அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிக கப்பல்களுக்கு 20 சதவீத பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளார். இந்த நீர்வழிப்பாதையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள உடன்பட்டுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை அவர் அறிவித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல்  பக்கத்தில் அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: “மத்திய கிழக்கு...
ஹார்முஸ் ஜலசந்தி பகு​தி​யில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல் நடத்தி​யது. இதில் ஓர் இந்​திய மாலுமி உயி​ரிழந்​தார். 10 இந்​திய மாலுமிகள் படு​கா​யம் அடைந்​தனர். இதுதொடர்​பாக ஈரான் தூதரக அதி​காரி​களை நேரில் வரவழைத்து மத்​திய அரசு கண்டனம் தெரி​வித்​துள்​ளது. கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்​கா, ஈரான் இடையே போர் மூண்​டது. பல்​வேறு நாடு​களின் சமரசத்​தால் கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி இரு...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நில​வும் கடும் பொருளா​தார நெருக்​கடி, மின்​சார தட்​டுப்​பாடு மற்​றும் பாகிஸ்தான் அரசின் அடக்​கு​முறைக்கு எதி​ராக பொது​மக்​கள் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில் ரவால​கோட் புதிய பேருந்து நிலை​யம் அருகே நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்த மக்​களை பாது​காப்பு படையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்​றனர். அப்​போது இருதரப்​பிலும் மோதல் ஏற்​பட்​டது. இதையடுத்து பாது​காப்பு படையினர் நடத்​திய துப்​பாக்​கிச்​சூட்​டில் 6 பேர் உயி​ரிழந்​தனர். இது, பாகிஸ்​தான் அரசுக்கு எதி​ரான...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு ரஷ்யா நேற்று வெற்​றிகர​மாக அனுப்​பியது. அமெரிக்​கா, ரஷ்​யா, ஐரோப்​பிய ஒன்​றி​யம், ஜப்​பான், கனடா ஆகியவை இணைந்து சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை அமைத்​துள்​ளன. இந்த விண்​வெளி நிலை​யத்​துக்கு அமெரிக்​கா​வின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் டிராகன், ரஷ்​யா​வின் சோயூஸ் விண்​கலங்​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. தற்​போது சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் 7 விண்​வெளி வீரர்கள் தங்​கி​யிருந்து ஆய்வு செய்​கின்​றனர். பொது​வாக...
நவீன அறிவியல் உலகமும், இயற்பியல் துறையும் இன்று இவரின் பெயரை உச்சரிக்காத நாட்களே இல்லை. ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என்று ஹார்வார்டு பல்கலைக்கழகமே கொண்டாடும் பெண்ணாக சப்ரினா கோன்சலேஸ் பாஸ்டர்ஸ்கி உருவெடுத்துள்ளார். 14 வயதில் தனக்கான விமானத்தை தானே தயாரித்து, அதில் பறந்து காண்பித்தவர். இயற்பியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங்கால் புகழப்பட்டவர். நாசா, ப்ளூ ஆரிஜின், மெட்டா, கூகுளில் இருந்து கோடிக்கணக்கான சம்பளத்தில் வந்த வேலையை உதறிவிட்டு இயற்பியலில் விடை தெரியாத...
ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், இப்பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கும் அமெரிக்காவுக்கு, இந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் அவற்றின் சரக்கு மதிப்பில் 20 சதவீதத்தை பாதுகாப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.  ஈரானுடன் அண்மையில் எட்டப்பட்டிருந்த தற்காலிக அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள...
தாய்லாந்தின் பாங்காக் நகரில் கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்​பட்ட பயங்கர தீ விபத்​தில் 27 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 73 பேர் காயம் அடைந்​தனர். தாய்​லாந்து தலைநக​ரான பாங்​காக் நகரின் சட்​டுசக் பகு​தி​யில் ‘ராங் பீர் நா லாட் ப்ராவ்’ என்ற பெயரில் பிரபல மது​பான மற்​றும் கேளிக்கை விடுதி உள்​ளது. இந்த விடு​தி​யில் நேற்று முன்​தினம் இரவு மேடைக்கு அரு​கில் இருந்த மின்​சாதனம் திடீரென வெடித்து தீப்​பற்​றியது. இதையடுத்து...
அமெரிக்கா​வுட​னான மோதல் முற்​றி​யுள்​ளதையடுத்து குவைத்​தில் உள்ள அதன் ராணுவ தளங்​கள் மீது ஈரான் உக்​கிர தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. அமெரிக்கா​வுக்​கும் ஈரானுக்​கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்​போது அண்டை நாடு​களுக்​கும் பரவி புதிய உச்​சத்தை எட்​டி​யுள்​ளது. அமெரிக்​கா​வின் தொடர் வான்​வழித் தாக்​குதல்​களுக்​குப் பதிலடி கொடுக்​கும் வகை​யில், ஈரான் கண்​ணுக்கு கண் அதாவது ‘பழிக்​குப்​பழி’ வாங்​கும் தனது ராணுவ நடவடிக்​கை​யின் மூன்​றாம் கட்​டத்​தைத் தொடங்​கி​யுள்​ளது. ஈரான் தனது முதற்​கட்ட நடவடிக்​கை​யில் ஜோர்​டானில்...
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும், எட்டு பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஆறு பேர் இந்தியர்கள். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மோதல் மோதல் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பும் போர்நிறுத்தத்தை அறிவித்தன. தொடர்ந்து கடந்த மாதம் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதை...
வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். செல்போன் நிறுவனம் தனது விநியோகஸ்தர்களை சிறப்பு சுற்றுலா அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் அன்ஜியாங் மாகாணத்தில் பூகுவோக் தீவு அமைந்துள்ளது. இந்தியாவில் இருந்து 32 சுற்றுலா பயணிகள் சில நாட்களுக்கு முன்பு இந்த தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்....