244 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி | ENG vs IND 2-வது டெஸ்ட்

0
52

இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து அணி 84 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் ஆகியோரது அபார​மான ஆட்​டத்​தால் 400 ரன்​களை கடந்​தது. 3ஆவது நாள் முடிவில் இந்​தி​ய அணி தற்போது 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

பர்​மிங்​காமில் உள்ள எட்​ஜ்​பாஸ்​டன் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 587 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஷுப்​மன் கில் 269 ரன்​கள் விளாசினர். இதையடுத்து விளை​யாடிய இங்​கிலாந்து அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 20 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 77 ரன்​கள் எடுத்​தது.

ஜோ ரூட் 18, ஹாரி புரூக் 30 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை இங்​கிலாந்து அணி தொடர்ந்து விளை​யாடியது. ஜோ ரூட் 22 ரன்​களி​லும், கேப்​டன் பென் ஸ்டோக்​ஸ் ரன் ஏதும் எடுக்​காமலும் முகமது சிராஜின் அடுத்​தடுத்த பந்​துகளில் ஆட்​ட​மிழந்​தனர். 84 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் களமிறங்​கிய ஜேமி ஸ்மித், ஹாரி புரூக்​குடன் இணைந்து தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்டு இந்​திய பந்து வீச்​சாளர்​களுக்கு அழுத்​தம் கொடுத்​தார்.

பிரசித் கிருஷ்ணா வீசிய 32-வது ஓவரில் ஜேமி ஸ்மித் 4 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸர் விளாசி மிரட்​டி​னார். மட்​டையை சுழற்​றிய ஜேமி ஸ்மித் 80 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 14 பவுண்​டரி​களு​டன் தனது 2-வது சதத்தை விளாசி​னார். இதன் மூலம் மதிய உணவு இடைவேளைக்கு முன்​ன​தாக ஒரே செஷனில் சதம் விளாசிய முதல் இங்​கிலாந்து பேட்​ஸ்​மேன் என்ற சாதனையை படைத்​தார் ஜேமி ஸ்மித். அவரது அதிரடி​யால் இங்​கிலாந்து அணி மதிய உணவு இடைவேளை​யில் 47 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 249 ரன்​கள் எடுத்​தது. ஜேமி ஸ்மித் 102, ஹாரி புரூக் 91 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். இந்த செஷனில் இங்​கிலாந்து அணி 27 ஓவர்​களில் 172 ரன்​களை வேட்​டை​யாடி இருந்​தது.

இந்​திய அணி ஷார்ட் பால் வியூ​கத்தை கையாண்ட நிலை​யில் இங்​கிலாந்து அணி​யின் பேட்​ஸ்​மேன்​கள் அதை ரன் வேட்​டை​யாக மாற்றி அதிர்ச்சி கொடுத்​தனர். மதிய உணவு இடைவேளை நெருங்​கிய நிலை​யில் சுழற்​பந்து வீச்சை இந்​திய அணி கையில் எடுத்​தது. ஆனாலும் இங்​கிலாந்து அணி​யின் ரன் வேட்​டையை தடுக்க முடிய​வில்​லை.

மதிய உணவு இடைவேளைக்கு பின்​னர் ஆட்​டம் தொடர்ந்த நிலை​யில் சீராக ரன்​கள் சேர்த்த ஹாரி புரூக் 137 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 12 பவுண்​டரி​களு​டன் தனது 9-வது சதத்தை நிறைவு செய்​தார். இந்த ஜோடியை பிரிக்க முடி​யாமல் இந்​திய பந்து வீச்​சாளர்​கள் தடு​மாறினர். தேனீர் இடைவேளை​யில் இங்​கிலாந்து அணி 75 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 355 ரன்​கள் குவித்​திருந்​ததது. 2-வது செஷனில் மட்​டும் இங்​கிலாந்து அணி 28 ஓவர்​களில் 106 ரன்​கள் சேர்த்​தது. ஜேமி ஸ்மித் 157 ரன்​களு​ட​னும், ஹாரி புரூக் 140 ரன்​களு​ட​னும் களத்​தில் இருந்​தனர்.

தேனீர் இடைவேளைக்கு பின்னர் இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 82.1-வது ஓவரில் 387 ரன்களை கடந்து பாலோ ஆனை தவிர்த்தது. சிறப்பாக விளையாடி வந்த ஹாரி புரூக் 234 பந்துகளில், ஒரு சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 158 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் போல்டானார். 6-வது விக்கெட்டுக்கு ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் 302 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து அணியின் கடைசி மூன்று விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றினார். கார்ஸ், ஜாஸ் டங், ஷோயப் பஷீர் என மூவரையும் அவர் டக் அவுட் செய்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜேமி ஸ்மித் 184 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகியிருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 28 ரன்கள் எடுத்தார். அவருடைய விக்கெட்டை ஜோஷ் டங் வீழ்த்தினார். கே.எல்.ராகுல் 28 ரன்களுடனும் கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மூன்றாவது நாள் முடிவில் 13 ஓவர்களில் இந்திய அணி 64 ரன்கள் எடுத்துள்ளது. இதன்படி தற்போது இந்திய அணி 244 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here