இந்​தி​ய மகளிர்​ அணி கோல்​ மழை: தென்​ ஆப்​பிரிக்​காவை 6-1 என பந்​தாடியது | Hockey WC

0
17

உலகக்​ கோப்​பை ஹாக்​கி தொடர்​ நெதர்​லாந்​து மற்​றும்​ பெல்​ஜி​யத்​தில்​ நடை​பெற்​று வரு​கிறது. இதில்​ மகளிர்​ பிரிவில்​ இந்​தி​ய அணி நேற்​று தென்​ ஆப்​பிரிக்​காவை எதிர்த்​து விளை​யாடியது. இந்​த மோதலில்​ இந்​தி​ய அணி 6-1 என்​ற கோல்​ கணக்கில்​ வெற்​றி பெற்​றது.

இந்​தி​ய அணி தரப்​பில்​ சுனேலி​தா டோப்​போ, நவ்​நீத்​ கவுர்​, சுசீலா சானு, தீபி​கா, லால்​ரெம்​சி​யாமி, சகாஷி ராணி ஆகியோர்​ தலா ஒரு கோல்​ அடித்​தனர்​. நடப்​பு தொடரில்​ இந்​தி​ய மகளிர்​ அணிக்​கு இது முதல்​ வெற்​றி​யாக அமைந்​தது.

‘டி’ பிரி​வில்​ இடம்​ பெற்​றுள்​ள இந்​தி​ய அணி தனது முதல்​ ஆட்​டத்​தில்​ 2-2 என்​ற கோல்​ கணக்​கில்​ சீனாவுடன் டிரா செய்​திருந்​தது. இந்​தி​ய மகளிர்​ அணி தனது கடைசி லீக்​ ஆட்​டத்​தில்​ நாளை (20-ம்​ தேதி) இங்​கிலாந்​துடன்​ மோதுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here