Google search engine
இங்​கிலாந்​து, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதும் 5-வது மற்​றும் கடைசி கிரிக்​கெட் டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்​தில் தொடங்கியது. 4-வது போட்​டி​யில் பெற்ற வெற்​றியைத் தொடரும் உற்​சாகத்​தில் இங்​கிலாந்து இதில் களமிறங்கியது. நடப்பு ஆஷஸ் தொடரின் முதல் 3 போட்​டிகளில் ஆஸ்​திரேலியா வெற்றி பெற்று தொடரைக் கைப்​பற்​றி​விட்​டது. இந்​நிலை​யில், மெல்​பர்​னில் நடந்த 4-வது டெஸ்ட் போட்​டி​யில் இங்​கிலாந்து வெற்றி பெற்​றது. மெல்​பர்​னில் நடந்த முந்​தைய டெஸ்ட் போட்டி 2 நாட்​களி​லேயே...
இங்​கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்​டி​யில் 14 ஆயிரம் ரன்​களை விரை​வில் எட்​ட​வுள்​ளார். சிட்​னி​யில் நடை​பெற்று வரும் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான 5-வது டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்ஸ் ஜோ ரூட் 72 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழக்​காமல் உள்​ளார். இதன்​ மூலம் அவர் டெஸ்ட் போட்​டிகளில் 13,849 ரன்​களை குவித்​துள்​ளார். அவர் 14 ஆயிரம் ரன்​களை எட்​டு​வதற்கு இன்​னும் 151 ரன்​கள் மட்​டுமே தேவை. இந்​தப் போட்​டி​யில் மேலும் ஓர் இன்​னிங்ஸ்...
 2036-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்​டியை நடத்த இந்தியா முழு பலத்​துடன் தயா​ராகி வரு​கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரி​வித்​துள்​ளார். உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் 72-வது தேசிய வாலி​பால் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. போட்​டியை பிரதமர் மோடி, காணொலி வாயி​லாக தொடங்​கி​ வைத்​தார். பின்​னர் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின் வளர்ச்​சிப் பயணத்​துக்​கும் வாலி​பால் போட்​டிக்கும் இடையே பல தொடர்புகள் உள்​ளன. வாலி​பால் என்​பது ஒரு...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக இருப்பார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரும் பிப்ரவரி 7-ம் முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. வங்கதேச அணி விவரம்: லிட்டன் தாஸ் (கேப்டன்), டான்சித் ஹாசன், பர்வேஸ் ஹொசைன் எமோன்,...
கொல்கத்தா நைட் ரைடர்​ஸ்​ (கேகேஆர்) ஐபிஎல் அணியி​லிருந்து முஸ்​டாபிஸுர் நீக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, ஐசிசி உலகக் கோப்பை போட்​டி​யில் வங்​கதேசம் பங்​கேற்​கும் போட்​டிகளை இந்​தி​யா​விலிருந்து இலங்​கைக்கு மாற்​ற வேண்​டும் என்று வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் ​(பிசிபி) கோரிக்கை விடுத்துள்ளது. வங்​கதேசத்​தில் இந்​துக்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு வருவதால் கொல்​கத்தா அணி​யில் இடம்​பெற்​றிருந்த முஸ்டாபிஸுரை நீக்​கவேண்​டும் என்று பாஜக, சிவசே​னா, இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்​தனர். இவரை கடந்த மாதம் நடந்த ஐபிஎல் மினி ஏலத்​தில் ரூ.9.20...
இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பு வந்தால் அதை ஏற்கமாட்டேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச ஒருநாள் போட்டி, டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கடந்த ஆண்டில் மோசமாக விளையாடி தோல்வி கண்டது. இதையடுத்து இந்திய அணிக்கு டெஸ்ட் பயிற்சியாளர் பதவிக்கு தனியாக ஒருவரை நியமிக்க இந்திய கிரிக்கெட்...
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 8 நிமிடங்களில் முடிந்துவிட்டது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று நடைபெற்றது. இந்த விற்பனை தொடங்கிய 8 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து விட்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
2027-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டிக்​குப் பின்​னர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிகளின் எதிர்​காலம் எப்​படி இருக்​கும் என்று தெரிய​வில்லை என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் ரவிச்​சந்​திரன் அஸ்​வின் கவலை தெரிவித்துள்​ளார். இதுதொடர்​பாக இந்தி யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்​டி​யில் ரவிச்​சந்​திரன் அஸ்​வின் கூறிய​தாவது: "தற்​போது நாட்​டின் பல நகரங்​களில் விஜய் ஹசாரே கோப்​பைக்​கான கிரிக்​கெட் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் ரோஹித் சர்​மா, விராட் கோலி...
வரும் 4-ம் தேதி சிட்னியில் தொடங்கும் ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டிதான் தனது கடைசி போட்டி என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார். 39 வயதான உஸ்மான் கவாஜா, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தது. அப்போது அவருக்கு வயது 4. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட கவாஜா, ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி, தனது அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி தேசிய அணியில்...
2026-ம் ஆண்​டில் 3 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டிகளு​டன் பல்​வேறு கிரிக்​கெட் தொடர்​கள் நடைபெறவுள்ளன. இதனால் கிரிக்​கெட் ரசிகர்​கள் உற்​சாகம் அடைந்​துள்​ளனர். புத்​தாண்டு பிறந்​துள்ள நிலை​யில் இந்த ஆண்டு முழு​வதும் இந்தியா உட்பட பல்​வேறு நாடு​களில் இந்​தியா பங்​கேற்​கும் கிரிக்கெட் போட்​டிகள் நடை​பெறவுள்​ளன. ஆண்​டின் தொடக்கத்திலேயே ஜனவரி 9-ம் தேதி முதல் மகளிருக்​கான பிரீமியர் லீக் கிரிக்​கெட் (டபிள்​யூபிஎல்) இந்​தி​யா​வில் நடைபெறவுள்​ளது. இதைத் தொடர்ந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை...