அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைனும், ரஷ்யாவும் நெருங்கியுள்ளன. இது சிக்கலானதாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று புளோரிடாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார். அதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், அதிபர் ட்ரம்ப் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரண்டரை மணி நேரம் போனில் பேசினார்.
இரு தலைவர்களுடனும் பேசிய...
வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அனைத்து இந்திய ஷியா தனிச் சட்ட வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அனைத்து இந்திய ஷியா தனிச் சட்ட வாரியத்தின் (ஏஐஎஸ்பிஎல்பி) வருடாந்திர கூட்டம் லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் ஏஐஎஸ்பிஎல்பி பொதுச் செயலாளர் மவுலானா யசூப் அப்பாஸ் கூறியதாவது: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டித்தது.
மேலும், அப்பாவி மனிதர்கள் யாரையும் கொல்வதை...
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா இன்று (டிச. 30) அதிகாலை காலமானார். நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டாக்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்ததாக அவரது கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கலீதா ஜியா, கல்லீரல்...
வங்கதேசத்தில் பிரோஜ்பூர் பகுதியில் 5 இந்து குடும்பங்களின் வீடுகள் நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்டன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன் பிறகு அந்த நாட்டில் வசிக்கும் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை சுமார் 2,500-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. சுமார் 150-க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு உள்ளன. சுமார் 25 இந்துக்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் வங்கதேச மாணவர் அமைப்பின்...
இந்தோனேசியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 முதியவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வடக்கு சுலவேசி காவல் துறை செய்தித் தொடர்பாளர் அலாம்சியா ஹசிபுவான் நேற்று கூறியதாவது: இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 16 முதியவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். உயிர்பிழைத்த...
வங்கதேசத்தில் மாணவர் சங்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலை வழக்கில், சந்தேக நபர்கள் இருவர் வங்கதேசத்தை விட்டு தப்பி சென்றுவிட்டதாகவும், அவர்கள் இந்தியாவில் இருக்கலாம் என நம்பப்படுகிறது என அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வங்கதேச மாணவர் சங்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி (32) தலைநகர் டாக்காவில் கடந்த 12-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, துப்பாக்கியால் சுடப்பட்டார். சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர்...
மியான்மரில் ஆங் சான் சூகி அரசை நீக்கிவிட்டு 2021 முதல் ராணுவப் புரட்சி மூலம் ராணுவ தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லாங் ஆட்சி புரிந்து வருகிறார்.
தற்போது ஆங் சான் சூகி வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் இந்நிலையில், ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த சூழலில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது....
கனடாவின் டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே 20 வயது இந்திய முனைவர் பட்டப்படிப்பு மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில், தரையில் காயமடைந்த நிலையில் ஒருவர் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், ஹைலேண்ட் க்ரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலைப் பகுதிக்கு காவல் துறையினர் சென்றனர்.
அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தபோது,...
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் பெரும்பான்மையாக அலவைட் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இமாம் அலி பின் அபி தாலிப் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமடைந்தனர்.
ஹோம்ஸ் நகரத்தின் இமாம் அலி பின் அபி தாலிப் மசூதிக்குள் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த மசூதி, சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் உள்ள வாடி அல்-தஹாப் சுற்றுப்புறத்தில்,...
டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்றும், தன்னால் கட்டப்பட்ட ‘நோவா பேழை’ மட்டுமே மக்களைக் காப்பாற்றும் என்றும் அறிவித்திருந்த கானா நாட்டு நபர் தற்போது அந்த தேதியை கடவுள் தள்ளிவைத்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
கானாவைச் சேர்ந்த எபோ நோவா என்ற நபர், பைபிளில் கூறப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு பிரம்மாண்டமான பேழையை கடந்த சில ஆண்டுகளாகக் கட்டி வந்தார். 2025ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று உலகம் முழுவதும் பெரும் வெள்ளம் ஏற்படும்...
