மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெளியேற்றியது. இதில் ரோஹித் சர்மாவின் ஆட்டம் முக்கியப் பங்களிப்புச் செய்ததோடு சில சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடர்களில் ரோஹித் சர்மா 7038 ரன்களை எடுத்து விராட் கோலியின் 8,618 ஐபிஎல் ரன்களுக்கு அடுத்ததாக 7000+ ஐபிஎல் ரன்களைக் கடந்த 2-வது வீரராகத் திகழ்கிறார்.
அதே போல் கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடர்களில் 357...
தென் கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர், பந்தய தூரத்தை 8:20.92 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
ஜப்பானின் யுடாரோ நினே (8:24.41) வெள்ளிப் பதக்கமும், கத்தாரின் ஜகாரியா எலாஹ்லாமி (8:27.12) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜன்னிக் சின்னர், மிர்ரா ஆண்ட்ரீவா உள்ளிட்டோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 166-ம் நிலை வீரரான பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கெட்டுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-3, 6-0, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.3-ம்...
‘இன்னும் ஒரு ஆட்டம்தான்; நாம சேர்ந்து கொண்டாடுவோம்’ – ரசிகர்களுக்கு ஆர்சிபி கேப்டன் மெசேஜ்
admin - 0
நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை எளிதில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி உளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்தது.
“பந்துவீச்சை பொறுத்தவரை நாங்கள் எங்கள் திட்டங்களில் தெளிவாக இருந்தோம். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆடுகள சூழலை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். சுயாஷ் சர்மா சிறப்பாக விளாடியாடினார். அவரது லைன் மற்றும்...
ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி.
ஐபிஎல் தொடரில் முலான்பூரில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை...
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் உள்ள குமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று கலப்பு தொடர் ஓட்டத்தில் ரூபால் சவுத்ரி, சந்தோஷ் குமார், விஷால், சுபா வெங்கடேஷன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணி 3:18.12 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தது.
டெகத்லானில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 7,618 புள்ளிகள் குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப்...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜாஸ்மின் பவுலினி, லாரேன்ஸா முசெட்டி ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 8-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரேன்ஸோ முசெட்டி 6-4, 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கொலம்பியாவின் டேனியல் எலாஹி கலனை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
7-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 6-2,...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 19...
ஐபிஎல் 2025 தொடரின் 70வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். மறுமுனையில் ஆடிய மேத்யூ 14 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன்...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப்பின் தகுதி சுற்று 1-ல் விளையாட தகுதி பெற்றது ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 185 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணி 9 பந்துகளை மீதம் வைத்து 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை...










