ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் பங்​கேற்​கும் ஆஸ்​திரேலிய அணியி​லிருந்து பாட் கம்​மின்ஸ் வில​கி​யுள்​ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி பிப்​ர​வரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் இந்த போட்​டிக்​கான 15 பேர் கொண்ட ஆஸ்​திரேலிய அணி அறிவிக்​கப்​பட்​டது. காயத்​தில் இருந்து குணம் அடைந்த பாட் கம்​மின்​ஸ், ஜோஷ் ஹேசில்​வுட், டிம் டேவிட்...
ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யில் பரோடா அணிக்​கெ​தி​ராக தமிழ்​நாடு அணி தனது முதல் இன்​னிங்​ஸில் 7 விக்​கெட் இழப்​புக்கு 411 ரன்​கள் குவித்​துள்​ளது. இதன்​மூலம் தமிழக அணி 36 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்​ளது. பரோ​டா, தமிழ்​நாடு அணி​களுக்கு இடையி​லான இந்​தப் போட்டி சேலம் எஸ்​சிஎஃப் கிரிக்​கெட் மைதானத்​தில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்​கியது. முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய பரோடா அணி 375 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து தமிழ்​நாடு அணி தனது...
19 வயதுக்​குட்​பட்​டோருக்​கான உலகக் கோப்பை போட்​டி​யில் பங்​கேற்​கும் இந்​திய அணி வீரர்​களுக்கு கிரிக்​கெட் ஜாம்​ப​வான் சச்​சின் டெண்​டுல்​கர் அறி​வுரை வழங்​கி​னார். 19 வயதுக்​குட்​பட்​டோருக்​கான உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி ஜிம்​பாப்​வே, நமீபியா நாடு​களில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தப் போட்​டி​யின் சூப்​பர் சிக்ஸ் லீக் ஆட்​டத்​தில் இன்று இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​கள் மோதவுள்​ளன. இந்​தப் போட்​டி​யில் வெற்றி பெறும் அணி எளி​தாக உலகக் கோப்​பை​யின் அரை இறு​திக்கு முன்​னேறும். எனவே, இரு...
எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகிறது. ஐசிசி டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 7-ம் தேதி இந்​தி​யா, இலங்​கை​யில் தொடங்குகிறது. இதில் 20 அணி​கள் கலந்து கொள்கின்றன. இந்​தத் தொடரில் பாகிஸ்​தான் அணி ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்றுள்​ளது....
19 வயதுக்​குட்​பட்​டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்​பர் சிக்​ஸ் ஆட்டத்தில் பாகிஸ்தானை 58 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. இதன் மூலம் இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. இந்த தொடர் நமீபி​யா, ஜிம்​பாப்வே ஆகிய நாடு​களில் நடை​பெற்று வரு​கின்​றன. இதன் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணிகள் பந்து வீச...
அடுத்​தடுத்து உலகக் கோப்​பையை வெல்​லும் வாய்ப்பு இந்​திய கிரிக்​கெட் அணிக்கு உள்​ள​தாக இந்​திய அணி​யின் முன்​னாள் பயிற்​சி​யாளர் ரவி சாஸ்​திரி தெரிவித்​துள்​ளார். இந்​திய கிரிக்​கெட் அணி வரும் 7-ம் தேதி தொடங்​க​வுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் பங்​கேற்​க​வுள்​ளது. இந்​நிலை​யில், வரும் உலகக் கோப்​பைப் போட்​டி​யில் இந்​திய அணி​யின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்​னாள் தலை​மைப் பயிற்​சி​யாளர் ரவி சாஸ்​திரி​யிடம் நிருபர்​கள் நேற்று கேள்வி எழுப்​பினர். அதற்கு ரவி...
சந்​தோஷ் டிராபி கால்பந்து போட்​டி​யின் கால் இறு​திச் சுற்​றில் விளை​யாட தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்​ளது. அசாம் மாநிலம் டகு​கானா மற்​றும் சிலப்பதரில் சந்​தோஷ் டிராபி கால்​பந்து தொடரின் இறுதிக்கட்ட சுற்று நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு அணி நேற்று உத்​த​ராகண்ட் அணி​யுடன் சிலப்​ப​தர் கால்​பந்து மைதானத்​தில் மோதி​யது. இதில் தமிழ்​நாடு அணி 1-0 என்ற கோல் கணக்​கில் உத்​த​ராகண்ட் அணியை வீழ்த்தி கால்...
இந்​தி​யா, நியூஸிலாந்து அணி​கள் மோதும் 5-வது மற்​றும் கடைசி சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்டி திரு​வனந்​த​புரத்​தில் இன்று நடை​பெறவுள்​ளது. திரு​வனந்​த​புரத்​தி​லுள்ள கிரீன்​பீல்ட் சர்​வ​தேச மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு இப்​போட்டி நடைபெறவுள்ளது. 5 போட்​டிகள் கொண்ட இந்​தத் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்ளது. தொடர்ச்​சி​யாக 3 போட்​டிகளில் வெற்றி பெற்​றிருந்த இந்திய அணி, விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற 4-வது போட்​டி​யில் நியூஸிலாந்​திடம் தோல்வி கண்​டது....
 இந்​திய கிரிக்​கெட் அணி வீரர் விராட் கோலியின் இன்​ஸ்​டாகி​ராம் சமூக வலை​தளப் பக்​கம் முடக்​கப்​பட்ட நிலை​யில், அது மீண்​டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்​பட்​டது. இந்​திய கிரிக்​கெட் அணி​யின் நட்​சத்​திர வீர​ராக இருப்​பவர் விராட் கோலி. தற்​போது அவர், சர்​வ​தேச ஒரு நாள் போட்​டி​யில் மட்​டும் விளை​யாடி வரு​கிறார். விராட் கோலிக்கு கோடிக்​கணக்​கான ரசிகர்​கள் உள்​ளனர். அவரது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்தை 27.4 கோடி ரசிகர்​கள் பின் தொடர்கின்றனர். இந்​நிலை​யில் விராட் கோலி​யின் இன்​ஸ்​டாகி​ராம்...
ஆஸ்​திரேலிய ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்னிஸ் போட்​டி​யின் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திச் சுற்​றுக்கு ஸ்பெ​யின் வீரர் கார்​லோஸ் அல்​க​ராஸ், செர்​பிய வீரர் ஜோகோ​விச் ஆகியோர் முன்​னேறி​யுள்​ளனர். அரை இறுதி ஆட்​டத்​தில் ஐந்​தரை மணி நேர போராட்​டத்​துக்​குப் பின்​னர் அல்​க​ராஸ் வெற்றி கண்​டார். ஆண்​டின் முதல் கிராண்ட்​ஸ்​லாம் போட்​டி​யான ஆஸ்திரேலிய ஓபன் டென்​னிஸ் போட்டி மெல்​பர்​னில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற முதலா​வது அரை இறு​திப் போட்​டி​யில் முதல் நிலை வீர​ரான...