சீனாவில் கியூஆர் கோடு அட்டையுடன் ஒரு ரோபோ தெருவில் மண்டியிட்டு யாசகம் கோரும் வீடியோ வைரலாக பரவிவருகிறது.
சீனாவின் ஹாங்சோ நகரை தலைமையிடமாகக் கொண்டு யூனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் மனித வடிவிலான ரோபோக்களை உற்பத்தி செய்து வருகிறது. ஒரு ரோபோவின் ஆரம்ப விலை ரூ.16 லட்சமாக உள்ளது. இந்த ரோபோக்கள் பெரும்பாலும் வீட்டு உபயோக பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தீயணைப்பு உள்ளிட்ட பேரிடர் மீட்புப் பணிகளிலும்...
“ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி” – ஐநா பாதுகாப்பு சபையில் இந்திய தூதர் பேச்சு
admin - 0
“ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே கடந்த காலத்தில் இருந்தது, தற்போதும் இருக்கிறது, இனியும் இருக்கும்.” என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி தெரிவித்தார்.
சர்வதேச பாதுகாப்பில் உள்ள செயல்பாட்டு இடைவெளியைக் குறைத்தல், பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை பேணுதல் என்ற தலைப்பில் நடைபெற்ற பாதுகாப்பு சபையின் அர்ரியா - ஃபார்முலா கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், “காஷ்மீர் தொடர்பாக...
கடனுக்கு உத்தரவாதம் அளித்ததால் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.100 கோடி வழங்க நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு
admin - 0
துபாய் வைர நிறுவனம் ஒன்றுக்கு கடன் வழங்க நீரவ் மோடி உத்தரவாதம் அளித்ததால், அவர் ரூ.100 கோடிக்கு மேல் செலுத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,498 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு லண்டன் சிறையில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு அனுப்ப மத்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் மனித உரிமைகளுக்காக ஐரோப்பிய நீதிமன்றத்தில் மனு...
லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் மிகப் பெரிய இரட்டை நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதில் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் நிலைகுலைந்துள்ளன.
வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி) 39 விநாடிகள் இடைவெளியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த அதிர்வுகளால் கரீபியன் தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
அதிகாரபூர்வ...
கத்தாரின் எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கத்தார் எரிசக்தித் துறை அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கத்தாரின் ராஸ் லஃப்பான் தொழில் துறை பகுதியில் உள்ள ‘பர்சான்' எரிவாயு விநியோக ஆலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 13 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 66 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு...
“நண்பர்களைப் பகைத்துக் கொண்டு எதிரிகளுக்குப் பணிந்து போகிறார் ட்ரம்ப்” – மெலோனி கடும் தாக்கு
admin - 0
பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இத்தாலி டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி என்னுடன் போட்டா எடுக்கக்கெஞ்சினார். அவர் மீது பரிதாபப்பட்டு போட்டோ எடுத்துக் கொண்டேன்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த மெலோனி, ‘‘நட்பு நாடுகளின் தலைவர்களைப் பற்றி அவதூறு கருத்துகளை ட்ரம்ப் கூறுவது இது முதல் முறையல்ல. அவர் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்....
லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா போன்ற தங்களின் ஆதரவு அமைப்புகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஈரான் மீது மீண்டும் மிக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு, “அமெரிக்கா தனது வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று ஈரான் எச்சரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் “லெபனானில் உள்ள தங்களின் அதிக ஊதியம் பெறும்...
ஈரான் ஒப்பந்த விவரங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லாததே காரணம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட கத்தாருடன் இணைந்து உதவிய நாடு பாகிஸ்தான். இந்த இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 15-ம் தேதியே அறிவித்தார். எனினும், ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகே வெளியிடப்பட்டன.
இந்நிலையில், இந்த...
“என் செல்வாக்கை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” – ட்ரம்புக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி
admin - 0
பிரான்சில் அண்மையில் நடந்து முடிந்த ஜி7 உச்சிமாநாட்டில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு பலமுறை கெஞ்சினார் என்றும், இத்தாலியில் சரிந்து வரும் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தவே அவர் இவ்வாறு செய்கிறார் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.
ட்ரம்பின் இந்த விமர்சனங்களுக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார். “அதிபர் ட்ரம்ப்...
சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா பற்றி ஐ.நா. முன்னாள் அதிகாரி சித்தார்த் சாட்டர்ஜி எழுதிய “மை ஃபைவ் டு த்ரைவ்” என்ற நூலை சீனா சர்வதேச வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு முகமையின் தலைவர் லுவோ ஜாவோஹுய் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் வெளியிட்டு பேசியதாவது: சீனாவுக்கான ஐநா ஒருங்கிணைப்பாளராக இருந்த சாட்டர்ஜி, சீன அரசு, கல்வித்துறை மற்றும்...








