கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய விமானப் படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதில் தாக்குதல்களைத் தொடங்கியது. கடந்த 14 நாட்களாக இரு தரப்பும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேலிய விமானப் படை வெளியிட்ட தகவல்: கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின்...
“ஈரானின் பயங்கரவாத ஆட்சியை ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அழித்து வருகிறோம். இன்று என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்” என்று ஈரானை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய தாக்குதல் 13-வது நாளை எட்டியுள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கோ குறிவைப்பதற்கோ எதுவும் இல்லை என்றும் எப்போது வேண்டுமானாலும் போரை தான் முடித்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 8-ம் தேதி மோஜ்தபா தனது தந்தை அலி காமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், 12 நாட்களாக நீடித்து வரும் போரின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், மோஜ்தபா தனது ஒரு காலை...
அமெரிக்க விமானப் படையின் எரிபொருள் நிரப்பும் விமானம் இராக்கில் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று 14-வது நாளாக போர் நீடித்தது. ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்படுகிறது. இதற்காக அமெரிக்க விமானப் படையின் யு.எஸ்.கே.சி -135 ரக...
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று போரின் போது கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி உட்பட பல முக்கிய தலைவர்களை ‘ஈரானிய பயங்கரவாதத் தலைவர்கள்’ என்று குறிப்பிட்டு அமெரிக்க பாதுகாப்புத்...
“பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் கடமைப்பட்டதுபோல் அனுபவிக்கின்றனர்!”
- இந்த மேற்கோளை சுட்டிக் காட்டி தற்போதைய ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை விளக்க முற்படுகிறார், மத்திய கிழக்கு அரசியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிபுணரான ஃபரா என்.ஜான். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இவர் மூத்த விரிவுரையாளராக இருக்கிறார். அவரது பார்வையிலிருந்து...
“பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் அனுபவிக்கின்றனர்.”...
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பற்றி எரிந்த கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தெரியவில்லை.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்...
அமெரிக்காவில் ரூ.27 லட்சம் கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: ட்ரம்ப் அறிவிப்பு
admin - 0
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பற்றி எரிந்த கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தெரியவில்லை.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்...
இந்தியாவின் அதிகரித்து வரும் எல்என்ஜி எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யத் தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: வரும் 2040-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிவாயு தேவை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிசக்தி வல்லரசு என்ற முறையில் இந்தியாவின் அதிகரித்து வரும் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய கனடா தயாராக உள்ளது. உலகின் மிகக் குறைந்த...
அமெரிக்க, இஸ்ரேலிய கூட்டுப்படை மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நேற்று 12-வது நாளை எட்டியது.
ஈரான் தனது எல்லையை ஒட்டிய ஹார்முஸ் ஜலசந்தியை ஏற்கெனவே முடக்கியுள்ளது. அவ்வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை மிதக்கவிடும் ஈரானின் திட்டத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 16 ஈரானிய கண்ணிவெடி...










