சவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் நகரில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான 6-வது ஆசிய தடகள போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் 5 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் இந்தியாவின் நித்தின் குப்தா பந்தய தூரத்தை 20:21.51 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் சூ நிங்காவ் (20:21.50) தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சீன தைபே வீரரான ஷெங் கின் லோ (21:37.88) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் ஐஎஸ்எஸ்ஃஎப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சுருச்சி சிங் 243.6 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற மனு பாகர் 242.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் யாவோ குயான்சுன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 112 ரன்கள் இலக்கை விரட்டிய நடப்பு சாம்பியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ரகுவன்ஷி 37, கேப்டன் அஜிங்க்ய ரஹானே 17, ஆந்த்ரே ரஸ்ஸல் 17 ரன்கள் சேர்த்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில் யுவேந்திர சாஹல் 4...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் நடப்பு சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது....
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் நவீன கால டி20 கிரிக்கெட்டில் காண கிடைக்காத முழுமையாக பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்திய போட்டியாக இருந்தது சற்று வியக்கவைத்தது.
ஏனெனில் ஐபிஎல் தொடர் வணிக ரீதியிலானது. இங்கு 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்படும் ஆட்டங்களையும், 10...
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக நீண்ட ஓவர் வீசிய பவுலர்களில் ஒருவர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா. புதன்கிழமை (ஏப்.16) அன்று டெல்லி கேபிட்டல்ஸ் உடனான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி பேட் செய்தபோது கடைசி ஓவரை ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா வீசினார். அந்த ஓவரில் மொத்தம் 11 டெலிவரிகளை அவர் வீசினார்.
நான்கு ஒய்டு (Wide), ஒரு...
அசத்திய தொடக்க வீரர்கள், ஆட்டம் கண்ட நடுவரிசை, கரை சேர்த்த தோனி: தொடர் தோல்விகளுக்கு சிஎஸ்கே முற்றுப்புள்ளி
admin - 0
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த லக்னோ அணியை 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்கள் என்ற நிலையில் சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் மட்டுப்படுத்தினர். அதிகபட்சமாக ரிஷப் பந்த் 49 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்தார்.
மிட்செல்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் 167 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே 3 பந்துகளை மீதம் வைத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷேய்க் ரஷீத் 27, ரச்சின் ரவீந்திரா 37, ஷிவம் துபே 43 ரன்கள் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் தோனி 11 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 26...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடடிரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்திய நிலையில் தனது கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 205 ரன்கள் இலக்கை துரத்திய அந்த...
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்கிறது. அதேவேளையில் இருதரப்பு டி 20 தொடரை வங்கதேச அணிக்கு முதன்முறையாக இந்திய அணி விளையாட உள்ளது.
ஒருநாள் போட்டித் தொடரின்...










