நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், பட்டம் வென்றது குறித்து ஆர்சிபி வீரர் விராட் கோலி தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார்.
அப்போது அவர் தெரிவித்தது: “இந்த வெற்றி அணிக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ரசிகர்களுக்கும் முக்கியம். இதற்காக 18 வருடங்கள் காத்திருந்தோம். இந்த அணிகக்க எனது இளமை, ஃப்ரைம் ஃபார்ம் மற்றும் அனுபவத்தை தந்துள்ளேன். என்னிடம் உள்ள...
ஐபிஎல் டி 20 தொடரின் 18-வது சீசன் இறுதிப் போட்டியில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் அதிரடி தொடக்கம் கொடுக்க முயன்றார். அர்ஷ்தீப் சிங் வீசிய...
ஜீ தமிழ் சேனலில் ஜூன் 2-ம் தேதி முதல் ‘அயலி’ என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் நாயகியாக தேஜஸ்வினி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, ‘நினைத்தாலே இனிக்கும்’ ஆனந்த் செல்வன் நடிக்கிறார். மேலும் பலர் நடிக்கின்றனர்.
அம்மாவை இழந்த அயலி, தனது சித்தியால் வேலைக்காரி போல் வீட்டில் நடத்தப்படுகிறாள். தனது அம்மா சொன்ன வார்த்தைக்காக குடும்பத்தைப் பெரிதாக மதிக்கிறார். அவர் குடும்பத்துக்குத் தெரியாமல் ரகசிய போலீஸாகவும் இருக்கிறார்.
அவரின் இந்த...
சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள மலேசியாவின் கோ சே ஃபீ, நூர் இஸ்ஸுதீன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 39...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் தகுதி சுற்று-1 ஆட்டத்தில் ஆர்சிபி அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாயினிஸ் 26, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 18, பிரப்சிம்ரன் 18 ரன்கள் சேர்த்தனர்.
ஆர்சிபி அணி சார்பில்...
நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் 4-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவுடன் மோதினார். 4 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் டிபன்ஸில் சிறப்பாக செயல்பட்டார். 74-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து...
பிரதமர் நரேந்திர மோடி பிஹார் மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர், தனது எக்ஸ் வலைதளத்தில், இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை பாட்னா விமான நிலையத்தில் சந்தித்த படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், “பாட்னா விமான நிலையத்தில் இளம் கிரிக்கெட்டர் வைபவ் சூர்யவன்ஷியையும் அவரது குடும்பத்தையும் சந்தித்தேன். அவரது கிரிக்கெட் திறமைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுகிறது. அவரது வருங்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
14...
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் 13:24.77 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு கத்தாரின் முகமது அல்-கார்னி 13:34.47 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது குல்வீர் சிங் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்....
தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் இன்று (31-ம் தேதி) காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து தற்போது மறு தேர்தல் நடைபெறுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் பாலசுப்பிரமணியன் இந்தத் தேர்தலுக்கு பொறுப்பாளராக உள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில் இம்முறை தலைவர் பதவிக்கு சுரேஷ் மனோகர் (மதுரை...
காண்டர்பெரியில் இந்தியா ஏ அணிக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையே நேற்று தொடங்கிய முதல் அன் அஃபிசியல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கருண் நாயர் 186 ரன்கள் குவித்து நாட் அவுட்டாகத் திகழ ‘இந்தியா ஏ’ அணி ஒரே நாளில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 409 ரன்களைக் குவித்தது .
ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தான் இடம்பெற...










