நேற்று (சனிக்கிழமை) மாலை லண்டன் செல்லும் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டான்காஸ்டரிலிருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு பீட்டர்பரோ நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே...
சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணம் ஹார்பின் நகரில் உள்ள ஒரு ரெசார்ட்டில் பாரம்பரிய சீன மருத்துவ முறைப்படி ஹாட்பாட் குளியல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5 மீட்டர் விட்டமுள்ள ஒரு வட்ட வடிவ தொட்டியில் வெந்நீர் நிரப்பப்பட்டுள்ளது. அது பார்வையாளர்களைக் கவர்கிறது. ஒரு பிரிவு சிவப்பாகவும், மற்றொரு பிரிவு வெள்ளை நிறத்திலும் உள்ளது அந்த தொட்டியில் சிவப்புப் பக்கம் உள்ள தண்ணீரில் மிளகாய், கத்தரிக்காய், முட்டைக்கோஸ் ஆகியவை நிரப்பப்பட்டுள்ளன. வெள்ளை பக்கம்...
சீனா மீதான இறக்குமதி வரியை 10% குறைத்த ட்ரம்ப்: ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்குப் பின் அறிவிப்பு
admin - 0
தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57%ல் இருந்து 47% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.
ஆசிய - பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, டொனால்டு ட்ரம்ப்பும் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி...
“இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதாலேயே இருநாடுகளும் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும், மீண்டும் தெரிவித்து வருகிறார். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்துவிட்டது....
பிரதமர் மோடி வலிமையான தலைவர், அவரை எனக்கு பிடிக்கும். தாமதமாகி கொண்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டு வருகிறது. ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதால், அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. அமெரிக்காவிடம் இருந்து சோளம் மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றை இறக்குமதி செய்ய வேண்டும் என...
சர்வதேச அமைதிக்கு இரு நாடுகள் இடையே வலுவான உறவு அவசியம்: ஜப்பான் புதிய பிரதமரிடம் மோடி தகவல்
admin - 0
சர்வதேச அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியா, ஜப்பான் உறவு வலுவாக இருப்பது அவசியம் என்று புதிதாக பதவியேற்றுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் புதிய மற்றும் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி கடந்த 21-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சனே தகைச்சி பிரதமராக...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்க ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆசியாவில் பயணம் மேற்கொண்டு வரும் டொனால்டு ட்ரம்ப், மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு, தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட அவர் மத்தியஸ்தம் செய்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து ஜப்பான் சென்ற ட்ரம்ப், அந்நாட்டின் புதிய...
ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து, காசா பகுதியில் உடனடியாக பலத்த தாக்குதல்களை நடத்துமாறு...
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் அவ்வப்போது போரில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மாதம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கத்தார் நாட்டில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின்படி தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
அடுத்த கட்டமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் கடந்த சில நாட்களாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை...
அம்மாவின் பிறந்தநாளை அடிப்படையாக வைத்து வாங்கிய டிக்கெட்: யுஏஇ லாட்டரியில் இந்தியருக்கு ரூ.240 கோடி பரிசு
admin - 0
யுஏஇ லாட்டரியில் இந்திய ருக்கு ரூ.240 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் (யுஏஇ) சேர்ந்த தி கேம் எல்எல்சி என்ற நிறுவனம் பல்வேறு வகையான லாட்டரிகளை நடத்தி வருகிறது.
இந்த யுஏஇ லாட்டரியின் குலுக்கல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது இதில் முதல் பரிசு பெற்றவரின் விவரம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதன்படி இந்தியாவைச் சேர்ந்த அனில் குமார் பொல்லாவுக்கு (29), ரூ.240 கோடி முதல் பரிசு...







