தங்களுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி​யையும் அவரது பாரம்பரியத்தையும் கவுரவிக்கும் நோக்கில் அவரது இறுதிப் பேரணியில் லட்சக்கணக்கான ஈரானியர்கள் பெருமையுடனும் ஒற்றுமையுடனும் ஒன்றுகூடினர். அவர்களோ ஈரானின் வீரமிக்க ஆயுதப்படைகளோ எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை. அமெரிக்கா...
கடுமையான வெப்ப அலை மீண்டும் உருவாகி வருவதால் ஐரோப்பாவுக்கு இன்னும் அதிக கொடிய வாரங்கள் காத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பாவுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பிராந்திய இயக்குநர் ஹன்ஸ் க்ளூஜ், 41 நாடுகளின் பிரதிநிதிகளுடன் அவசர ஆலோசனையை மேற்கொண்டார்....
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிபொருளுடன் சென்ற மூன்று சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பிரிட்டிஷ் ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த அண்மைய தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சரக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்புவது...
ஈ​ரானின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனியின் இறு​திச் சடங்கு டெஹ்​ரானில் நடை​பெற்​றது. இதுகுறித்து ஈரானின் அதி​காரப்​பூர்வ செய்தி நிறு​வன​மான ‘தஸ்னிம்’ வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “கமேனி​யின் இறு​திச் சடங்​கில் பங்​கேற்​கக் கூடாது என அமெரிக்கா அழுத்​தம் கொடுத்தது. இதனால், இறுதி நேரத்​தில் 13 நாடு​கள் தங்​களது முடிவை மாற்​றிக்​கொண்​டன. ஆனால் இதை​யும் மீறி கமேனி​யின் இறு​திச் சடங்​கில் பங்​கேற்ற இந்​திய அரசுக்​கும், அம்​மக்​களுக்​கும் எங்​களது நெஞ்​சார்ந்த நன்​றிகள்” என கூறப்​பட்​டு...
இந்​திய தொழில​திபர் கவுதம் அதானி மற்​றும் 7 பேர் மீதான குற்​றச்​சாட்​டு​களை திரும்​பப் பெற்​றதற்​கும், அமெரிக்காவில் அதானி குழு​மத்தின் ரூ.95,000 கோடி முதலீட்​டுத் திட்​டத்​துக்கும் தொடர்​பு இல்லை என்று அமெரிக்க நீதித்துறை திட்டவட்டமாக மறுத்​துள்​ளது. அதானி குழு​மம் மீதான ஊழல் வழக்கை வாபஸ் பெறு​வது குறித்த விரி​வான விளக்​கத்தை அளிக்​கு​மாறு அமெரிக்க ஃபெடரல் நீதி​மன்ற நீதிபதி உத்​தர​விட்​டிருந்​தார். அதற்​குப் பதிலளித்து அமெரிக்க முதன்மை இணை துணை அட்டர்னி ஜெனரல் ஆர். ட்ரெண்ட்...
“இஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த கூட்டாளிகள் இல்லை" என்ற அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸின் கூற்றை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார். போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு சக்திவாய்ந்த நட்பு நாடு இல்லை என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்திருந்தார். அதோடு, கடந்த மூன்று மாதங்களாக இஸ்ரேலைப் பாதுகாக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் அமெரிக்க...
இலங்கை​யின் மேற்​குக் கடற்​கரை நகர​மான நீர்கொழும்புவில் உள்ள சிறை​யில் நேற்றும் இன்றும் நிகழ்ந்த கைதிகளின் மோதலில் 26 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் உள்ள ​சிறை​யில் 1,800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதற்கு ஆதரவாக உள்ள குழுவுக்கும், எதிராக உள்ள குழுவுக்கும் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கலவரமாக...
அரசு​முறைப் பயண​மாக இந்​தோ​னேசி​யா​வுக்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் ஜகார்த்​தா​வில் உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. அதிபர் பிர​போவோ சுபி​யாந்​தோ, விமான நிலை​யத்​துக்கே வந்து வரவேற்​றார். இந்​தோ​னேசி​யா, ஆஸ்​திரேலி​யா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளில் பிரதமர் மோடி 6 நாள் அரசு​முறைப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். டெல்​லி​யில் இருந்து நேற்று புறப்​பட்ட அவர் இந்தோ​னேசியா தலைநகர் ஜகார்த்​தாவை வந்​தடைந்​தார். பிரதமர் மோடி​யின் விமானம் இந்​தோ​னேசிய வான்​பரப்​புக்​குள் நுழைந்​த​தில் இருந்​தே, இந்​தோ​னேசிய விமானப் படை​யின்...
பஞ்​சாப் நேஷனல் வங்கி (பிஎன்​பி) மோசடி வழக்​கில் தேடப்​பட்டு வரும் பிரபல வைர வியா​பாரி நீரவ் மோடியை இந்தியா​வுக்கு நாடு கடத்​து​வதற்​கான இறு​திக்​கட்ட பணி​கள் தீவிரமடைந்​துள்​ளன. ரூ.14,000 கோடிக்​கும் அதி​க​மான பிஎன்பி வங்கி மோசடி மற்​றும் சட்​ட​விரோத பணப் பரி​மாற்ற வழக்​கு​களில் நீரவ் மோடி முதன்மை குற்​ற​வாளி​யாகச் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இதுகுறித்து சிபிஐ மற்​றும் அமலாக்​கத்​துறை ஆகியவை தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றன. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில்...
ஈரானின் உச்ச தலை​வ​ராக இருந்த அயத்​துல்லா அலி கமேனி கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்​திய கூட்​டுத் தாக்​குதலில் கொல்​லப்​பட்​டார். அவருடன் அவரது மூத்த மகள், மரு​மகன், மரு​மகள், 14 மாத பேத்தி ஆகியோ​ரும் கொல்​லப்​பட்​டனர். போர் தொடர்ந்​த​தால் அவர்​களின் இறு​திச் சடங்கு நடை​பெற​வில்லை. தற்​போது போர் பதற்​றம் தணிந்​துள்ள சூழலில், தலைநகர் டெஹ்​ரானில் கமேனி உள்ளிட்ட உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு இறு​திச்​சடங்கு நிகழ்​வு​கள் நேற்று முன்​தினம்...