ஹாக்கி இந்தியா லீக் தொடரில் நேற்று ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் - தமிழ்நாடு டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் கேப்டன் ஜக்ராஜ் சிங் 3 கோல்கள் (11, 43 மற்றும் 45-வது நிமிடங்கள் அடித்து அசத்தினார். சுக்ஜித்சிங் (18-வது நிமிடம்), அபிஷேக் (55- வது நிமிடம்)...
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வரும் 18-ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் தரவரிசை நேற்று அறிவிக்கப்பட்டது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. 2 முறை சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னருக்கு 2-வது இடமும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவுக்கு 3-வது இடமும், 10 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு...
ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் சீனியர் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.
வதோதராவில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்களை விளாசியதன் மூலம் 37 வயதான விராட் கோலி, தரவரிசையில் 785 புள்ளிகளுடன் ஓர் இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.
கடைசியாக விராட் கோலி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலையில் முதலிடத்தில் இருந்தார்....
இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 32-வது வயதான இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், சகநாட்டைச் சேர்ந்த எம்.தருணை எதிர்த்து விளையாடினார்.
இதில் ஸ்ரீகாந்த் 15-21, 21-6, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அதேவேளையில் அனுபவம் வாய்ந்த ஹெச்.எஸ்.பிரனாய், கடந்த ஆண்டு 2-வது இடம்...
ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் இன்று (15-ம் தேதி) தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 6-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா யு-19 அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இதே பிரிவில் அமெரிக்கா, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. 5 முறை சாம்பியனான இந்தியா யு-19 அணி...
பரிதாபம்… ஐசிசி – ஆஸி. கூட்டணி ஒழித்த 23 வயது மே.இ.தீவுகள் பவுலர் ஜெர்மைன் லாசன் தெரியுமா?
admin - 0
ஐசிசி பந்து வீச்சு ஆக்ஷன் அடிப்படையில் ஒழித்த பவுலர்களில் மே.இ.தீவுகளின் ஜெர்மைன் லாசன் உண்மையில் பரிதாபத்துக்குரியவர். பாகிஸ்தானின் சயீத் அஜ்மலை அனைத்து அணி முன்னணி வீரர்களும் ஆடத் திணறிக்கொண்டிருந்த போது அவர் ஆக்ஷன் மீது ஐயத்தைக் கிளப்பி அவரை சோதனைக்கூடத்திற்கு அனுப்பி, அவர் மீண்டும் ஆக்ஷனை சரி செய்த பிறகு வீசும்போது ஒன்றுமில்லாமல் போனார். அதே கதைதான் ஜெர்மைன் லாசனுக்கும் நடந்தது. 1982ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதியான...
கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் போது இறங்க வேண்டிய தேவை இருந்தும் அவர் இறங்கினால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது எனும்போதும் காயத்தினால் ஷுப்மன் கில் இறங்க மறுத்தார், ஆனால் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்த வாஷிங்டன் சுந்தரை இறக்கி அவரது டி20 உலகக்கோப்பை வாய்ப்பையே இப்போது கேள்விக்குட்படுத்தியுள்ளனர் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் காட்டமாக சாடியுள்ளார்.
வதோதராவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 301 ரன்கள்...
2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட இந்தியாவுக்குப் பயணம் செய்யப் போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் வங்கதேச கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்து விவாதிக்க, வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் காணொலிக்...
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடருடன் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி அறிவித்து உள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டி, ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடருடன் அனைத்து...
இந்தியா- நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும்.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அந்த ஆட்டத்தில்...
