குஜராத் டைட்டன்ஸ் பலமே அணியின் தெளிவான கட்டமைப்புதான். மற்ற அணிகளைப் போல ஏலத்தில் பெரிய பெயர்களைத் தேடி ஓடாமல், ஏற்கெனவே உள்ள தங்களின் வலுவான அடித்தளத்தை நம்பி அவர்கள் செயல்படுகிறார்கள். ஏலத்துக்கு முன்பே 20 வீரர்களைத் தக்கவைத்தது என்பது அவர்களின் திட்டமிடலுக்கு சிறந்த சான்று. மீதமுள்ள ஐந்து இடங்களை நிரப்புவதற்கு மட்டுமே அவர்கள் ஏலத்தைப் பயன்படுத்தினர்.
இதில், ஜேசன் ஹோல்டர் அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டராக அணியின் சமநிலையை அதிகரிக்கிறார். டாம்...
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில், இம்பாக்ட் பிளேயரை அணியில் 12-வது வீரராக பயன்படுத்துவது குறித்து தனது கருத்தை டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பகிர்ந்துள்ளார்.
ஏற்கெனவே இம்பாக்ட் பிளேயர் விதி இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சியை பாதிக்க செய்வதாக முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். பேட்டிங், பவுலிங் என சம அளவிலான ஆல்ரவுண்டர்களை மட்டுமே அணியில் தேர்வு செய்ய...
ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகலமாக தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் சிஎஸ்கே அணி குறித்த ஓர் பார்வை...
5 முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணி கடந்த 2008-ல் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து 2023-ம் ஆண்டு சீசன் வரை முதல் நான்கு இடங்களுக்கு வெளியே சென்றதில்லை. ஆனால், கடந்த 2 சீசன்களாக அந்த அணியின் செயல் திறன் சராசரிக்கும் கீழே சென்றுவிட்டது. 2024-ல்...
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரீயூனியன் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மைதானத்தில் ஏராளமான சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.
வரும் 28-ம் தேதி முதல் சிஎஸ்கே உள்ளிட்ட10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 2026 சீசன் போட்டி தொடங்கவுள்ளது. இதையொட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ‘ரோர் 26’ என்ற சிஎஸ்கே ரீயூனியன் நிகழ்ச்சிக்கு சிஎஸ்கே நிர்வாகம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்...
வரும் ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்காக ரிஷப் பந்த் 3-வது வீரராக களமிறங்கப் போவதாக தெரியவந்துள்ளது. 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டிக்காக எல்எஸ்ஜி அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2025-ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் எல்எஸ்ஜி அணிக்காக ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்த் எடுக்கப்பட்டிருந்தார்.
இதனால் அவர் மீது ஏராளமான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது....
2016 டி20 உலகக் கோப்பையில் இதே தினத்தில் அன்று பெங்களூருவில் நடந்த அதிசயம் நம் நெஞ்சங்களில் ஆழமாக பதிந்திருக்கும். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெற்ற அந்த விறுவிறுப்பான டி20 ஆட்டம் கடைசியில் வங்கதேச ரசிகர்களின் வங்கதேச வீரர்களின் அழுகையாக மாறியது தெரியுமா? அன்று தோனி படை, குறிப்பாக ஹர்திக் பாண்டியா வீசிய அந்தக் கடைசி ஓவரை மறக்கவும் முடியுமோ!!
கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பல போட்டிகள் இருந்தாலும்,...
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டி – 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
admin - 0
நியூஸிலாந்துக்கு எதிரான 4-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
3 போட்டிகள் முடிந்த நிலையில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று 4-வது...
டி20 கிரிக்கெட் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் (ஆர்சிபி) விராட் கோலி விரைவில் 14 ஆயிரம் ரன்களை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக பெங்களூரு அணி கோப்பையை வென்றிருந்தது.
அவர் இதுவரை ஐபிஎல் போட்டியில் 267 ஆட்டங்களில் பங்கேற்று 8,661 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 63...
நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் 31-ம் தேதி கவுதமாலா அணிக்கு எதிராக நட்புரீதியிலான போட்டியில் விளையாட உள்ளது.
இந்த ஆட்டம் பியூனஸ் அயர்ஸில் உள்ள லா பொம்போனேராவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி சேர்க்கப்பட்டுள்ளார். வரும் 27-ம் தேதி அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகள் நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாட இருந்தன.
ஆனால் மத்திய கிழக்கு...
சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐஓபி - டி.ஜி.வைஷ்ணவா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஐஓபி 25-23, 25-20, 25-23 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ஐசிஎஃப் - அக்னி பிரண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் ஐசிஎஃப் 25-23, 25-20, 25-15 என்ற செட் கணக்கில் வெற்றி...










