு...
கனடாவில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள தம்ப்ளர் ரிட்ஜ் என்ற நகரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய நபரும் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தோடு தொடர்புடைய ஒரு வீட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர்...
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதில் பாகிஸ்தானில் உள்ள போஹ்லாரி விமானப்படை தளத்தின் விமான நிறுத்தும் இடம் பலத்த சேதமடைந்தது. இந்நிலையில், அப்பகுதியை சீரமைக்கும் பணிகளில் பாகிஸ்தான் விமானப் படை ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, ஜனவரி 28 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களின் படி, சேதமடைந்த ஹேங்கரின்...
துபாயில் இந்தியப் பெண் தவறுதலாக குப்பையில் போட்ட ரூ.12 லட்சம் தங்கத்தை மீட்டுக் கொடுத்த போலீஸார்
admin - 0
இந்தியாவைச் சேர்ந்த காமினி கண்ணன் 23 ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார்.
ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மீண்டும் துபாய் சென்றிருந்தார். தனது மகன் அபிமன்யு வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தங்க நாணயங்கள் கொண்ட பை பழையதாகிவிட்டதால், அதை வேறு ஒரு பையில் மாற்றி டைனிங் டேபிளில் வைத்தார். அந்தப் பையில் தலா 8 கிராம் எடையுள்ள நான்கு 22 காரட்...
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஆண்டுதோறும் பிப்ரவரி 8 அன்று விமானப் படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தும் மரபை கைவிட்டுள்ளார்.
ஈரானில் முன்பு இருந்த மன்னராட்சியை வீழ்த்துவதற்காக 1979, பிப்ரவரி 8-ம் தேதி விமானப்படை அதிகாரிகள் குழு, ரூஹோல்லோ கோமேனிக்கு விசுவாசமாக இருப்பது என சத்தியப் பிரமாணம் எடுத்தனர். இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 8-ம் தேதி,...
கடந்த 2025 டிசம்பர் முதல் ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை ஒடுக்க ஈரான் மேற்கொண்ட நடவடிக்கையில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர அடக்குமுறைக்கு பதிலடியாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அப்போது முதல் இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கி விடக் கூடாது என்பதால் தங்கள் நாட்டுடன்...
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மலேசியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே இன்று பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
மலேசியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மலேசியா சென்டைந்தார்.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா -...
ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்சாய் சின் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’ – புதிய வரைபடம் வெளியிட்டது அமெரிக்கா
admin - 0
கடந்த 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக கடந்த 1947-48-ம் ஆண்டில் இரு நாடுகளிடையே போர் நடைபெற்றது. ஐ.நா. சபையின் தலையீட்டால் போர் முடிவுக்கு வந்தது.
இன்றளவும் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 1963-ம் ஆண்டில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ. பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தான் வழங்கியது. இந்தப் பகுதியை சீன அரசு, அக்சாய்...
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவரும் நிதி ஆலோசகருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்ற கோடீஸ்வரர், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் திரட்டப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2019-ல் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் ஜெப்ரி...
