வங்கதேசத்தில் உள்ள எரி பொருள் நிரப்பும் மையத்தில் இந்து இளைஞர் ஒருவர் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இது இனரீதியான தாக்குதலா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தின் கோலண்டா மோர் என்ற பகுதியில் கரிம் என்ற பெயரில் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை நான்கரை மணிக்கு கருப்பு நிற எஸ்யுவி வாகனம் ஒன்று எரிபொருள் நிரப்ப வந்தது. எரிபொருள் நிரப்பிய பின்...
“வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்” – கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
admin - 0
கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கிரின்லாந்து விவகாரத்தில் அமரிக்காவின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்க 10% கூடுதல் வரி விதிக்கப்படும்...
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் மூத்த தலைவர் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து அமெரிக்காவின் ராணுவ அமைப்பான சென்ட்காம் (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில், ’அமெரிக்கப் படைகள் ஜனவரி 16 அன்று இந்தத் தாக்குதலை நடத்தியது. இதில், பிலால் ஹசன் அல்-ஜாசிம் என்ற அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார். இவர், டிசம்பரில் அமெரிக்க வீரர்கள்...
சுவிட்சர்லாந்தின் எழில்மிகு டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (டபிள்யூஇஎப்) 56-வது ஆண்டு கூட்டம் இன்று தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், இந்தியாவிலிருந்து மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், சிவராஜ் சிங் சவுகான், பிரகலாத் ஜோஷி, கே.ராம்மோகன் நாயுடு ஆகிய 4 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும், மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ம.பி.முதல்வர் மோகன் யாதவ்,...
வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த டிசம்பர் 2ம் தேதி பிரந்தோஷ், உப்தால் சர்க்கார், டிசம்பர் 7ம் தேதி ஜோகேஷ் சந்திர ராய், சுபோர்ணா ராய், டிசம்பர் 12ம் தேதி சாந்தோ சந்திர தாஸ், டிசம்பர் 18ம் தேதி திபு சந்திர தாஸ், டிசம்பர் 24ம் தேதி அம்ரித் மண்டல், டிசம்பர் 29ம் தேதி பஜேந்திர பிஸ்வாஸ், டிசம்பர் 31ம் தேதி கோகன் சந்திர தாஸ்,...
பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவாக கிரீன்லாந்து உள்ளது.
இது டென்மார்க் நாட்டின் கீழ் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. கிரீன்லாந்தை சுற்றியுள்ள கடல் பகுதிகள் தற்போது ரஷ்யா, சீன கப்பல்களால் நிரம்பியுள்ளதாகவும் அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் கிரீன்லாந்து இணைக்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார். இதற்கு டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில்...
இங்கிலாந்தின் மேற்கு லண்டனில் உள்ளது ஹவுன்ஸ்லோ பகுதி. இங்கு 20 பள்ளிகள் உள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் இந்தப் பள்ளிகளில் பயிலும் டீன் ஏஜ் பெண்களை குறிவைத்து காதல் வலையில் சிக்க வைக்கின்றனர். பின்னர் இவர்களை தங்கள் குழுவினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த இளம் பெண்களை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.
இந்தக் கும்பல் இங்கிலாந்து பெண்களை மட்டும் அல்லாமல் லண்டனில் உள்ள சீக்கிய பெண்களையும்...
ஈரானில் ரேசா பஹ்லவியால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு தேவையான ஆதரவை பெற முடியுமா என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரான் நாட்டில் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. அயத்துல்லா அலி காமேனி மற்றும் அதிபர் மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தை ஒடுக்க ராணுவ வீரர்கள் நடத்திய...
ஈரானில் நிலவும் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் அங்கு நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் கையாளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக அங்குள்ள இந்தியர்கள் விமானங்கள்...
வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, கடந்த ஆண்டு தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கான பதக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்தப் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிபர் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் அவர் சந்தித்து பேசினார். அப்போது...
