Google search engine
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வியான் முல்டர் முச்சதம் அடித்து சாதனை படைத்தார். ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 88 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு...
 விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 17-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், 109-ம் நிலை வீரரான போலந்தின் கமில் மஜ்கர்சாக்குடன் மோதினார். இதில் கரேன் கச்சனோவ் 6-4, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் கரேன் கச்சனோவ், 5-ம் நிலை வீரரான...
உலக குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி, அமெரிக்காவின் யோஸ்லின் பெரெஸை எதிர்த்து விளையாடினார். இதில் தனது அதிரடியான தாக்குதல்களால் யோஸ்லின் பெரேஸை நிலைகுலையச் செய்தார் சாக்‌ஷி. இதனால் 3 நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி சாக்‌ஷி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப்...
அமெரிக்காவின் யுஜின் நகரில் ப்ரீஃபோன்டைன் கிளாசிக் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கென்யாவின் பீட்ரைஸ் பந்தய தூரத்தை 13 நிமிடங்கள் 58.06 விநாடிகளில் கடந்து உலக சாதனை யுடன் முதலிடம் பிடித்து அசத்தினார். இதற்கு முன்னர் எத்தியோப்பியன் குடாஃப் செகே 14 நிமிடங்கள் 00.21 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் பீட்ரைஸ்.
 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை ஐசிஎஃப் 25-21, 25-9, 25-14 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை ஐஓபி 25-22, 25-22, 25-21 என்ற செட் கணக்கில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி அணியை தோற்கடித்து பட்டம் வென்றது. பட்டம் வென்ற அணிகளுக்கு கோப்பையுடன்...
2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார். அதேவேளையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்தது. ஜேமி ஸ்மித் 184, ஹாரி புரூக் 158 ரன்கள்...
கிரிக்கெட் உலகில் ‘யார் சிறந்த கேப்டன்?’ என்ற விவாதம் எப்போதும் இருப்பது உண்டு. அதில் முன்னவர்களாக இருப்பவர்களில் ஒருவர் தோனி. புள்ளி விவரங்களை எல்லாம் வைத்து பார்த்தால் தோனியை விட பெஸ்ட் கேப்டன்கள் இங்கே இருக்கலாம். ஆனால், அவர்களை காட்டிலும் சிறந்தவர் என தோனியை டேக் செய்யலாம். இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டில் சிறு நகரத்தை சேர்ந்தவர்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர் தோனி. கிரிக்கெட் கனவுகளுடன் ராஞ்சியில் இருந்து...
இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து அணி 84 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் ஆகியோரது அபார​மான ஆட்​டத்​தால் 400 ரன்​களை கடந்​தது. 3ஆவது நாள் முடிவில் இந்​தி​ய அணி தற்போது 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது. பர்​மிங்​காமில் உள்ள எட்​ஜ்​பாஸ்​டன் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 587 ரன்​கள் குவித்து...
71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டங்களில் சென்னை எஸ்டிஏடி 25-16, 25-12, 25-14 என்ற செட் கணக்கில் மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் அணியையும், சென்னை ஐசிஎஃப் 25-11, 25-11, 25-18 என்ற செட் கணக்கில் கிறிஸ்டியன் ஸ்போர்ட்ஸ் ஃபெல்லோஷிப் அணியையும் வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு முன்னேறின. இன்று நடைபெறும் அரை இறுதியில்...
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பெங்களூரு வில் உள்ள ஸ்ரீ கண்டிரவா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய தடகள சங்கம் மற்றும் உலக தடகள சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த தொடருக்கு உலக தடகள சங்கம் ‘ஏ’ பிரிவு அந்தஸ்து வழங்கியுள்ளது. நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின்...