Google search engine
 மியான்​மரில் மக்​களால் தேர்ந்​ தெடுக்​கப்​பட்ட ஆட்​சியை விரட்டி விட்​டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்​பற்​றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சி​யாளர்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்றனர். அவர்​களை ஒடுக்க ராணுவ​மும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில், பவுர்​ணமியை முன்​னிட்டு கடந்த திங்​கட்​கிழமை மத்​திய மியான்​மரில் உள்ள சவுங் யூ நகரில் புத்த மதத்​தினர் ஏராள​மானோர் கூடி விழா கொண்​டாடினர். அப்​போது புத்த மதத்​தினர் கூடி​யிருந்த பகு​திகளில் ராணுவத்​தினர் பாராகிளைடர்...
அக்.10, 2025... இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் நாள். அது, ஏற்கெனவே 7 போர்களை நிறுத்தியதாக முழங்கி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அறிவிக்கப்படுமா என்ற விவாதங்கள் எழுந்து ஓய்ந்துவிட்டன. இந்நிலையில், ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த முறை கிடைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக சில தரப்பும், அப்படி நடந்தால் அது அந்தப் பரிசுக்கே அவமதிப்பு என்று சிலரும் இப்போது கருத்து...
அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. மருத்​துவ நோபல் பரிசு நேற்று முன்​தினம் அறிவிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து இயற்​பியலுக்​கான நோபல் பரிசு விவரங்​களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்​சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்​ஹோமில் நேற்று வெளி​யிட்​டது. அமெரிக்​காவை சேர்ந்த ஜான்...
இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இஸ்​ரேல் ராணுவம் மற்​றும் காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்​டத்தை முன்​மொழிந்​துள்​ளார். போரி​னால் பாதிக்​கப்​பட்​டுள்ளகாசா மீண்​டும் கட்டி எழுப்​பப்​படும். அந்த பகு​தி​யில் இருந்து தீவிர​வாதம்...
மருத்துவத்துக்கான நோபல் பரிசு, நோய் எதிர்ப்புத் தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வெல்பவர்கள் குறித்த அறிவிப்பு...
ஆப்​பிரிக்​கா​வின் தெற்கு பகு​தி​யில் உள்ள எஸ்​வாட்​டினி நாட்​டின் அரச பரம்​பரை​யில் வந்​தவர் மெஸ்​வாட்​டி-3. பரம்​பரை வழி அரச​ரான மெஸ்​வாட்டி, கடந்த ஜூலை மாதம் தனது 15 மனை​வி​கள், 100 உதவி​யாளர்​கள் புடைசூழ தனி விமானத்​தில் அபுதாபியில் வந்​திறங்​கி​னார். அங்கு அவருக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. தற்​போது அரச​ராக உள்ள மெஸ்​வாட்​டி​யின் தந்தை சோபு​சா-2-வுக்கு 125 மனை​வி​கள் என்ற விஷய​மும் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. 15 மனை​வி​களு​டன் அரசர் மெஸ்​வாட்டி வந்​திறங்​கிய வீடியோ...
மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கிய​வர்​களுக்கு விஞ்​ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினை​வாக ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான நோபல் பரிசு வென்​றவர்​கள் குறித்த அறி​விப்பு நேற்று முதல் வெளி​யிடப்​படுகிறது. இந்த ஆண்​டுக்​கான மருத்​து​வத்​துக்​கான நோபல் பரிசு அமெரிக்​காவைச் சேர்ந்த மேரி இ பிரன்​கோவ், ஃப்​ரெட் ராம்​ஸ்​டெல் மற்​றும் ஜப்​பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு...
கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நகரமான சிடோர்ஜோவில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளிக் கட்டிடம் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) அன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கினர். இதனை தொடர்ந்து ஒரு வார காலமாக மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில்...
விக்​கிபீடி​யா​வுக்கு போட்​டி​யாக குரோக்​பீடியா என்ற தகவல் களஞ்​சி​யத்தை அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்க் விரை​வில் அறி​முகம் செய்​கிறார். கடந்த 2001-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்ட விக்​கிபீடியா உலகின் தகவல் களஞ்​சி​ய​மாக செயல்​படு​கிறது. விக்​கிமீடியா அறக்​கட்​டளை என்ற தொண்டு நிறு​வனம் விக்​கிபீடி​யாவை நிர்​வகித்து வரு​கிறது. இந்த தளம் சுமார் 300-க்​கும் மேற்​பட்ட மொழிகளில் தகவல்​களை வழங்கி வரு​கிறது. சுமார் 6.5 கோடிக்​கும் மேற்​பட்ட கட்​டுரைகள் இடம்​பெற்​றுள்​ளன. தற்​போது விக்​கிபீடி​யா​வுக்கு போட்​டி​யாக குரோக்​பீடியா என்ற...
ஜப்​பான் நாட்​டின் முதல் பெண் பிரதம​ராக சனே டகைச்சி தேர்ந்​தெடுக்​கப்​படு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஜப்​பான் நாட்​டில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்​டிபி) ஆட்​சி​யில் உள்​ளது. இக்​கட்​சி​யின் தலை​வர் மற்​றும் ஜப்​பான் பிரதமர் ஷிகெரு இஷி​பா, ஓராண்​டுக்​குப் பிறகு பதவி வில​கு​வ​தாக ஏற்​கெனவே அறி​வித்​திருந்​தார். இதற்​கிடை​யில், ஜப்​பான் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்​பான்மை இழந்​தது. இதனால் பிரதமர் பதவியை ஷிகெரு கடந்த மாதம் ராஜி​னாமா செய்​தார். அதனால், ஆளும்...